Posts

கூண்டுக் கிளி இவள்

Image
மென் பாதங்களை அத்திரிசாரம் கட்டியிருக்க  மலர் கரங்கள் மந்திரக்கோல் பற்றியிருக்க தூரிகை வடித்தன சுதந்திரக் கிளியொன்றை காரிகை இவளுக்கும் கிட்டுமோ விடுதலை ?                               --  பிரவீணா தங்கராஜ் . 

🐦சிட்டுக்குருவியின் ஏக்கம்🐦

தென்றலது தாலாட்ட தேகமது சிலிர்க்க நெல்வயலின் மத்தியிலே கிணற்றுநீர் தத்தளிக்க பகலவனதில் பிம்பம் பார்க்க ஓடும் நீர் தொட்டில் மஞ்சள் உரசி கதைப்பேசி குளித்திடும் மங்கைகள் கால்வாய் வரப்பில் நீர் சலசலக்க வெள்ளி முத்துக்களாய் நீர்குமிழ்கள் வெளிப்பட ஈச்சமரத்தினிலே இசைத்தபடி நான் இருந்தேன் எந்தன் வீட்டை நானே கட்டி இயற்கையோடு வாழ்ந்திருந்தேன் உந்தன் சுயநல எண்ணத்தால் குளிர் சாதன கருவியில் இடுக்கில் குப்பையாய் கட்டியப்படி ஏதோ பெயருக்கு வீடென அமைத்து எந்தன் மிஞ்சியிருக்கும் இனத்தை கா(கை)ப்பாற்றிக் கொள்கின்றேன் உன்னை போலவே என்னையும் செயற்கையாய் வாழ வைத்தாயே...  மனிதா...!                      -- பிரவீணா தங்கராஜ் .

தனித்தீவாய் உறவுகள்

Image
பட்சணங்கள் செய்து வைத்து பண்டிகையாய் வீடு நிறைந்து கள்வனாய் பண்டம் எடுக்க கண்ணனாய் மாறினேன் உறவுகள் படைச் சூழ உணர்வுகள் களிப்பைத் தர இன்பமாய் வாழ்ந்திருந்தோம் கூட்டுக் குடும்பமென ஒன்றுப் பெற்று உறவுத் தொலைத்து பண்டிகையும் பொலிவிழந்து தனித்தீவாய் தனிக் குடும்பம் ஆனதிங்கே                               -- பிரவீணா தங்கராஜ் .

நீயின்றி இருக்கும் நான்

விழிகள் கண்டு ரசித்து மகிழ்ந்த வையகத்தை நெஞ்சில் ஏதுமின்றி கரம் பற்றியபடி கதைப்பேசி கதைத்திடவே காதலன் ஒருவன் வருவனென்று காத்திருந்த கண்கள் பூத்துவிட்டது இளநரை வந்து இதயம் கனத்து இளவரசன் தேடிடும் முதிர்கன்னியாய் இப்படி இப்படியாய் தினம் நடக்கும் காட்சி பொருளாய் யொரு நாடகம் கானகத்தில் இருப்பதாய் தோன்றுதடா நெஞ்சம் கானகத்து குயிலாய் நீ வர மறுப்பது ஏனோ தேனீ சுவைக்காதா பூவின் மகரந்தம் நீரில் ஒட்டாத தாமரை இலை தென்றல் தீண்டாத ஜன்னல் கதவு ஓவியம் வரையாத துரிகையாக தனிமையில் நீயின்றி இருக்கும் நான்                             -- பிரவீணா தங்கராஜ் .

👅 நாக்கு👅

Image
அரையடி யுருவம் நீ ... ஆறடியை விழுங்கும் மாயம் நீ ... அமிர்தமாய் பேசிய நொடி நஞ்சாகவும் மாறிடும் ஜாலமும் நீ ... நொடிப்பொழுது மாறிடும்  உனக்கு அறுசுவை அறியும் பிராப்தம் தான் குழந்தை மனம் கொண்டு குழைவாய் பேசிடுவாய் ... கயவர்கள் கண்டு எதிர்க்க அரணாய் காத்திடுவாய் ... எடுத்துதெறிந்து பேசிட எங்கு தான் கற்றாயோ ...? எண்ணிலடங்கா ரணங்களை சொற்களில் வைத்தாயோ ... சாட்டையாய் சுழற்றியடிக்கும் வித்தை சாகசம் தான் உன் சிறுயுருவில் அனலாய் கொட்டிய வார்த்தை அள்ளிட முடியாது சிறு இதயம் துடிக்கும் சத்தம் உன்னில் சொல்லவில்லையா ? கூர் வாள் பேச்சு வேண்டாமே கூடுதல் ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் குறைவுப் பேச்சு போதுமே .                             --பிரவீணா தங்கராஜ் . 

பிரியாதே என்னுயிரே

விண்ணிலிருந்து வந்த அன்புத்தாரகை நீ வையகம் புகழும் குணப்பேரழகு நீ மதங்களும் ரணங்களும் வந்தாலும் மனதினில் பட்டாம்பூச்சி உன்னால் தள்ளி செல்லாதே காதலை தள்ளாதே மழைக்கால தேனீர் நீ யெனக்கு நிமிட நேர பிரிவையும் நீங்க மறுக்குது என்னிதயம் நேசங்கள் தந்தவளே என்னுயிரே பிரியாதே                 -- பிரவீணா தங்கராஜ் .

ஒரு பக்க கதை - கோழையின் மரணம்

Image
     கோழையின் மரணம்                                                      சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது.        ''போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்'' என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு 'இனி பேச வேண்டாம்' என அன்பு கட்டளை விடுத்தாள்.       ''என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி'' என பெரு மூச்சு விட்டு வெளியே கிளம்பினார்.                                 அம்பிகையும் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு தெளிவுப் பிறக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.        'சே! யாரும

பெண்ணிவள் முதிர்க்கன்னி

Image
நெஞ்சில் காதல் பொங்கி வழிந்ததால் வஞ்சியிவள் தனியே நடந்தாள்  கன்னியவள் மனம் அறிந்த ஏடு... கரம் பற்றி கதைப் பேசும் அவனது சுவடு வையகம் கண்ணில் வரமறுப்பாய்... காரிருள் நித்திரையில் கனவில் வருவாய்... முகமது நீ காட்ட மறுக்கின்றாய்... அகமது உன்னிடம் அடிமைக் கொள்வதாய்... பகலவனைப் போல வதைக்காதே... பனிமழையாய் எண்ணில் கலந்திடவா ! நினைவில் கனவில் உன்னை எண்ணி நித்தம் தொலைக்கின்றது என் தனிமை புரவியில் அமர்ந்து நீ வருவாயோ... தரணியில் வந்து கால் பதிப்பாயோ... பெண்ணிவள் முதிர்க்கன்னி யென்பதை உடைத்து உன்னவள் என்பதை உலகுக்கு காட்டு .                                       -- பிரவீணா தங்கராஜ் .

புரியாத புதிர் அவள்

Image
புரியாத புதிர்களின் தனக்குள் கொண்ட பெண்ணினம் முடிச்சுகளோ அவளுள் ஏராளம் தங்க பஸ்பம் பூசிய ஒளிர்வு மேனியவள உள்மனம் அறிந்தால் மட்டுமே விளங்கும் அகராதியவள் சிப்பியாய் மூடியிருக்கும் விழிக்குள் முத்தாய் மிளிரும் அறிவு சுடர் அவள் .                                 --- பிரவீணா தங்கராஜ் .

நீதி தேவதை

நீதி தேவதை எங்கே நியாயத்திற்கு  கண் திறந்தால் தன்னையும் வன்புணர்வு செய்திடுவார்களோயென அஞ்சிக்  கையில் நியாய தராசை ஆயுதமாகயேந்தி சர்வ ஜாக்கிரதையாக இருக்கின்றாள் .😠          -- பிரவீணா தங்கராஜ் .