Posts

டோராவும் புஜ்ஜியும்

Image
டோராவும் புஜ்ஜியும் சோட்டா பீமனும் நெருங்கிய நண்பர்களாயினர்  மகளின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் ...!             *** சாதாரண பொம்மைக்கு நீர் அபிஷேகம் நடக்கிறது அம்பாளின் பிஞ்சு கைகளால்...!                     -- பிரவீணா தங்கராஜ் .

கண்களில் பசியை கண்டபின்

குளிரூட்டப்பட்ட உயர்ரக உணவுவிடுதியில் அலங்கரிக்கப்பட்ட வெண்ணை தடவிய ரொட்டியினையும்  மணம் பரப்பி வாசத்திலே  வசியம் செய்த பிரியாணியையும் பசித்த பின்னும் புசிக்க பிடிக்கவில்லை கண்ணாடித்திரை வாயிலாக சாலையின் அதிக கூட்ட நெரிசலில் துல்லியமாக தெரிந்தன நடை வீதியில் ஓரமாக நின்றிருந்த சிறுவனின் கண்களில் பசியை கண்டபின் .                       -- பிரவீணா தங்கராஜ் .

பெரும் சாதி...

பெரும் சாதி சதவீதம் பெற்றே உயர் பதவி வகித்து மூக்கு விடைக்க தன் மதத்தினை பற்றி பக்க பக்கமாக வரிகளை கடன்வாங்கி படித்தப்பின் மெத்த ஆளாக நிமிர்ந்த நடையோடு மகிழுந்தில் சென்றே அந்த வீட்டு கதவைத் தட்டி இச்சை தீர்த்து கொண்டே மீண்டும் சென்றே போனது சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட வீட்டிலிருந்து .                            -- பிரவீணா தங்கராஜ் .

சித்தாளின் வாழ்க்கை

படி படியாய் முன்னேற்றம் படி படியாய் ஏறினாலும் முன்னேற முடியவில்லை சித்தாளின் வாழ்க்கை .         -- பிரவீணா தங்கராஜ் .

ஏழை சிறுவனின் பசி...

மகிழுந்திலமர்ந்து வெண்ணை தடவிய ரொட்டியை பசித்த பின்னும் புசிக்க பிடிக்கவில்லை சாலைகளின் அதிக கூட்டநெரிசலில் துல்லியமாக தெரிந்த ஏழை சிறுவனின் கண்களில் தெரிந்த பசியை கண்டதும் .                    -- பிரவீணா தங்கராஜ்

படிப்படியாய்...

படிப்படியாய் தான் முன்னேற்றம் படிப்படியாய் ஏறினாலும் முன்னேற முடியவில்லை சித்தாள் வாழ்க்கை .😓                 -- பிரவீணா தங்கராஜ்

நிலவு

முழு நிலவான வெள்ளி தட்டில் சிதறிய சில்லறையாக நட்சத்திரங்கள் .          *** களங்கமற்றநிலவின் மீது பழி சுமத்திவிட்டனரோ ? வானில் புதைந்து கொண்டது .         *** நட்சத்திரம் நாணம் கொள்ளவில்லையே ! இரவில் நிலவை கண்ணடித்து காதல் கொள்வதற்கு .        *** காலத்தால் அழியாத பகை யாரால் ஏற்பட்டதோ உடன் பிறப்புகள் சூரியன்-சந்திரன் ஒன்று சேர்வதில்லை               -- பிரவீணா தங்கராஜ் .  

வலி என்னுள்ளே ...

அர்த்தமற்ற பேச்சுயென்று நீ புறம்தள்ளும் ஒவ்வொரு மறுபேச்சிலும் இதெல்லாம் தேவையற்ற வேலைகளென  நீ பாதணி மாட்டி அலுவலகம் சென்றதும் எண்ணிலடங்கா வலியேந்தியே தவிக்கின்றேன் மணி மூன்றை காட்டிய பிறகும் சாப்பிட மனமின்றி சாப்பிட்டாயா கேட்க யாருமின்றி தனியுலகில் நேரங்களின் வெறுமையை எனக்குள்ளே ஜிரணித்தும்  ஏற்றுக்கொண்ட பிறகே மாலையில் உந்தன் சிறு முயற்சியும் வானளவு புகழ்கின்றேன் வலி என்னுள்ளே இருக்கட்டும் நீயறியா வேண்டாமென ....                 -- பிரவீணா தங்கராஜ் .             

காதல் பிதற்றல் -26

மருதாணி யெல்லாம் வேண்டாம் உன் ஆழப் பார்வை யொன்றே போதும் நான் சிவப்பதற்கு .           -- பிரவீணா தங்கராஜ்                             

சித்திர எழுத்துக்கள்

சித்திர எழுத்துக்கள்மீண்டு(ம்) வந்தன தொலைப்பேசியில் ஸ்மையிலி வாயிலாக 😊👈                 -- பிரவீணா தங்கராஜ் .