Posts

காதல் பிதற்றல் -25

கொழுந்த மருதானி இலையினை பறித்து வேண்டுமா ? என்கின்றாய் என்சொல்வேன்  நான் சிவந்து போக மருதானி வேண்டாம் உன் பார்வை ஒன்றே போதும்                -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 23

எந்தன் வீட்டு ரோஜா செடிக் கூட அறிந்தே இருக்கின்றது நான் உன் மீது மையல்   கொண்டுள்ளதை அதனால் தான் உனக்கு சேர வேண்டிய பூக்களை சுவர் தாண்டி ஜன்னல் வழியாக உன்னிடமே நீட்டுகின்றது அந்த ரோஜா செடி                        -- பிரவீணா தங்கராஜ் .  

மகளெனும் இளவரசி

வேந்தர்களே யானாலும் கூட சேவர்களாக மாறி தான் போக வேண்டும் மகளெனும் இளவரசியின் கட்டளைக்கு .             -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 22

நீயென்னை சாதாரணமாக எல்லோரும் விளிப்பது போல தான் விளித்திருப்பாய்...! எனக்கு தான் உன் மீதிருக்கும் காதலில் செல்லமாக விளிப்பதாகவே தோன்றுகிறதே...!                    -- பிரவீனா தங்கராஜ் .

விழி வலை

விழி வலையில் மீளாத ஒற்றை சூரியனாய்... மாட்டி கொண்டேன் உன்னிடம் விழிவலையில் தப்பிக்க மனமில்லையடி   உன் கண்யிமைக்குள்ளே வைத்துக்கொள் .                         -- பிரவீணா தங்கராஜ் .

வெற்றிப் பெறாகாதல்

தொடர் அலைப்பேசி சிணுங்களில் அடுப்பை அணைத்து வைத்தப்படி தொடுதிரை விசையை நகர்த்திட  ' ஹலோ ' என்ற குரல் ஒலித்தன தட்டுத் தடுமாறி நழுவவிடச் சென்ற கைப்பேசியை அழுத்திப் பிடித்தப்படியே 'ம்' என்ற ஒற்றை வார்த்தை உதிர்த்தேன் அந்தப் பக்க அலைப்பேசி மவுனம் காத்தன அதிலேயே என்குரலை அறிந்ததை அறிந்தேன் நீண்ட வினாடிக்குப் பின் நலம் விசாரித்து, என் மகவினை பற்றி அறிந்துக் கொண்டு சொல்லவந்ததையும் சொல்லி முடித்தன. வேறொன்றுமில்லை வரும் நன்னாளில் அலைபேசியின் பேசிய குரலின் பிள்ளைக்கு பெயர் சூட்டு விழாவாம் அழைப்பு விடுத்திட்டு பெயரையும் சொல்லினர் அதுவொன்றும் ராசியான பெயரில்லையென சொல்வதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது அந்த நன்னாளுக்கு நிச்சயம் வரமாட்டேயென அறிந்தேயிருந்தன அந்த குரல் . அலைப்பேசி வைத்துவிட்டு அரை நாழிகை அதையே இமைக்க மறந்து பார்த்திருந்தேன் அது எப்படி பூக்களால் வருடிய உணர்வும் ஈட்டியால் குத்திய ரணமாக்கும் உணர்வும் ஒரு சேர தா க் கி கொண்டிருக்கின்றன இதயத்தினுள் வெற்றிப் பெறாகாதல் .                                    --  பிரவீணா தங்கராஜ் .

முக்திநிலை

இறைவழிபாட்டிருக்கு அலங்கரிக்கப்பட்ட பூக்களே கர்வம் கொள்ள வேண்டாம் நீங்களே சிறந்ததென என் மகளின் பிஞ்சு கைகளில் பிய்த்து எறியப்பட்ட பூக்கள் தான் முக்திநிலை பெற்றது அறிவீரோ...!                -- பிரவீணா தங்கராஜ் .

முகவரியில்லா முதிர்கன்னி

இதோயிந்த காற்றை நீ சுவாசித்திருப்பாய்...! இதோயிந்த அலையிலும் நீ கால் பதித்திருப்பாய்...! இதோயிந்த உணவை நீயும் ருசித்திருப்பாய்...! இதோயிந்த நிறம்கூட உனக்கு பிடித்தாயிருக்கலாம்...! இதோயிந்த பாடல் கூட நீ கேட்டு ரசித்திருப்பாய்...! இதோயிந்த வழியாய் நீ பயணித்தீர்ப்பாய்...! எனக்கான நீ பிரபஞ்சம் அழியும் முன் ஜாதகம் பார்க்காது , வரதட்சணை கேட்காது , நிறம் , படிப்பு பொருட்படுத்தாது...! கரியநிற மேனிகொண்ட பெயரையும் எழுதறியாத பிறந்ததிகதி கூட தெரியாத ஏழ்மை கொண்ட முகவரியில்லா முதிர்கன்னியை தேடிக்கொண்டு இருப்பாய் ... என்னைப் போலவே...!                          -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 21

காதலில் பெண்மைக்கு வெட்கம் , அச்சம் தடையென்பதால் நீயென்னுள் தொடக்கப் புள்ளி மட்டுமே வைத்து விடு ...! முற்றுப்புள்ளியாய் ... முடித்திடாது தொடர் புள்ளியாய் ... உன்னுள் மையப்புள்ளியாய் .... காதல் கவியாய் தொடருகின்றேன் என்றும் என்றென்றும் ...!                -- பிரவீணா தங்கராஜ் . 

அம்மா

Image
பாலும் சோறும் நீ பிசைந்து பாசமதிலே நீ குழைத்து நிலவுக்காட்டியே சோறூட்ட நீ வேண்டும் அம்மா... மடிமீது நான் சாய நித்திரையில் தலைக்கோதி நெற்றியிலே இதழ்ப்பதித்து புன்னகைத்தே காத்திடுவாய்... என்னப்பிடிக்கும் ஏதுப்பிடிக்கும் என்பதெல்லாம் நானறியும் முன்னாலே நீயுணர்ந்து செயல்படுவாய்... தோழியாய் கதைகதைத்து முதல்தோழியாய் மாறிப்போவாய்... இடையில் எனை அமர்த்தி விழியில் வழிநடத்து  நான் உலகம் பார்ப்பதற்கும் .                 -- பிரவீணா தங்கராஜ் .