Posts

பாட்டியின் பால்யம்

Image
பாட்டியின் பால்யம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

குழந்தையின் மணல் கோட்டை

Image
                        ஆழி அருகே வடிவாய்... சோழி பொருக்கி சித்திரமாய்... கள்ளமில்லா பிள்ளை உள்ளம் இல்லம் ஒன்றை கட்டிடவே காற்றும் இதமாய் வீசியதோ... காவலாய் கரம் பற்றியதோ... கனவு என்றே நினையாதே காலம் சொல்லிடும் நிஜமாக காத்திரு அதுவரை கடலலையே. . .                            -- பிரவீணா தங்கராஜ் 

தோழிகளின் வட்ட மேஜையில்

சுருக்கென்று வந்திடும் சினங்களெல்லாம் எங்கே தான் சென்றிடுமோ ! மனதை மறைத்து பேசிட வேண்டுமென்று எண்ணங்கள் எல்லாம் தோன்றாதது ஏனோ ! நாழிகள் நொடிகளாக மாறிடும் விந்தைகள் இங்கு தானோ ! ஆயிரம் கிண்டல் கேலி செய்திட்ட போதும் புன்னகையோடு பேசிடும் முகங்கள் தானோ ! குழந்தை குட்டி குடும்பம் யென இத்யாதிகளை சிறிது நேரம் விட்டுவிட்டு நாம் நாமாக வாழ்ந்திட்ட நேரம்தானே  ! தோழிகளின் வட்ட மேஜையில் .

உயிர் மீட்கும் காதல்

ஒரு வாரம் ஓடிப்போனது அச்சண்டையின் பாதிப்பு இருவரும் பேசாமடந்தையாக  உன் ஒவ்வொரு அசைவையும் பார்த்துப் பார்த்து எப்பொழுது பேசுவாயென சிறு இதயம் ஏங்கியே தவித்து நீண்ட மனப்போராட்டத்திற்கு பின் உன் கம்பீரத்திற்கு குறைவு வந்திடாது ஒரு வழியாய் மவுனத்திற்கு விடை கொடுத்து உன்னிடமே கேட்டு விட்டேன் எப்படி உன்னால் மட்டும் என் பார்வையை புறக்கணித்து என் மேனியை தழுவாது என் மூச்சை சுவாசிக்காது எப்படி இருக்க முடிகின்றதென்று நீயோ என் கண்களை ஆழமாகப் பார்த்து சுவாதீனமாக கூறுகின்றாய் உயிரற்ற உடலுக்கு என்ன தெரியும் நீ பேசிய பின்பு தானே உயிர் வந்தது என்கிறாய்...                       பிரவீணா தங்கராஜ் .

மெழுகானாய் பெண்ணே...

Image
வலிகள் நிறைந்த வாழ்க்கையடி பெண்ணே...! துன்பங்கள் களைந்திடும் வித்தையறிவாய் கண்ணே...! உடல்வலிமை உன்னிடமில்லை யென்றால் யென்ன அகவலிமை ஆட்கொள்ளும் இறையும் நீயே...! தாயாய் தமக்கையாய் மனைவியாய் மகவாய்.. தன்னலம் பார்க்காது வாழும் தாரகையொளியே..! சுடராய் நீயொளிவீசி வெளிச்சம் தர  , சுற்றுதடி மண்ணுலகம் யுன்னை போற்றியே...!                                  -- பிரவீணா தங்கராஜ் .

பிரபஞ்சம் நீயே...

Image
பச்சை பசுஞ்சோலை நந்தவனத்தில்  பாவை யென்னுயிராய் வந்தவளே...! பிரபஞ்சம் நீயே என்றுணர்ந்து பாதம் மடித்தே கை பற்றுகின்றேன் விண்ணிலிருந்து வந்த தேவதையே...! வையத்தில் வாழும் தாரகையே...! வெய்யோனின் கதிரொளி சாட்சியில் வேந்தனான் மணம் புரிய ஆசைக்கொண்டேன் தாமரை வண்ணாடை நீயுடுத்தி தாமரையாய் யென்மனதை சிதைத்ததென்ன தாமரை மலர் கரத்தில் மொட்டாய்... தவிக்கிறது யென்னிதயம் இதழ் பதிக்க புன்னகை மிதமாய் வீசி விட்டாய்... புவிதனில் எந்தன் பாதம் சிறகிட்டது பூவிதழ் மெல்ல நீ திறந்து புதிரை விடுத்திடு மையல் சொல்லியே...!                                                      -- பிரவீணா தங்கராஜ் .

மீண்டும் ஒரு தாஜ்மஹால்

Image
தாஜ்மஹாலின் அழகைக்காண மும்தாஜே வருகை என்னவளின் எழிலில் உயிர் ஓவியமாய்...!                                     -- பிரவீணா தங்கராஜ் .

என்னை சிலையாக்கி விட்டாய்- காதல் பிதற்றல் 37

நெற்றி வகிட்டில் குங்குமமிட்டு தொங்கும் காதணியை காதுக்கு ஊஞ்சலாக்கி விற்புருவத்திற்கு வாள் போல்  கூர்தீட்டி துள்ளும் விழிகளுக்கு மையிட்டு கண்ணாடி வளையல் சப்தம் எழுப்ப முத்துமாலையை கழுத்துக்கு அணிவித்தே முகம் நிறைய புன்னகை பூசி நின்று வெள்ளி கொலுசொலி சினுங்க உன்னிடம் வந்து நின்றேன்  நீ சிலையாக நீயோ சாதாரணமாக கேசத்தை கலைத்து பெயருக்கு வாரியப்படி ஒற்றை கைக்கடிகாரத்தை உந்தன் இடது கையில் கட்டியவாறு மொத்த கம்பீரத்தையும் அழகையும் உனக்கே சொந்தமாக்கி என்னை சிலையாக்கி விட்டாய்...!                         -- பிரவீணா தங்கராஜ் .

பணிப்பெண்

மிக பிடித்த வண்ணங்கள் கொண்ட ஆடைகளை பரப்பி மெல்ல மெல்ல தொட்டு பார்த்து பார்த்து ரசித்து விலைப்பட்டியல் போடுமிடத்திற்கு அனுப்பிவைத்தாயிற்று இனி அடுத்த வாடிக்கையாளர் வரும் வரை கலைந்த புத்தாடையை தன் தோளில் பின் குத்தியே கிழிச்சலை அடைந்த நிறமிழந்தயாடையை  மறைத்த படி மடித்து வைத்து சில ஏக்கத்தையும் வறுமையையும் புதைத்தே அடுத்த வண்ணயாடையை  எடுத்துக் காட்ட தயாரானாள் பணிப்பெண்.                                -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்ல மறந்ததை

ஏதோவொன்றை சொல்லாமல் விடுத்து சென்றாய்...! எண்ணிலடங்கா எண்ணத்தை விதைத்தே சென்றாய்...! நீ சொல்ல மறந்ததை நினைத்து நினைத்து நீ சொல்லி யிருக்கலாம் யென்று தவித்து நினைவுக் கோப்பையில் மருகி லயித்து நித்திரையை தள்ளி வைத்து போராடுகிறேன் தினம் தினம் சித்திரவதையாய்...!                          -- பிரவீணா தங்கராஜ் .