Posts

காதல் பிதற்றல் -12 உன்னருகே

மெழுகாய் உருக செய்வது தீ மட்டுமில்லை உந்தன் அருகாமையும் கூட தான்.     - பிரவீணா தங்கராஜ் .

புரிதல்

புரிதலில் இருப்பவருக்கு மட்டுமே புரியும் பார்வையின் மொழி .            - பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 11 யார் சொன்னது

Image
யார் சொன்னது மங்கையின் மான்விழிக்கு மட்டுமே மயக்கும் சக்தி உண்டென்று . உன் அடர்ந்த புருவம் ஒன்றே என் உறக்கத்தை பறித்து செல்ல போதுமானதென்று அறிவாயா ?!          *** யார் சொன்னது பெண்மைக்கு மென்மை மட்டுமே பிடிக்குமென்று உன் வன்கரங்களில் தாமரை முகத்தை புதைத்திடவே பிடிக்குமென்பதை .          *** யார் சொன்னது நீண்ட இடை தொடும் கூந்தலே வசீகரிக்குமென்று , உன் முன் நெற்றியில் வருடும் அடர்ந்த கேசம் போதும்  என் மனதை பறித்து செல்ல ...         ***               - பிரவீணா தங்கராஜ் .     

சூரியன் கடலில் கலத்தல்

சூரியன் கடலில் கலத்தல் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

தேடுதல்

நட்சத்திர தோட்டத்தில் ஒற்றை பூவாக நிலவு . நட்சத்திர கேலியில் , எற்செய்வானை தேடி தேடியே  , தேய்ந்திட்ட திங்கள் . ஆதவனின் நீண்ட கரத்தால் , தன்னொளி இழந்த மதியையும்  . மதியின் வருகையால் ஆழியில் புதைந்திட்ட சூரியனையும்  , வானமே பார்த்து கொண்டு அமைதி கொண்டதன் நோக்கம் என்னவோ...? வானமே உரைத்திட்டு இருக்கலாம் தான் - அவனும் நிலவை காதலிப்பதை யார் அறிவார்களோ... ?!                         -- பிரவீணா தங்கராஜ் . 

மோனாலிசா ஓவியமும்

மோனாலிசா ஓவியமும் , ரவிவர்மன் ஓவியமும் , தோற்றுத்தான் போனது . செல்ல மகளின் சுவற்று கிறுக்கலில் ...               -- பிரவீணா தங்கராஜ் . 

பிறக்கும்

குழந்தைப் பேறு கிட்டாத போது தான். இறுகி கட்டிய, பாவாடை மீது கூட சந்தேகம் பிறந்தது .      -- பிரவீணா தங்கராஜ் .  

இன்னுமொரு தாயாக என் தங்கை

Image
அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே ஆயிரம் கலக்கம் மனதில் . இன்று , என்ன வம்பு செய்திருப்பானோ .?! நேற்றே  , தங்கை கூறிவிட்டாள் . இனி , பொறுத்து போக மாட்டேன் . நானே கன்னத்தில் அறைந்து விடுவேனென . இதோ ! வீடு வந்துவிட்டது . தங்கை அருகே அவன் , முகம் முழுதும் மிட்டாய் சுவடோடு , டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சியை கண்டு கொண்டு , நித்தம் நுறு குறும்பு செய்யும் என் மகன் . அவனை முத்தமிட்டதால் ... பால்  பற்களில்   கடி வாங்கி , கன்னத்தை பிடித்தபடி , கல்லுரி பறவை என் தங்கை . எப்பொழுதும் போல் நமுட்டு சிரிப்புடன் நான் .            -- பிரவீணா தங்கராஜ் . 

கும்பகோண தீ விபத்து

அழுதால் கூட அழகாய் இருக்கும் மழலை பிஞ்சினை கதற வைத்தாய் ! கரிய நிறமாக்கினாய்...  ஒன்றா ...இரண்டா ...  மரண ஓலைகள் , உலுக்கியதே நெஞ்சத்தின் இதய அலைகள் . அடுக்குமோ உனக்கு ?!  கதறலில் துடித்ததோ ,  பெற்ற மனம் . இதயத்தில் கடுகளவு அன்பு இல்லாததோ...!  உன் தீ மனம் . உன் வலிமையை சோதிக்க ஏனோ மொட்டை அல்லவா  மடிய வைத்தாய் ! குழந்தையை கொன்ற  பாவி உனக்கு  தீ என்ற எழுத்தில் கீரிடமோ ..?!  நீ அல்ல ...   உனக்கு தாய்மை அல்ல ...                       -- பிரவீணா தங்கராஜ் .

சுனாமி

அகிலத்தின் முப்பகுதி போதவில்லையோ ?   நிலப்பரப்பை விழுங்கினாய் ...      நீ என்ன ஊதாரியா ...? கரையை தொட்டு பார்த்தவளுக்கு    கரையேற கொண்ட முயற்சியோ ?       இந்த உயிர் பொருள் பலி . (சு)ற்றுப்புற மக்களை    நா(னா)சமாகும்      (மி)ருகம் என்பதன் சுருக்கமா நீ... பேய் கொண்ட பிள்ளை பாசம் ,    வாரி அணைத்து பிணமாக்கினாய் ...! உடன் பிறா சகோதர , சகோதரிகள்   என்ன குற்றம் செய்தார்களோ ?      அடித்து இழுத்து சென்றுவிட்டாய் ...! புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு கூட ,   மண் தோண்டவில்லை . மனித பிணங்களை புதைக்க ,   ஆழ் குழி தோண்டலா ...! பேய் கொண்ட பாசம்   வேண்டாமடி சுனாமியே ...!                    -- பிரவீணா தங்கராஜ் .