Posts

வாழுங்கள் வாழவிடுங்கள்

Image
    வாழுங்கள் வாழவிடுங்கள்          நைனிகா டிராவல் பேக்கில் துணியை அடுக்கி கொண்டிருந்தாள்.      வைதேகி பேத்திக்கும் உணவு ஊட்டியபடி அவள் பின்னே வந்தவர் மருமகள் டிராவல் பேகில் துணியை அடுக்கவும் யோசனைவயப்பட்டு கணவரை நாடி சென்றார்.      "என்னங்க நீங்க அவ்ளோ சொல்லியும் இரண்டு நாள் லீவுக்கு செங்கல்பட்டு கிளம்பிட்டு இருக்காங்க." என்று நொடித்தார் வைதேகி.        வேல்முருகனோ "அப்படியா?" என்பது போல விறுவிறுவென அறைக்கு வந்தார். அதற்குள் நைனிகா டிராவல் பையை மூடி வைத்து நிமிர மாமனார் வரவும் கையை பிசைந்தாள்.     "என்னம்மா இது. இந்த மாசம் வரவுக்கு மீறிய செலவுன்னு சொல்லி எங்கயும் போக வேண்டாம்னு சொன்னேன். ஆனா பையை தூக்கிட்டு கிளம்பினா என்ன அர்த்தம்" என்று எடுத்ததும் கத்தினார் வேல்முருகன்.       "மாமா எனக்கு என்ன தெரியும். அவர் தான் மூன்று மணிக்கு கிளம்பணும் எடுத்து வைனு சொன்னார். எனக்கு வேற எதுவும் தெரியாது. அவர் சொன்னப்படி டிரஸ் எடுத்து வச்சேன்" என்று கூறவும் வேல்முருகன் பையனிடம் பேசிக் கொள்வோமென ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தார்.       'எத்தனை முறை சொல்ல

பொழுதை கொஞ்சம் களவாடு

Image
      பொழுதை கொஞ்சம் களவாடு  'பூ வைத்தாய் பூ வைத்தாய் பூவுக்கோர் பூவைத்தாய்...' என்று 'அருவி' ஹம் செய்து கொண்டே கணினியில் தன் பாஸ்வோர்ட் லாகினை செய்தாள்.    லாகின் செய்த அடுத்த நொடி, 'ஹாய் பிரெண்ட்ஸ் இன்னிக்கு காலேஜ்ல எனக்கும் என் பிரெண்ட் ராணிக்கு முட்டிக்கிச்சு. எப்ப பாரு எல்லாரிடமும் லூஸ் டாக் விடுவியா. என் லவ் பிரேக்அப் ஆகிடுச்சுனு நீயேன் மற்ற பிரெண்டிடம் சொன்னயென்று ஒரே திட்டு. நான் என்ன பிரெண்ட்ஸ் பண்ணறது. நீங்களே சொல்லுங்க. என்னோட இன்னொரு பிரெண்ட் ராணி லவ் எப்படிடி போகுதுனு கேட்டா. நான் அவங்களுக்குள் சில பிரச்சனை அதனால பிரேக்அப் என்று சொன்னேன்.     இரண்டு பேருமே பிரெண்ட்ஸ் நான் பொய் சொல்ல முடியுமா. எனக்கு மனசுல பட்டதை தான் சொன்னேன். அதுக்கு போய் நீயொரு லூஸ் டாக் அதுயிதுனு சொல்லி திட்டிட்டா. நீங்களே சொல்லுங்க பிரெண்ட்ஸ் உண்மையை பேசறது தப்பா. என்னோட நேச்சரே இதான். மனசுக்கு பட்டதை சொல்வேன். மனசுல ஒன்னும் திடீரென பொய்யும் வராது.     ராணி போறப்ப இந்த பழக்கத்தை மாத்திக்கோனு அட்வைஸ் வேற. நீங்களே சொல்லுங்க. நான் என் குணத்துக்கு மாறா மாறணுமா. இல்லை என் மனசுக்கு பிடிச்

காவலை மீறிய காற்று

Image
      காவலை மீறிய காற்று          சுடிதாரை எடுத்து வைத்து விட்டு தன் தங்க கம்பளை கழட்டி விட்டு மாற்றினாள் யமுனா. இதனை எட்டி நின்று பார்த்த பாக்கியமோ, "ஏன்டிம்மா நல்ல நாள் ஒரு சேலை உடுத்து கூடாதா. பொண்ணோட பள்ளிக்கூடத்துல ஆண்டு விழா. இன்னிக்கும் இந்த சுடிதாரை மாட்டிக்கிட்டு வந்து நிற்கற?" என்று கேட்டே விட்டார்.     சுனிலிற்கு 'போச்சு டா இந்த அம்மா இழுத்து வைச்சிட்டாங்க. அவ ஆடுஆடுனு ஆடுவாளே. நான் வேற பங்ஷனுக்கு வரலைனு சொல்லிட்டேன். அதுக்கும் சேர்த்து சண்டைக்கு போவா' என்று முனங்கினான். அவன் முனங்கி முடிக்கும் முன் யமுனா ஆரம்பித்தாள்.      ''இங்க பாருங்க அத்த. உடை என்பது நமக்கு எது கம்பர்டெபிளோ அதை தான் உடுத்தணும். என்ன பார்க்கறவங்க என்னை பார்த்து முகம் சுளிக்காத வகையில இருந்தா போதும்.    உங்க பையன் கடைசி நிமிஷத்துல எனக்கு மீட்டிங் இருக்கு. வரமுடியாது பொண்ணை நீயே கூட்டிட்டு போனு சொல்லிட்டார். எனக்கு ஸ்கூட்டில இதான் கம்பர்டெபிள். இப்படி தான் உடுத்துவேன்." என்று பொட்டிலடித்தாற் போல கூறி முடித்தாள்.      பாக்கியம் சத்தமேயில்லாமல் "என்னய்யா இது நீ போகலையா. கு

அகமா முகமா?

Image
  அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.     மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.    குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.     உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார்.     "என்னப்பா... எங்க காலத்துல இருந்து இப்ப வரை லீடிங்ல இருக்கறது மிக்கி

புத்தாண்டு சபதம்

Image
            புத்தாண்டு சபதம்     புத்தாண்டு சபதம் - Praveena Thangaraj Novels

தாமரை கோலம் (9-5 இடைப்புள்ளி)

Image
 தாமரை கோலம் 9-5 இடைப்புள்ளி

பூக்கோலம்(11-6 இடைப்புள்ளி )

Image
 பூக்கோலம்  11-6 இடைப்புள்ளி 

சிறுகிழங்கு பொரியல்

Image
  சிறுகிழங்கு பொரியல் தேவையான பொருள் : சின்ன வெங்காயம் - ஒரு கப் எண்ணெய் -தேவையான அளவு தாளிக்க கடுகு- சிறிதளவு உளுந்து- சிறிதளவு சிறுகிழங்கு-கால்கிலோ சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகுதூள், மஞ்சள் தூள் -சிட்டிகை அளவு காய்ந்த மிளகாய் -இரண்டு கறிவேப்பிலை கொத்தமல்லி -சிறிதளவு. உப்பு - தேவைக்கு ஏற்ப செய்முறை : சிறுகிழங்கில் நிறைய மண் இருக்கும் அதனால சிறுகிழங்கை நன்றாக அலசிடணும்.   சிலருக்கு தோலை ரிமூவர்ல எடுத்து அப்படியே செய்வாங்க. எனக்கு வேகவைத்து எடுத்து பண்ணறது பிடிக்கும். முதலில் சிறுகிழங்கை குக்கரில் நான்கு விசில் கொடுத்து வேகவைக்கவும். தொட்டாலே சிறுகிழங்கு தோல் உறிந்து கிழங்கு தனியாக வரும். பயப்பட வேண்டாம் கிழங்கு குழைந்துவிடாது. தோலுரித்து எடுத்து வைத்த சிறுகிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளலாம். அல்லது மசித்து கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர் காய்ந்த மிளகாயை கிள்ளி  கருவேப்பிலை போட்டு வதக்கவும். வேகவைத்த சிறுகிழங்கு சேர்த்து மஞ்சள் தூளையும் போட்டு சற்று கிளறி விட்டு நாலாப்பக்கமும் மஞ்சள் தூள், கி

பஞ்ச தந்திரம்-2

Image
  தந்திரம்-2     ஒரு காம்பவுண்டில் இங்கும் அங்கும் ஒரு செங்கல் பேத்து இருந்தது. அதில் மாறி மாறி கால் வைக்கும் பொருட்டு ஏணிபடிகள் போல இருக்க அதில் நைனிகா ஏறினாள்.     "ஏய்... என்ன பண்ணற?" என்று ரஞ்சனா கேட்டு நைனிகாவை நிறுத்தினாள். பாதியில் தொங்கிய நைனிகா கீழே இறங்கினாள்.      "இது நான் தங்கியிருக்குற ஹாஸ்டல். இது வழியா மேல வந்திங்கன்னா... ரூமுக்கு போயிடலாம்." என்று சாவி கொத்தை ஆட்டினாள் நைனிகா.      "மஞ்சரி அம்மா வயசானவங்க எப்படி ஏறுவாங்க? இதோ திரிஷா.." என்று கூறவும் "என் பெயர் திரிஷா இல்லை திரிஷ்யா" என்று இடைப்புகுந்து திருத்தினாள் திரிஷ்யா.     "சரி... திரிஷ்யா.. இவங்க சேரி கட்டியிருக்காங்க எப்படி ஏறுவாங்க?" என்று கேட்டாள் ரஞ்சனா.       நைனிகாவோ தோளைக் குலுக்கி வேற இடம் இருக்கா என்பது போல பார்த்தாள்.      "நான் அட்ஜஸ்ட் பண்ணி ஏறிடுவேன். எங்கவீட்ல மாடில வாட்டர் டேங்க்ல இது மாதிரி ஏணில ஏறி பழக்கம். ஆனா இது சுவர் சறுக்கிடாதா?" என்று திரிஷ்யா கேட்டாள்.     "தைரியமா ஏறுங்க" என்று நைனிகா பதில் தந்தாள்.     "அப்படியே