Posts

தீவிகை அவள் வரையனல் அவன்-13

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6

Image
      💟(௬) 6                           இன்றும் எப்பொழுதும் செய்யும் பணியினை முடித்து மஞ்சரி இறைவனை தொழுதபடி விழியில் நீரை சிதற விட அதனை கண்டு ருத்திரா தோளை தொட       '' தினமும் பயணம் செய்கின்றோம் ருத்திரா இதில் இன்னும் எத்தனை தொலைவை அடைந்து விட்டோம் இன்னும் சமூத்ரா இருக்கும் இடம் அறியவில்லையே.... உமது தமையன் மேக வித்தகனும் காண முடியவில்லை... இனி அவ்விருவரையும் காண இயலாதா? எமது தாய்மை கோலம் கூட என்னவனின் செவிக்கு அறிவிக்க முடியாதா?'' என்றே அங்கே சோகமாக சொல்ல      ''கண்டறிய செய்வோம் மஞ்சரி... கவலை கொள்ள வேண்டாம்... இங்கே அதீத மிருகம் நடமாடுவது போல தோன்றுகின்றது... முதலில் கிளம்புவோம்'' என்றே கையை பற்ற பிடித்து எழுந்து முடிக்க ருத்திரா குளித்து முடித்தும் அவளின் பிறை நெற்றியில் இருந்த ரத்த திலகம் அப்படியே இருக்க கண்டு        ''ஏன் ருத்திரா திலகம் அழியவில்லைய...

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5

Image
                                                                 💟(௫) 5                பரிதியின் கதிர் அங்கே இருக்கும் இடமெல்லாம் வெளிச்சம் தர மித்திரன் சோம்பலுடன் எழுந்தான். இன்று ருத்திராவை பிரிய வேண்டும். துர்வசந்திரன் எந்த நங்கையை தேர்ந்து எடுத்து பலியிட போகின்றானோ அதனை தடுத்து அவனை அங்கே முன்னே அமர்த்தி அவனின் எண்ணத்தை கலைய வேண்டும்.... இத்தனையும் முடியுமா? அவனும் நானும் பயின்றது ஒன்றல்லவா... அவன் என்னை மாற்றி விட்டால்? இல்லை பிறப்பு என்பது எமக்கு முன்னால் அவதரித்து இருக்கலாம்.... ஆனால் எம்மை வீழ்த்த ஒருவன் பிறப்பெடுக்க வேண்டுமெனில் அது யாம் பெற போகும் சேய்களாக தான் இருக்க முடியும் என்றவனின் பார்வை ருத்திரா வதனதில் நின்றது.       ''ருத்திரா... எமது பயணம் தொடர வேண்டும் உம்மை...'' என்றே தயங்க    ...

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4

Image
     💟 (௪) 4           ருத்திரா என்றே மையல் சொட்டும் மித்திரன் அழைப்பில் ருத்திரன் அஞ்சி தாடி தடவி பார்த்தபடி       ''மூடனே ... இங்கு மஞ்சரியை தவிர்த்து நங்கை எவருமில்லை..'' என்றே பேச        ''மெய் தானாக மேடை ஏறாது அப்படி தானே பரவாயில்லை... யானே செப்புகின்றேன்.. உன் மொட்டு போன்ற செவியில் ஏற்றி கொள்... உன் ஒட்டுதல் எல்லாம் பலே தான் அதில் எல்லாம் நான் கண்டறிய இயலவில்லை.. ஆனால் சில பல பிழைகள் இருந்தது. முதல் பிழை நீ பெண் புரவியில் வந்தது.. எந்த ஒரு ஆண்மகனும் அவனுக்கு ஏற்ற ஆண் புரவியில் தான் பயணபடுவான். பிழை இரண்டு நீ என்னை தாக்கும் பொழுது பின் பக்கம் வந்தாய்.. வீரன் நல்லவனாக இருப்பின் நெஞ்சில் நேருக்கு நேர் தாக்க வருவான் கெட்டவனாக இருந்தால் தாக்கி விட்டு தான் பேச்சே ஆரம்பிப்பான்.. நீ பெண் அதனால் இது எதுவும் அறியாமல் பின் நின்று தாக்கினாய் சொன்னதும் முன்னே வந்தாய்.. அதிலே உன்னை கவனிக்க செய்தேன். புரவியில் ஏறியதும் இன்னும் கூர்ந்து ஆராய்ந்தேன்.       ...

உன் விழியும் என் ளும் சந்தித்தால்...-3

Image
                                                                        💟 (௩) 3                         இரு ஆண்கள் இருக்கும் இக்குகையில் மஞ்சரி எவ்வித தயக்கமின்றியே துயில் கொள்ள முனந்தாள். அங்கே பெரிய பெரிய இலைகள் எல்லாம் பறித்து இருவர் உறங்க ஏற்பாடாக இருந்த இலை மஞ்சத்தில் பார்வை சென்றது மித்திரனுக்கு.        அப்படி என்றால் இருவரும் ஒன்றாக துயில் கொள்ள எண்ணினாரோ?! என்றே எண்ணியவன் பார்வை அங்கே நிலைக்க ருத்திரன் செரும கண்டு விழியை அகற்றினான்.      ''அது யாம் அங்கே துயிலுறங்க செல்கின்றேன்'' என்றே மித்திரன் அடுத்த பக்கம் சென்று கையை சிரத்திற்கு முட்டு கொடுத்து உறங்க செய்ய இமையை மூடினான்.         ருத...

உன் விழியும் என் வாளும் சந்திதால்...-2

Image
    💟 (௨)2                       ஊசி நுழைவில் தன்னை தான் ருத்திரன் குள்ளநரி என்று சொன்னது புரியாமல் இல்லை மித்திரனுக்கு.... இருந்தும் மெல்ல குறுநகையோடு நித்திரை செய்ய... வெண்ணில ஒளியில் அந்த தாமரை விழிகள் அவனுள் நட்சத்திரமாக மின்னியது.          அவளுக்குள் என்னை பார்த்த கணம் மின்னல் வெட்டியது. நிச்சயம் என்னை பற்றி அறியலாகும் திகதியில் அவளாகவே மெய்யுரைப்பாள்.           அதிகாலை வெய்யோனின் கதிர் அவ்வனத்தில் இருந்த இருளை அகற்ற பரிதியின் கதிர்கள் இலைகளின் வழியே குடிலை அடைய மித்திரன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்தான்.     ருத்திரனோ குளித்து முடித்து ஆடையணிந்து பரிதியினை வணங்கி நின்றான். மஞ்சரியும் ருத்திரனும் ஒரே மாதிரி முகத்தில் தாமரை கைகளை தாங்கி பின்னர் மார்பின் அருகே வணக்கம் வைத்து சூரிய நமஸ்காரம் வைத்து இருக்க அது மித்திரன் விழியினில் பதிந்து மீண்டது.         ...

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

Image
  உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-2 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-3 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...4 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...10 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...11  உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...12   உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13    உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...14 உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...15(முடிவுற்றது)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-1

Image
                உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...!                               💟(௧)1                         தனது வெண்ணிற புரவியில் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்துச் சென்று கொண்டுயிருந்தான் மித்திரன்.            திசை வந்த இடம் நோக்கி புரவியில் இருந்து குதித்து தனது உடைவாளை எடுத்தான். அந்த பாழடைந்த கோவிலில் யாருமில்லை என்று சொன்னாலும் அவனது உள்ளுணர்வு யாரோ இருப்பதாகவே எடுத்துரைக்கச் சுற்றிமுற்றி கண்களை சுழல விட்டவன் ஒரு தூணில் அருகே வந்ததும் அவனின் மீது வாள் ஒன்று வர நொடியில் சுதாரித்து தனது உடைவாளால் அதனைத் தடுத்தான்.       ''பின்னிருந்து தாக்கும் வீரன் எவனோ? முன்னே வந்து நேருக்கு நேராக வாள் வீச அச்சமோ?'' என்ற மறுநொடி அந்த வாளுக்குச் சொந்தமான கைகள் முன்னே வந்து நின்றது....

தீவிகை அவள் வரையனல் அவன்-12

Image
தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-12 தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.      

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-11

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்-11 தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.