Posts

சிரமமில்லாமல் சில கொலைகள் -2

Image
  சிரமமில்லாமல் சில கொலைகள் 🩸-2     சர்வேஷ் காபி பருகி முடித்து கனவு அது என்று தன்னையே நம்ப வைத்து கொண்டான்.       சாந்தனு தனது காதலியை பார்க்க செல்வதாக கடற்கரைக்கு கிளம்பினான். போகும் பொழுது சர்வேஷை பார்த்து,      "மச்சி நீயும் வர்றியா டா?" என்றான்.      இருகையை மேலுயுர்த்தி "வேண்டாம்டா சாமி... நீங்க லவ் பேர்ட்ஸ்... நான் என்ன மண்ணை அள்ளி வீடு கட்டவா போடா." என்று அனுப்பி விட்டு டிவியை ஆன் செய்தான்.      நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் பாடல் கேட்டவன் அடுத்து படத்தை மாற்றினான். 'கிங்காங்' நியூயார்க் நகரத்தை துவசம் செய்ய பத்து நிமிடம்  ஓட அனிமல் பிளனட் மாற்றினான். சிங்கமொன்று ஹைனாவை தூரத்த டிஸ்கவரி சேனல் மாற்றினான்.         பெயர் அறியா பறவை நீரில் முங்கி அழகாக நீந்தி செல்ல பார்த்து இரசித்தவன் அது முடிய நியூஸ் மாற்றினான்.     தமிழ் செய்திகளில் இருந்து டிராவல் கைய்டு என்ற ஆங்கில சேனலில் மாற்றினான். மீண்டும் பத்து நிமிடம் பார்த்து முடித்து மாற்றும் சமயம் பிபிசி செய்தி அலைவரிசை கண்ணில்பட்டது. அதில் நியூயார்க் சென்ட்ரல் பார்க்கில், இரவு  ஒரு பதினெட்டு

தீவிகை அவள் வரையனல் அவன் -16

Image
  தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥-16 தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...13

Image
  ( ௧௩) 13                 ருத்திரா மயங்கி சரிய புரவியில் மித்திரன் அவளை கிடத்தி  துர்வன் இருப்பிடம் செல்ல அதனை தன் யாகத்தின் தீயில் கண்டு ஆனந்தம் கொண்டான் துர்வன்.              இங்கு மித்திரன் இக்காரிகையை கண்டால் எம் மனமெங்கும் உவகை ஊற்று பெருகின்றது. இவளோடு என் நினைவு பயணம் ஏதோ சொப்பணத்தில் காண்பதாக தெரிகின்றது ஆனால் இப்பெண்ணை இதற்கு முன் பார்த்த நினைவு இல்லையே எதனால்... ? இவளை துர்வன் திருமணம் செய்ய போகும் உறவு என்று எந்தை சொன்னாரே அப்படி என்றால் எப்படி எமக்கு இவள் மீது உவகை வரலாம் ? யான் தமையனுக்கு தீங்கிழைக்கும் கயவனா ? நற்பிறப்பு அல்லாது மாக்கன் நானோ ?           எழில் கொஞ்சும் இவளை தமையனிடம் எந்தையிடமும் ஒப்படைத்து உயிர் துறக்க வேண்டும். அவதூறான எண்ணங்கள் கொண்டு அவதினியில் இருக்க கூடாது என்று புரவிக்கு வேகம் தொடுக்க பயணித்து அந்த இடுகாட்டிற்கு வந்து சேர்ந்தான்.            அங்கிருந்து புரவி மேதினியில் ஓசையிட்டு செல்ல மனதின் எண்ணம் தறிக்கெட்டதாக எண்ணினான்.                ( துர்வன்) பரிதி முன் வந்து நிறுத்தி பணிந்து "தமையன் மணம் புரியும் காரிகையினை கொண்டு வந்தோம

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...12

Image
     💟(௧௨) 12             தன் தந்தை உருவத்தில் துர்வன் சபைக்கு வர சபையே விழி விரித்து காண ராணியின்  கண்கள் கணவன் பிணி நீங்கி எழுந்து நடமாடுவதை கண்டு அதிசயமாக காண நேராக வந்த துர்வன் நாவலுர் வீரன் மடலை கொண்டு வந்தவனிடம்       "தங்கள் அரசனை காண நான் வருவதாக கூறுங்கள்" என்று சொல்ல அவ்வீரன் பணிந்து சென்றான். கணவன்  பரிதி செங்குட்டவன் கண்டு       "பிரபு தங்கள் பிணி நீங்கிவிட்டீர்களா... வனத்திற்கு சென்ற தாங்கள் சிரத்தில் மோதி ஆழ் நித்திரை சென்று விட்டீர்கள். உயிர் சுவாசம் சென்று வந்ததால் அரசவை வைத்தியர் ஏதோவொரு மூலிகை பறித்து வர சொன்னார் அது மேதினியில் கிட்டாமல் போக... துர்வன் தங்கள் பிணி நீங்க... நீங்க.." என்றே திக்கி திணறி செப்ப இயலாது தவிக்க       "அறிந்து கொண்டோம் அன்..." அன்னை என்று சொல்ல வந்தவன் நிறுத்தி கொண்டு      "இனி மாற்ற இயலாத நிலை... மற்றவையை யாமே பார்த்து கொள்கின்றோம்" என்று வேக நடையிட்டு செல்ல மாதங்கி போகும் பரிதியினை வியப்பாக தான் கண்டு களித்தார்.               நாவலூர் அரசனை கான துர்வன் பரிதி செங்குட்டவன் தோற்றத்தில் செ

தீவிகை அவள் வரையனல் அவன் - 15

Image
  தீவிகை அவள் வரையனல் அவன்    கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது.  pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம். 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...11

Image
     💟 ( ௧௧)11                                    உறங்கா இரவுகள் கடக்க... மஞ்சரி தான் வேகமாக ருத்திரா அறையில் நுழைந்தாள்.          மஞ்சரி நுழைந்ததும் விழி நீர் சிந்தியதை துடைத்து எறிந்து மறைக்க         ''எதற்கு மறைக்கின்றாய் அதான் நீ கேவலிட்டு வந்து நின்றதை யார் அறிவாரோ இல்லையோ உயிர் சிநேகிதி யாம் அறியாது போகுமோ? உமக்கே நன்கு புலப்பட்டது தானே? அந்த துர்வனின் கயமையில் ஒரு பங்கும் மித்திரனுக்கு அல்ல என்பது.. அப்படி இருக்க எதற்கு இந்த விஷபரீட்சை சொல் ருத்திரா?''     ''நியாயம்.. அதுவே.. எமக்கு போதித்தது எதிரில் நிற்பவர் யாராக இருப்பினும் உண்மை நியாயம் மட்டுமே யாம் அறிந்து நடப்போம்''      ''ஒருவர் செய்த தவறுக்கு நீ தவறே செய்யாத உம் காதலனை தண்டிக்க செய்கின்றாய்... இது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது''      ''துர்வனுக்கு உடன் பிறப்பாய் வந்தமைந்தது தவறே...''      ''தவறு தான் உம்மை பார்த்த நொடி விரும்பி உமக்கு எவ்வித கெடுதலும் ஏற்பாடா வண்ணம் உமது பின்னால் தொடர்ந்தானே தவறு தான். தனது தமையனின் முன் நியாயம் பேசி எம்மையும் உம்ம

சிரமமில்லாமல் சில கொலைகள் -1

Image
                     *சிரமமில்லாமல் சில கொலைகள்* ஆல்பா தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும் ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலிருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல. இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கையாக ஏற்படுவது. இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத்தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக்கும். *ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண்ணற்ற காரியங்களை சாதிக்கலாம்*                                                                            🩸-1          சர்வேஷ் தனது நண்பர்களோடு மூன்று தினமாக கோவா சுற்றுலா சென்று சோர்வோடு வீட்டுக்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.      அவன் தங்கும் அப்பார்ட்மெண்டில் தங்கும் இடத்தை பகிரும் சாந்தனு அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தான். &qu