Posts

காதல் பிதற்றல் - 20

என்னை மயக்க நீ மாயங்கள் செய்ய தேவையில்லை நீ நீயாகயிருந்தாலே மயங்கி தான் போகின்றேன் .                   -- பிரவீணா தங்கராஜ் . 

வறுமை

வறுமை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

நீர்க்குமிழ்கள்

Image
வாழ்ககையொருநொடியென்றாலும் பல வர்ணத்தை ஏற்படுத்திவிட்டே செல்கின்றன குழந்தைகள் ஊதும் நீர்க்குமிழ்கள்.                     -- பிரவீணா தங்கராஜ் .

என்னவனின் செய்கையே..!

மார்கழிமாதம் அதிகாலையில் கோலமிட்டதால் மங்கையின் முகத்தில் கூடுதலழகுயென  மாமியார் யுரைத்திட , நங்கைக்கு  ஒப்பனையே சிறந்ததென நகைப்பிற்கு காரணம் அழகுநிலையமென நாத்தனார் யுரைத்திட , திட்டாத தாயக வலம் வந்ததிற்கு தியானமே சிறந்ததென சொல்லி கொடுத்த திருமகள் யுரைத்திட , முகமலர்ச்சிக்கு அவர்களுக்கு தெரிந்ததை சொல்லி சென்றிட , கரம் பற்றிய கணவனும் காரணம் அறியாதே சென்றிட , கவிதையிடம் சொன்னேன் . அதிகாலை எழிந்திடுமுன் அறையுறக்கத்தில் எந்தன் முகத்தில் படர்ந்த ஒற்றை முடிக்கற்றை ஒதுக்கி எந்தன் பிறை நெற்றியில் இதழ்ப்பதித்து மீண்டும் துயில் கொண்ட என்னவனின் செய்கையே..! எந்தன் முகமலர்விற்கு காரணமென ...                                      -- பிரவீணா தங்கராஜ் . 

பறந்து திரிந்து ...

Image
பறந்து திரிந்து விளையாடிய பருவமது பகையென்றால் என்னவென்று அறியாதது ஆற்றில் குளித்தும் , மரத்தில் தொங்கியும் அரசயிலை தண்டை கண்ணாடியாய் பொருத்தியும் கூடிவிளையாடி குதூகலித்த இனியனாள் கூட்டான்சோற்றில்  பொங்கி வழிந்தன ஒற்றுமை யெனும் உலகத் தத்துவம் காக்காகடியில் பண்டங்கள் பகிர்ந்து கவலை இன்னதென அறியாது வளர்ந்தோம் அன்பு மட்டுமே இங்கு உண்டு ஆதரவாய் தோழன் தோளுண்டு பாசாங்கு இங்கில்லை பதவிசனமும் இங்கில்லை பண்புகளோ தானாக நல்விதமானது சூரியனுக்கே சவால் விட்டு பனிரெண்டை பால்நிலவாக நினைத்தது உண்டு திரும்ப கிட்டாத பாக்கியம் நினைவில் மட்டும் தித்திப்பாய்...                                                --பிரவீணா தங்கராஜ் .

***பழமைக்கு உயிர்கொடுப்போம்***

Image
கூடைப்பின்னி  கூவிவிற்று குறையின்றி வாழ்ந்தநாளது பதமாய் செய்த பானையது பக்குவமாய் நீருற்றி நோயின்றி வாழ்ந்தநாளது மஞ்சப்பை எடுத்துச் சென்று மளிகையில் மலிவாய் வாங்கிச் சென்றநாளது பழமையை புறம்தள்ளி பாட்டனின் சொல்லை முறித்து நெகிழிப்பை வரவேற்று நோயினையும் ஏற்றோம் மக்காத நெகிழியோ மறையாது தங்கிட எம்பூமியின் பசுமையழிய  நாமே பூத்தூவி விட்டோம் அதை மாற்றிடவே , பழமைக்கு உயிர் கொடுப்போம் பூமியை நலமுறச் செய்வோம் .                    -- பிரவீணா தங்கராஜ் .               

நீயென் காதலாயிரு...!

நீயந்த  மேகமாயிரு ...! வேண்டாம் வேண்டாம் மேகமது காற்று வந்தால் கலைந்திடுவாய்...! நீயந்த சூரியனாயிரு ...! வேண்டாம் வேண்டாம் இரவில் காணாது போய்விடுவாய் ...! நீயந்த நிலவாயிரு...! வேண்டாம் வேண்டாம் பகலில் வர மறுப்பாய்... சில நாட்கள் தேய்ந்திடுவாய்...! நீயந்த ஏழுவர்ண வானவில்லாயிரு...! வேண்டாம் வேண்டாம் வானவில் தினமும் வர்ணித்துவிடாது நீயந்த மழையாயிரு...! வேண்டாம் வேண்டாம் இங்கே குளங்களில்லை உனைத் தேக்கிவைத்திட நீயிங்கு என்தாய் மண்ணாயிரு...! வேண்டாம் வேண்டாம் ரியல் எஸ்டேட்காரர்கள் கூறுப் போட்டு அடுக்குமாடி எழுப்பி விடுவார்கள் நீயந்த மலர்வாசமாயிரு...! வேண்டாம் வேண்டாம் நுகர்வோர்களுக்கெல்லாம் சொந்தமாகிவிடுவாய்...! நீயென் கவியாயிரு...! வேண்டாம் வேண்டாம் ரசனை கொண்டவர்கள் வாசித்துவிடுவார்கள் நீயென் ஓவியமாயிரு...! வேண்டாம் வேண்டாம் கலைக் கண்களுக்கு காட்சிப் பொருளாயாகிடுவாய்... நீயெந்தன் தங்க வைரமாயிரு ...! வேண்டாம் வேண்டாம் பெண்கள் உன்மீதே  கண்பதிப்பர் நீயந்த காற்றாயிரு..!. வேண்டாம் வேண்டாம் இப்போதெல்லாம் காற்றில் மாசு கலந்தே இருக்கின்றன நீயென் தென்றலாயிரு ...!

கைம்பெண்

திருத்தப்பட்ட வில் புருவதின் மத்தியில் குங்குமமாக நான் மையம் கொண்டு உன் கூந்தலில் மல்லிகையாய் மலர்ந்து வாசம் வீச விரும்புகின்றேன் நீ கைம்பெண் என்ற முள்வேலியிலிருந்து விண்ணைத்தாண்டி வா உறவும் , சமூகமும் வசவும் சொல்லிற்கு செவிமடுக்காது ' ம் ...' என்ற ஒற்றை வரியை உதிர்த்திடு... 'கைம்பெண்' என்ற அடைமொழி நீக்கி 'பெண் ' என்ற வட்டத்தினுள் ... மாங்கல்ய கயிறுடன் கரம் பற்ற வருகின்றேன்.                          -- பிரவீணா தங்கராஜ் .

பச்சை நிறவிளக்கு

போட்டியொன்றில் வெற்றிபெரும் ஜோருடன் தான் சாலைகளத்தில் காத்திருந்த வண்டிகளெல்லாம் பச்சை நிறவிளக்கு எரிந்தவுடன் சீறிக் கொண்டு பறந்தன சாகசம் காட்டவும் நேரத்தை மிஞ்சவும் வேகத்தை கூட்டிட .... எமனை தான் தேடுகின்றீரென  அவனது தவறான புரிதலில் பாசக்கயிற்றில் கட்டி அரவணைத்து விட போகின்றான் .                    --பிரவீணா தங்கராஜ் .

நியாயம் கேட்க மாட்டாயா...

Image
குதப்பிய பான்பராக் எச்சியை நடைபாதையில் முகசுழிப்பின்றியே துப்பிச் செல்ல அஷ்டகோலமானது என்முகமே.. அவனை நிறுத்தி தட்டி கேட்க நேரமில்லை பெரும்பான்மையினருக்கு... என்னையும் சேர்த்தே . அவனோ பாதம் மறைந்து நடந்தே செல்ல நானும் என் பேருந்தில் ஏறினேன். மனசாட்சி மட்டும் ஏறாது என்னிடம் கேட்டது நியாய அநியாய கேட்க மாட்டாயா...? அதனிடம் சொன்னேன் நான் கேட்க தயார் நான் ஏறும் இந்த பேருந்து எனக்காக காத்திருக்குமா...? என்றேன் பணியில் நேரம் கடந்து சென்றால் அலுவலத்தில் வசவு தவிர்த்து வரவேற்பாரா ? என்றேன் மனசாட்சி கூட அமைதியாகி என்னிடமே வந்து பயணம் செய்தது நியாயம் மட்டும் காற்றில் அலைகளாக யாரிடம் வாதிடவென்று அலைந்து கொண்டு இருக்கின்றன .                         -- பிரவீணா தங்கராஜ் .