Posts

என் மரணத்திற்குப் பிறகு...

என் மரணத்திற்குப் பிறகு ...என்ன நிகழும் கண்மூடியே யோசித்தேன் மண்மூடி புதைப்பனரோ ? எரிப்பனாரோ ? நான் உணர போவதில்லை ஏதோவொரு அமைதி எண்ணில் நுழைந்தது அதுதான் மயான அமைதியோ ? ஏதோவொன்று இலகுவாக உணர்த்தியது  நானெனும் உடல் , என் குடும்பம் , என்யுடமை என் உறவு என்பதெல்லாம் அழிந்தே போனது நிலையற்று சிறகு முளைத்த மனிதனாக ஆத்மா பரந்த உலகை பார்த்துக் கொண்டது எங்கும் கொலை, கொள்ளை, திருட்டு மனிதநேயமற்ற செயல், ஜாதியென பிரித்தே இறைந்துகிடந்தனர்  பார்க்க திறனின்றி நான் ஆத்மாவாக இ(ற)ருந்து விடுகின்றேன் எங்கோ இழுத்து செல்கின்றன காற்று அதனிடம் கேள்வி கேட்காது பயணித்தேன் அங்கும் இருதரப்பு உலகம் சொர்க்கம் நரகமென்று பாவபுண்ணிய கணக்கினை கணக்கிட்டு இங்கு யார் கணக்குபதிவாளர் வேலைப் பார்ப்பதோ ? என்ற கேள்வி தான் எழுந்தது - அதை விட அடுத்த பிறவியுண்டா இல்லையாயென்ற ஆவலையும் தான் 'ட்ரிங் ட்ரிங்' யென்ற அலாரயோசை செவிமடல் தாக்க கண் விழித்தேன் கனவு... எல்லாம் கனவு... இறுதிவரை தெரியாமலே போனது அடுத்த பிறவி உண்டா !? இல்லையா ?!           ...

எந்தன் தமிழ் நாட்டில் ...

தோட்டாக்கள் தழுவிய தேகம்குருதி வழிந்த மேனியென்று இறக்கும் தருவாய் நொடிகளிலும் கடக்கின்றேன் எதிரி நாட்டிலிருந்து எந்தன் தாய் மண்ணில் மடி சாய்ந்து உயிர் நீத்திட இமைகள் கூட கண்ணிற்கு பாரமாக மாறிக்கொண்டு இரு(ற)க்கும் தருவாயில் சிறகு முளைக்க இறைவனிடம் யாசிக்கிறேன் பறந்தாவது பசி தூக்கமின்றி பாதகமின்றி உயிரை நாட்டிற்கு பரிசாக்கியது போல உடலையும் பரிசாக தர முயல்கிறேன் எந்தன் கண்ணும் , இதயமும் யாருக்கேனும் பயன் பெற வேண்டுமென்று எந்தன் நண்பர் கூட்டம் கண்டு கொண்டால் நறுக்கு தெறித்த திருக்குறள்வரி போல செப்பிடுவேன் தானம் செய்திடுங்கள் எந்தன் கண் இதயத்தையென்று மீண்டும் பிறப்பேன் மறுஉருவத்தில் எல்லையில்லா வளத்திலும் வளங்களும் தன்னில் கொண்ட தமிழ் நாட்டில் ...               -- பிரவீணா தங்கராஜ் .

ஏதோ நினைத்து...!

ஏதோ நினைத்து தவிக்கின்றேன் என்னில் உன்னை சிறை வைத்தேன் கண்ணில் உன்னை காண்கின்றேன் கவிதை இசைத்தே கதைக்கின்றேன் கனவில் நீ வர துடிக்கின்றேன் கவலைகள் உன்னில் மறக்கின்றேன் காதல் இதுயென அறிகின்றேன் எதையும் அறியா உன் மனதோ என்னில் புன்னகைத்தே பேசிடுதே நாளும் புன்னகைத்து பேசினாலும் வாழும் எந்தன் மனசாட்சி மண்ணில் புதைந்திடும் முன்னாலே மனதை இருப்பதை சொல்லிடுவேன் என்றே சூளுரைத்து தவிக்கிறதே                        --  பிரவீணா தங்கராஜ் .

நான் நானாகவே

நான் நானாகவே இருந்து கொள்கின்றேன் உனக்காக மாறி மாறியே என் சுயத்தை இழந்து விடுகின்றேன் போதும் நான் நானாக இருந்த போது எதற்காகவும் கவலை கொண்டதில்லை கலங்கியதும் இல்லை புன்னகை மட்டுமே முகத்தில் வீற்றிருக்கும் நீண்ட நேர காத்திருப்பும் ஏமாற்றமும் நீ பேசவில்லை யென்ற தவிப்பும் இருந்ததில்லை உந்தன் கோபம் எந்தன் இதயத்தை சுடவில்லை உந்தன் மவுனம் கூட தாக்கியதில்லை அதனால் நான் நானாக இருக்கின்றேன் அப்படியே என்னை ஏற்க முயன்றிடு !                                         -- பிரவீணா தங்கராஜ் .

என் நாட்குறிப்பில்...

என் நாட்குறிப்பில் உன்னை பற்றி எழுதப்பட்ட இடங்களை விட எழுதப்படாத பக்கங்களே அதிகமாக இருப்பதாக தாள்கள் நினைத்திருக்கும் அதற்கு தெரியாது தாளின் மையுன்றி எழுதப்படாத நினைவுகள் என் இதயத்தில் வேரூன்றி இருக்குமென்று...               -- பிரவீணா தங்கராஜ்

நீயின்றி வாழ்வேது

நிச்சயித்த நாள்முதல் என்னைப் பார்க்க துடித்தவன் நீ - இன்று கண் பார்த்துப் பேச மறுக்கிறாய் ..... அலைபேசியில் நித்தம் என் குரல் கேட்க துடித்தவன் நீ - இன்று மவுனம் மட்டுமே பேசி செல்கின்றாய் ..... நித்தம் நூறு முத்தம் கேட்டவன் நீ - இன்று ஆயிரம் கொடுத்தும் வாங்க மறுக்கிறாய் ..... ஊசியொன்று விரலில் பட துடித்தவன் நீ - இன்று கண்கள் குளமானாலும் காணாது செல்கின்றாய் ..... ' செல்லம் ' 'பாப்பா ' ' டார்லிங் ' 'டியர் ' என அழைத்தது நீ - இன்று பெயரிட்டு கூட அழைக்க மறந்தாய் ..... காலை வணக்கத்தை ஐந்து மணிக்கே கூறி இரவு வணக்கத்தை இரண்டிற்கு கூட கூறாது தொலைபேசி குறுந்செய்தியை நிரப்பினவன் நீ - இன்று சாப்பிட்டாயா என்றும் கேட்கவும் யோசிக்கின்றாய் ..... ஊடலில் தொடரும் காதலில் ஊடல் தணிந்து வெட்கம் படர செய்தவனும் நீ - நீ இன்றி உலகம் இல்லை என்று எப்பொழுது உரைப்பவனும் நீ ...நீ...நீ...                        -- பிரவீணா தங்கராஜ் .

அகிம்சை

நீண்ட நேரம் பேரம் பேசி ஒரு வழியாகமுடிவானது காந்தி முகம் கொண்ட தாள்கள் கை மாறியது அகிம்சைக்கு எதிராக வன்முறையாட்கள் இறக்கி போராட்ட களத்தினை கலைப்பதற்கு...          -- பிரவீணா தங்கராஜ் .            

வறுமை - கல்வி - துளிப்பா

   கல்வி துளிப்பா – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

தானம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய வறுமைக் கோட்டின் கீழ் தான் வசிக்கும் நிலைமை பணத்தை சேகரிக்க தோன்றாத எண்ணம் உணவையாவது மதியத்திற்கு சேகரித்து பழஞ்சோறாக்கி யிருக்கலாம் அதையும் ரோட்டில் யிருந்த நான்கு நாய்குட்டிக்கு தானம் அளித்து தானத்தை சேகரித்து கொண்டனர் மதியத்திற்கு மதிய வயிறை காயா போட்டு                            -- பிரவீணா தங்கராஜ் .

மலர்ச்சியில்லை

மலர்ந்த பூவின் நடுவே மலர்ச்சியில்லை பூக்காரனுக்கு பூக்கள் விற்பனை ஆகாததால்...            -- பிரவீணா தங்கராஜ் .