Posts

வன்பாதங்கள் செல்லும்...

Image
கருமை நிற மேகத்தினுள்கடக்கின்றேன் சுவாசித்தபடியே கானல் நீர் தான் கண்களுக்கு புலப்பட்டாலும் கால்கள் வீரநடை போடுகின்றன பாசங்கள் தவிக்க விட்டபோதும் பாதங்கள் மட்டும் தளரவில்லை  பரவசத்தை அள்ளிக்கொண்டே பட்டங்கள் துணையோடு பறக்கின்றேன் நம்பிக்கையோடு நேர்பாதை செல்லும் கால்களுக்கு நேர்மையே தோழனாக நெடுந்தூர மென்றாலும் நெட்டி முறிப்பதில்லை மனம் நேசத்தை மீண்டும் தேடியபடி உறவுகள் தளர்த்தி சென்றாலும் உன் மனமும் உள் மனமும் உதராதவரை உறைய மாட்டேன் உச்சியை தொடும் வரை உறங்கிட கண்களையும் விடமாட்டேன் வழிகளை தேடாது  - என் வன்பாதங்கள் செல்லும் தடமே வழியாக மாற்றியமைப்பேன் வசந்தங்களை வரமாக மீட்டி வந்திடுவேன் வாழ்வினை உயர்த்தியே...!                  -- பிரவீணா தங்கராஜ் .

கிராமம்

Image
கொக்கரக்கோ ஒலியெழுப்பி சேவல் கூவ கம்பிவளைவில் புள்ளிகளை சிறையிட்டோம் கோலத்தில விடியல்களை வீட்டிற்குள்ள கதிரவன் பரப்ப ஜல் ஜல் லென மாட்டுவண்டி சலங்கை படிக்க சல சல வென நீரோடை வயலிலோட சிலு சிலு வென காற்று சில்லிட செய்ய பச்சை பட்டாடை உடுத்தியே பூமி சிரிக்க பாதகங்கள் செய்யாதே வாழ்கின்றோம் திண்ணை கட்டி திகட்டாது கதைப் பேசிடுவோம் கம்மன்கூழும் பழைய கஞ்சி பசியாறிட போதும் போதும் என்றுதானே வாழ்ந்திடுவோம் அடுக்குமாடி யிடுக்குவீடு வேண்டவில்லை  ஓட்டு வீடு யென்றாலும் வேப்பங்காற்று வேண்டுகின்றோம் கணினிகுள்ளதலையை விட்டு வாழும் வாழ்கையெதுக்கு களப்பை பிடிச்சி காலம் தள்ளும் வாழ்கையிருக்கு பச்சரிசி சாதம் எல்லாம் தேவையில்லை பசியாற்ற நெல் விதைச்சா போதுமுங்க இறுக்கி பிடிச்ச ஆடை எல்லாம் இங்கில்லை சொருகி கட்டும் தாவணி யென்றுமுண்டு வகிடுயெடுத்து பின்னி தலைவாரும் அழகியுண்டு மாதமொருமுறையாவது  வந்து வாழு கிராமத்தில - அதை உந்தன் சந்ததிக்கும்  பெருமையாய் கூறு நல்ல....                                                                --பிரவீணா தங்கராஜ் .

காதல்

இரு கண்களின் பிள்ளை காதல் .         பிரவீணா 

அவள் போலவே...

அவள் போலவே இருந்தாள் அதற்காகவே நெருங்கி நின்று பார்க்க துடித்தேன் கண்களில் அதே குறும்பு நான் திட்டும் அதே பேய் நகம் அவள் கைகளில் அவளின் சிறு தவறுக்கு நான் தலையில் கொட்ட செய்வேன் அந்த கொட்டுதலில் வலி தலைக்குள் செல்லாது காக்கும் அதேயடர்ந்த கூந்தல் கற்றைகள் அதுவும் அவளுடையது போலவே விழியகன்றாது பார்த்தேன் . 'சே, அக்கா தங்கையோடு பிறந்திருந்தால் பெண்ணின் அருமை புரியும் ' யென்ற முனங்களும் காதில் விழுந்தன . திட்டி சென்ற அவளுக்கு தெரியாது 'நான் விரும்பிய வாழ்க்கை வாழ செல்கின்றேன்' என எழுதி விட்டு கண் காணாது சென்ற என் உடன் பிறப்பின் நகலாகயிருந்த அவளை விழியகற்றாது பார்த்தேனென்று.                                 -- பிரவீணா தங்கராஜ் . 

சமூக அவலம்

' மதுவை🍷' தானே கொள்ள சொன்னோம் ' மது ' வை கொன்றே விட்டீர்களே... மக்களாய் தானே வாழ சொன்னோம் மாக்களாய் தானே வாழ்கின்றீர் இறையை தேடும் குழந்தை முகத்தில் இரையாய் தானே சுட்டு கொள்கின்றீர் வார்த்தைகள் வரவில்லை கோர்த்திட்ட கண்ணீரில் உச்சம் தான் கொடுமையில் அச்சம் தான்  நொடிகளில் ...                           -- பிரவீணா தங்கராஜ் .

என் இறுதி மூச்சில் - காதல் பிதற்றல் 31

நித்தம் உந்தன் ஒர பார்வை சிறு சிறு சண்டை அதில் முகம் திருப்பி நான் சொல்லப்படும் போடா என்ற முணுமுணுப்பும் மாலை நீ வந்த அடுத்த நொடி மறந்தே போயிருக்கும் இரு கண்களின் தோன்றிய காதலில் ....           *** கரம் பற்றிய போது நான் உச்சரித்த உன் பெயரில் இருந்த காதலை விட ... என் இறுதி மூச்சில் உன் பெயரை சுவாசித்தபடி கரைவேன் அதில் உள்ளது நம் காதல் .             -- பிரவீணா தங்கராஜ் .

தூசு-காதல் பிதற்றல்-30

அவன் பாதம் பட்ட மண் சிறகு முளைத்து மேல் எழும்ப அதை கண்ணில் பொத்தி இமை மூடி பாதுகாத்தேன் . நீங்கள் அதை சாதாரணமாக தூசு கண்ணில் பட்டது என்கின்றீர் .😉                  -- பிரவீணா தங்கராஜ்

சிற்பம்

இவன் வெறும் கல்லென்றே யாவரும் உளி போல தாக்க பிறர் அறியார் கல்லானது என்றாவது  உளியின் வலியை தாங்கிய சிற்பம் ஆகுமென்று ...                     -- பிரவீணா தங்கராஜ் .

முன்னிருக்கையில் மகள்

மித வேக தடையோ  சாலை விதிகளோ எமக்கு உணர்த்த தேவையில்லை வாகனத்தின் முன்னிருக்கையில் மகள்  அமர்கையில் .                        -- பிரவீணா தங்கராஜ் .

உயிரே பறித்து இருக்கலாம்- காதல் பிதற்றல் -29

உன் விழி அம்பு  என் இதயத்தை தாக்க பறிப் போனது எந்தன் உயிர் அல்ல ... எந்தன் உள்ளம் . மெல்ல புரிந்தது உயிரே பறித்து இருக்கலாமென்று  உள்ளம் இப்பொழுது உன்னிடமே வந்து அடைக்கலம் தேடுகின்றதே...!                    -- பிரவீணா தங்கராஜ் .