Posts

கிராமியக் கவிதை

Image
           மஞ்சள் முகமுடையாள் மாசற்ற குணமுடையாள் தாமரை குளத்தினிலே  தாரகையே குளித்திடுவாய்... கணுக்கால் கொலுசினிலே காதலயெனையும் பூட்டிடுவாய்... பச்சை வயலில் நீ நடக்க பஞ்சாய் மாறின புற்களெல்லாம் தளும்பிய குடத்தை ஏந்திடவே  தாவணி யெடுத்து நீ சொருகளிலே தவிக்குதடி என் மனசு கருமையப்பிய கருவாச்சி காதல் பேசுவது உன் விழியாட்சி ரெட்டைசடையில் நீ திரும்ப ராட்டினமாக சுற்றுதடி மனசாட்சி கோலமிட்டு புள்ளிக்குள்ள சிக்கிக்கிட்டேன் வசமாக உன்னைப்போல அழகியாருமில்லை உள்ளமெல்லாம் நீ நிறைஞ்சு போனதால... ஆலமரத்தடி தலைசாய்ந்து அன்பாய் பேசிய கதைகளை தண்டட்டி அணிந்த அப்பத்தா தண்டோரா போட்டு சொல்லிடுவா கண்ணாடி வளையலை வாங்கிகிட்டு ஊர்திருவிழாக்கு வந்திடுவேன் மஞ்சுவிரட்டு காளையை அடக்கிப்புட்டு மஞ்சள்கயிறை ஏந்தியே நானும் வந்திடுவேன் என் கிராமத்து கிளியே காத்திரு விடியும்வரை .                                                    -- பிரவீணா தங்கராஜ் .

கார்ப்பரேட்

கல்லா பெட்டியருகே மீதி ஒருரூபாய் கொடுப்பதற்கு சில்லறையில்லையென மிட்டாய் கொடுக்கும் -அந்த விழி நிமிர்ந்து பார்க்க வைக்கும் கட்டிடம் வந்த பிறகே அழுத குழந்தைக்கு கணக்குபார்க்காது மிட்டாய் கொடுக்கும் அண்ணாச்சிகடையில் எலிகள் வந்து சேர்ந்தன .                        -- பிரவீணா தங்கராஜ் . 

உன் இதயபெட்டிக்குள் - காதல் பிதற்றல்-28

அயல் தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்கின்றாய்...! இங்கிருந்து எடுத்து சென்ற  இதயம் போதும் போதுமென்று சொல்லும் அளவிற்கு காதலை அள்ளிக் கொண்டு வா ... உன் இதயபெட்டிக்குள்ளிருந்து !                                       பிரவீணா தங்கராஜ் .

உந்தன் மொழிகளென்று காதல் பிதற்றல் -27

அதிகாலையில் உறக்க கலகத்தில் ஆரதழுவும் உந்தன் கைகளுக்குள் எந்தன் மேனிவாசம் இன்றென்ன அடுதலென எட்டிப்பார்க்கும் உந்தனார்வதில்  எந்தன் விழியில் சினத்தையும்  குளித்து முடித்து சாரல் மழையாக துவட்டும் உந்தன் கேசத்தை துவட்டும் எந்தன் தாய்மையும் அதே பட்டு கேசத்தை நின்வாரும் போது எந்தன் களைத்து விடும் குழந்தை மனதையும் உனக்கு பிடித்த அந்த வெண்நிற சட்டையில் என்னையறியாது கொட்டிய குழம்பால் ஏற்பட்ட சண்டைகளையும் ... நீ தேடும் அந்த சாம்பல்நிறகைக்குட்டை நேரம்போக்காமல் எடுத்துக் கொடுக்கும் கனத்தையும் அலைபேசியோடு அகம் பேசியதையும் கனபொழுதில் பதிந்த அழுத்த முத்தத்தையும் எடுத்து பெட்டிகளில் நிரப்பிக்கொள் . மொழிதெரியாத நாட்டில் செல்லுமுனக்கு தெரியும்  இதெல்லாம் தான் உந்தன் மொழிகளென்று...                                                            -- பிரவீணா தங்கராஜ் .

டோராவும் புஜ்ஜியும்

Image
டோராவும் புஜ்ஜியும் சோட்டா பீமனும் நெருங்கிய நண்பர்களாயினர்  மகளின் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் ...!             *** சாதாரண பொம்மைக்கு நீர் அபிஷேகம் நடக்கிறது அம்பாளின் பிஞ்சு கைகளால்...!                     -- பிரவீணா தங்கராஜ் .

கண்களில் பசியை கண்டபின்

குளிரூட்டப்பட்ட உயர்ரக உணவுவிடுதியில் அலங்கரிக்கப்பட்ட வெண்ணை தடவிய ரொட்டியினையும்  மணம் பரப்பி வாசத்திலே  வசியம் செய்த பிரியாணியையும் பசித்த பின்னும் புசிக்க பிடிக்கவில்லை கண்ணாடித்திரை வாயிலாக சாலையின் அதிக கூட்ட நெரிசலில் துல்லியமாக தெரிந்தன நடை வீதியில் ஓரமாக நின்றிருந்த சிறுவனின் கண்களில் பசியை கண்டபின் .                       -- பிரவீணா தங்கராஜ் .

பெரும் சாதி...

பெரும் சாதி சதவீதம் பெற்றே உயர் பதவி வகித்து மூக்கு விடைக்க தன் மதத்தினை பற்றி பக்க பக்கமாக வரிகளை கடன்வாங்கி படித்தப்பின் மெத்த ஆளாக நிமிர்ந்த நடையோடு மகிழுந்தில் சென்றே அந்த வீட்டு கதவைத் தட்டி இச்சை தீர்த்து கொண்டே மீண்டும் சென்றே போனது சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட வீட்டிலிருந்து .                            -- பிரவீணா தங்கராஜ் .

சித்தாளின் வாழ்க்கை

படி படியாய் முன்னேற்றம் படி படியாய் ஏறினாலும் முன்னேற முடியவில்லை சித்தாளின் வாழ்க்கை .         -- பிரவீணா தங்கராஜ் .

ஏழை சிறுவனின் பசி...

மகிழுந்திலமர்ந்து வெண்ணை தடவிய ரொட்டியை பசித்த பின்னும் புசிக்க பிடிக்கவில்லை சாலைகளின் அதிக கூட்டநெரிசலில் துல்லியமாக தெரிந்த ஏழை சிறுவனின் கண்களில் தெரிந்த பசியை கண்டதும் .                    -- பிரவீணா தங்கராஜ்

படிப்படியாய்...

படிப்படியாய் தான் முன்னேற்றம் படிப்படியாய் ஏறினாலும் முன்னேற முடியவில்லை சித்தாள் வாழ்க்கை .😓                 -- பிரவீணா தங்கராஜ்