Posts

தமிழ் மகளே ...!

தமிழ் மகளே ... உனக்கு மரபு கவிதையெனும் சேலைக் கட்டவே துடிக்கின்றேன் முடியவில்லை 'சல்வார்' , 'சோளி' போல புதுக்கவிதை , வசனக்கவிதையே அணிவிக்கின்றேன் . ஹைக்கூ-யெனும் அணிகலன்களையும் மாட்டிவிடுகின்றேன் இதுவும் உனக்கு அழகு சேர்க்கத் தான் செய்கின்றது . எதுகை, மோனை, இயைபுவென  சில நேரத்தில் அணிகலன்களாக மெருகேற்ற  அணிவித்தாலும் மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர், கனிச்சீரென அணிகலன் புகட்டவே ஆசையெனக்கு என்றாவது ஒருநாள் உனக்கு மரபு கவிதை அணிவித்து வெண்பா அணிகலன் பூட்டி அழகுப் பார்ப்பேன் என் தமிழ் மகளே... என்னுள் ஞானவொளி ஏற்று .                  -- பிரவீணா தங்கராஜ் .

* தன்னம்பிக்கை*

தன்நம்பிக்கை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

சகிப்பினை கையாளு

மூக்கினை பொத்தி செல்லாதே ... பாதணி படாது நடக்காதே ... உன்னை போல் ஒருவன் தான் ஆற்றில் குதிப்பதுப் போல் கழிவில் இறங்கி துப்பரவு செய்கின்றான் அந்த கணத்தில் மட்டுமாவது அவனையும் மதித்து சகிப்பினை கையாளு...!              -- பிரவீணா தங்கராஜ் .

என்ன சொல்லி விட்டேன்...

வெண்மேகத்தின் சாரல் நீ.... வானவில்லின் குடையாக நான் சோலையில் பூத்திடும் மலர் வாசம் நீ ... மாலையில் பருகிடும் பனித்துளி நான் என்று தானே இருந்தோம் எதனால் இந்த சினமே ...?! கமலினி முகம் கவலை கொண்டதேனோ .... என்ன சொல்லி விட்டேன் . நம் காதலில் பெரும் சதவீதம் என் அன்பு என்றேன் வேறொன்றுமில்லையே...                           -- பிரவீணா தங்கராஜ் .

நடைபாதை கடைகள்

கூவி கூவி விற்றாலும் கூறுக் கட்டி வைத்தாலும் இன்று பறித்த காய்கனியை வாங்க  மறுப்பதேனோ ...? நாட்கள் வாரங்களாகின குளிரூட்டப்பட்ட அறையில் வளமாக அமர்ந்துக் கொண்டு தோள்பைக்கும் சேர்த்தே காசை வசூலிக்கும் இடத்தில் தான் வாங்கத் தோன்றுமோ ? ஏன் விற்பவனின் கசங்கிய ஆடையும் அழுக்குப்  படிந்த முகமும் , குளிர்அறையில் இருப்பவனுக்கு இல்லையென்றா...?! இரண்டில் நமக்கு ஆரோக்கியம் எதுவோ ? யாமறிவேன் யாருமறிவனரோ பரம்பொருளே !           --பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல்-16 இரசிக்க செல்கின்றது

ஆயிரம் சண்டைகள் நமக்குள் வந்து செல்லும் போதும் கூட சண்டையின் இடைவெளியில் உன் விழியை சந்திக்கும் போது சில நொடிகள் கண்களை  இரசிக்க தான் செல்கின்றது என் மனம்     -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல்-15 ஹைக்கூ நீயடா

ஒரு வாக்கியம் பேசி முடிக்கும் இடத்தில் ஒரு வார்த்தையில் பேசி செல்கின்றாய் ... அப்பொழுதுதான் உணர்ந்தேன் ஹைக்கூ-வும் சிறந்ததென்று .        - பிரவீணா தங்கராஜ் .

ரொட்டித்துண்டு

அடுமனை அருகே நிச்சயம் உணவிருக்கும் ஈன்ற குழந்தைக்கு உணவைத் தேடி ஓடித்  தான் புறப்பட்டேன்  கண்டேன்  கவலையுற்றேன் ஒரு சிப்பம் அடங்கிய ரொட்டித்துண்டுகள் இருக்கவே  செய்தன ... கூடவே , பிறந்த சில மணித்துளிகளான குழந்தையும் தான் . யாரோ யாருடனோ கூடலில் பெற்ற குழந்தை தான் அவ்வழி சென்றவர்கள் எல்லோரும் 'எந்த நாய் ஜென்மங்கள் இப்படி பெற்றெடுத்து குப்பையில் போட்டனர்களோ ' வென சொல்லாமல் இல்லை சிறிது நாழிகையில் இறந்த சிசுவை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர் கண்ணில் கண்ணீரோடு சிப்பத்தை கவ்வியபடி நான் ஈன்ற என் ஐந்து செல்வத்தின் முன் போட்டேன் சண்டை போட்டாலும் பகிர்ந்தே உண்டு முடித்தனர் எனக்கும் உணவு இருக்கத்தான் செய்தன ஏதோவொன்று சாப்பிட தடுத்தது மனித குழந்தை தான் - அது ஒன்றும் நான் பெற்று எடுத்த நாய்குட்டிகள் அல்ல .. இருப்பினும் ஏனோ ... ஏதோ... ரொட்டித்துண்டினை சாப்பிட தடுத்தது .                     -- பிரவீணா தங்கராஜ் .

நான் பெண்

மென்சாரால் மேகத்தினுள் இறங்கி மென்பாதத்தில் தேடி ஓடி வந்திட , அதற்கு கண்ணாமூச்சி காட்டியப்படி அரசுப் பயணியர் நிழற்குடையில் ஒதுங்கிட, என்னை போலவே சிலர் மென்சாரலுக்கு கண்டு உவகையோடு உள்வந்தனர். சொட்டு சொட்டாய் சொட்டுகையிலே - என் சொர்க்கமாக கண்டுலயித்தேன்- எங்கிருந்தோ துர்நாற்றம் புகை வந்துவீச திரும்பினேன் துருவனோருவன் புகைத்துக் கொண்டுயிருந்தான் மழையென்றால் என்போன்றோர் இரசிக்க மண்போன்றோர் புகைப்பார் போல நமக்கேன் வம்பென பேருந்தினை எதிர்நோக்கினேன் நங்கையொருத்தி வயிற்றில் சிசுவோடு இரும்பிட இம்முறை அமைதிகாக்க மனமொப்பவில்லை... இதே ஆணாக பிறந்திருந்தால் தவறை எடுத்துரைபேனோ ? நான் பெண்ணாக பிறந்துவிட்டேனே ...😔 நானெனும் உள்மனம் சினத்தைமட்டும் தகிக்க கனல்களை கண்களில் கொண்டு வந்தேன் -என் கண்களில் அவன் தவறை கண்டு உணர்ந்தானோ ?! அவனே ' சாரி சிஸ்டர் ' என்று ஆங்கிலத்தில் நயமாக சொல்லி நகர்ந்தே போய்த்தொலைந்தான் நானும் உணர்ந்தேன் அப்பொழுதுதான் ஆணின் பேச்சில் புரியவைக்கும் ஒன்றை பெண்ணின் பார்வை கூட உணர்ந்திட இயலுமென்று இம்முறை நிமிர்ந்த நடையுடன் கூறிக்கொன்டேன் என் மனதிடம்-ந

கவிதையே

நான் கவிதைகளை அள்ளி பருகிக்கொண்டு இருக்கின்றேன் குறையவேயில்லை தமிழென்ற அட்சயபாத்திரம் -- பிரவீணா தங்கராஜ்.