ஸ்டாபெர்ரி பெண்ணே-15
🍓15
அதிகாலை இருவருக்கும் ஏன் தான் வந்தது என்றே எண்ணி
எழுந்தார்கள். ஆராதனா குளித்து முடித்து தனது அறையிலே காபி பருகி
முடித்தாள். வெளியே வர மறுத்தாள்.
வெற்றியோ... உதய் வரும் வரை இங்கு இருக்கும் ஜெஸில் தன்னிடம்
பேசாவிட்டலும் பரவாயில்லை தன்னோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டி
வந்தான்.
''தம்பி ஆராதனா அப்பறம் சாப்பிட்டு கொள்கின்றார்களாம் நீங்க சாப்பிடுங்க" என்றே சொல்லி பரிமாற
''லட்சுமி அம்மா அவள் இங்க இருக்கற காலம் குறைவு அதனால இருக்கற
கொஞ்ச நேரமும் சேர்ந்து சாப்பிட வர சொல்லுங்க.. இது நான் கெஞ்சி
கேட்டுக்கறதா சொல்லுங்க'' என்றே சொல்லி அனுப்ப அவரும் அறைக்கு சென்று
சொல்ல... வெற்றி தன்னிடம் கெஞ்சுவது பிடிக்காமல் ஆராதனா(அவன் கெஞ்சினா
உனக்கு என்னம்மா) அமைதியாக வந்து உண்டாள்.
அவளை பார்க்க செய்யவில்லை.. இருந்தாலும் அவளின் அருகாமை இருக்கின்றது என்றே எண்ணி அவனும் சாப்பிட்டு கிளம்பினான்.
ஆராதனாவோ மனதில் இவன் கூட உட்கார்ந்து சாப்பிட சொன்னான் ஆனா
இவன் என்னை நிமிர்ந்து ஒரு முறை பார்த்தா என்னவாம்... நான் தான்
எதுக்கு(எதுக்கு என்று தெரிலையா அப்போ கன்போர்ம்) என்றே தெரியாம அவனையே
பார்த்துகிட்டு இருந்தேன். சே எனக்கு என்ன ஆச்சு? என்றே எண்ணியவள் மாத்திரை
விழுங்கினாள். தனது ஆபிஸ் சென்று தெரிந்த தோழிகளிடம் பேசி முடித்தாள்.
அவர்களோடு மதியம் லன்ச் முடித்தாள்.
அவர்கள் பேச்சில்
''ஹே இந்த மாதம் சிறந்த ஏற்றுமதி நிறுவனம் என்று VS கம்பெனி பெயர்
வாங்கி இருக்குப்பா... அவங்க பேக் எல்லாம் டிசைன் வித்தியாசமா இருக்காம்
எங்க அண்ணி கூட சொன்னாங்க''
''ஏய் பேக் விட அந்த கம்பெனி நிர்வாகம் செய்யற வெற்றிசெல்வன் பார்த்திருக்கியா? ஆள் சும்மா ஹீரோ மாதிரி இருப்பான் தெரியுமா?''
''அவனுக்கு கல்யாணம் ஆச்சா?''
''இல்லை... ஸ்டில் சிங்கிள்....'' என்றே சொல்லி கொள்ள அங்கிருந்த
ஆராதனாவுக்கு VS கம்பெனி வெற்றியுடையது அல்லவா? இவர்கள் பேசும் வெற்றி
செல்வன் தனது செல்வா தானா? என்றே அவனின் முகநூலில் பார்க்க அவன் அதனை
அறிவித்து இருந்தான் அதில்...
மேலும் இவளின் ப்ரெண்ட்ஸ் ரெகுஸ்ட் அக்ஸ்ஸப்ட் செய்து இருந்தான்.
அதில் அவளின் 'ஜெஸில் செல்வா' என்ற பெயர் கொண்டதை கண்டும் அதனை மாற்ற
எண்ணம் வராமல் அப்படியே இருந்தாள்.(y பேபி)
உள் மனமோ ஏன் மாற்றவில்லை? என்றே கேட்டுக்கொண்டாலும் அதற்கு அவள்
விளக்கம் அளிக்கவில்லை... உதய் அவனிடம் பேசணும்... எதுக்கு அவன் என்னை
விட்டுட்டு வந்தான்? அவன் எதுக்கு வேறொருத்தியை மணக்க போகின்றான்? என்பதை
மட்டும் கேட்டு தெளிவாக்க வேண்டும் என்றே காத்திருந்தாள்.
மாலையில் வீட்டுக்கு வந்து இருந்தாள் அங்கே வெற்றி
அமர்ந்து இருந்தான். இவளின் வருகை கண்டு பார்த்தவன் மீண்டும் தனது பணியில்
கவனிக்க செய்தான்.
'ஒரு வார்த்தை எங்க போன? என்று கேட்கறானா? அக்கடான்னு இருக்கான்...
ஒருத்தி நம்ம வீட்டில் இருக்கா என்ன எது என்று ஒரு வார்த்தை ஹ்ம்ம்...
இவனுக்கு எப்படி என் மேல லவ் வந்துச்சு? என்றே யோசித்தவள் தான் இரு தினமாக
வெற்றியை அதிகமாக நினைப்பதை எண்ணினாள். அதுவும் அவன் தன்னை பார்க்க
வேண்டும் பேச வேண்டும் என்ற ரீதியில் மனம் எண்ணுவதை எண்ணி வியந்தாள்.
இரவு உணவும் அவளுக்கு பிடித்த உணவாய் சமைத்து இருக்க லட்சுமி அம்மா கிட்சேனுள் அடைய வெற்றிக்கு பரிமாற எண்ணி அழைக்க
''ஆராதனா நான் மாவு அள்ளிட்டு இருக்கேன் நீயே தம்பிக்கு பரிமாறிடும்மா'' என்றார்.
வெற்றி தானாக எழுந்து எடுத்து உணவை சாப்பிட செல்ல ஆராதனா அவனை
நிறுத்த சொல்லி கையை காட்டி அவளாக அவனுக்கு பரிமாறினாள். அவன் மறுக்கவும்
இல்லை. எல்லாம் தனக்கு கிடைக்கும் பொக்கிஷ நினைவாக எண்ணி கொண்டான். என்ன
அவளும் பேசவில்லை அவனும் தான்.
அவளும் தனக்கு தேவையானதை எடுத்து உண்ண செய்தாள். அப்பொழுது தான்
உதய் கூட அவனின் வீட்டில் இந்த உரிமை இல்லாமல் தான் உணவை உண்ண யசோதித்தது
நினைவு வந்தது. இத்தனைக்கும் உதய் தாயார் அவளை கவனிக்கவே செய்தார்கள் அன்று
மருமகளாக வர போகின்ற பெண் என்றே கவனித்தார்கள். அப்பொழுது எல்லாம் தான்
இவ்விட்டின் மருமகள் என்ற உணர்வு வராமல் தயங்கிய உண்டாள்.
ஆனால் இங்கோ தனக்கு துளியும் சம்மந்தம் இல்லாத வீடு
ஆனாலும் அப்படி அவளுக்கு தோன்றவில்லை. ஏதோ இந்த வீட்டின் உரிமை உள்ளவள்
போல் வெற்றி செல்வனுக்கு பரிமாற வேறு செய்கின்றாள்... அவளுக்கே அதிசயமாக
தோன்றியது.
''நாளைக்கு உதய் வந்திடுவான்....'' என்றாள் ஆராதனா.
''ஹ்ம்ம் தெரியும் ஜெஸில் சுந்தர்... சொல்லிட்டான்'' என்றான் வெற்றி.
எல்லாம் தெரிந்தும் எவ்ளோ கூலா இருக்கான்.
இவனுக்கு நான் இங்க இருந்து போறது பற்றி கவலையே இல்லையா? என்றே திட்டினாள்.
''ஜெஸில்.... நானும் உன்கூட வரலாமா? நான் எதுவும் பேச மாட்டேன்...
உன்னை அழைச்சுக்கிட்டு போற டிரைவர் வேலை மட்டும் கொடு'' என்றே கேட்க ஆராதனா
உள்ளுக்குள் நொந்து போனாள்.
அவனின் கம்பெனி இருக்கும் நிலை என்ன? அவனின் நிலை என்ன? எனக்கு
கார் ஓட்டும் ஒரு ஆளாக கூட வர துடிக்கிறான் அவனுக்கு நான் அப்படி என்ன
செய்தேன்... இல்லை அவன் என் மீது இவ்வளவு காதல் கொள்ள என்றே எண்ணி
பேச்சிழந்து போனாள்.
''ஜெஸில்...''
''ஆஹ்... ஹ்ம்ம் வாங்க'' என்றே சொல்லி விட ஒரு புன்னகையோடு எழுந்து கொண்டான்.
எல்லாம் சாப்பிட்டு முடித்தும் வெறும் தட்டில் கோலமிட்டு கொண்டு இருந்தவளை லட்சுமி அம்மா தான் உலுக்கினாள்.
''என்னம்மா யோசனை?''
''ஒன்னு.. ஒன்னுமில்லை.. ம்மா'' என்றே எழுந்தாள்.
உறக்கம் இருவருக்கும் எப்படி வரும்? ஆராதனவுக்கோ
நாளை உதய் கூறும் காரணம் ஏற்றுக் கொள்ளும் படி இருப்பின் என்ன செய்ய உதய்
தன்னிடம் அவனை திருமணம் செய்ய கேட்டுவிட்டாள்? வெற்றி நொறுங்கி விடுவான்...
அப்படி இல்லாமல் உதய் தன்னை மறுத்தால்... தனது நிலை? என்றே எண்ணி பார்க்க
ஆராதனா அப்படி ஒன்றும் மனம் நொறுங்கி போகவில்லை..
எதனால் ஒன்றை வருடம் காதலித்த தனது காதல் தன்னை விட்டு
செல்கின்றது அப்படி இருந்தும் வலியை உணர முடியவில்லை ஆனால் ஆறு மாதமாக
வெற்றி தன்னை ஒரு தலையாக விரும்புகின்றான் அதனை எண்ணி அவன் மனம் வலிக்கும்
என்றே எண்ணி பார்க்கவே தனக்கு உள்ளுக்குள் பெரும் வலி எழுகின்றது எதனால்?
என்றே தவித்தாள்.
வெற்றிக்கோ எங்கே உதய் ஆராதனா அதிகம் தொல்லை செய்தாளோ அவன் தன்னை கை
நழுவுகின்றான் என்ற ஆத்திரத்தில் ஆராதனா ஏதேனும் கேட்க உதய் அவளின் பெண்மை
இழந்த நிலையை சொல்லி அவளை நோகடிப்பானோ என்றே வருந்தினான்.
இதை எல்லாம் அறியாத உதய் குல தெய்வ கோவிலில் தனக்கு
திருமணம் பத்திரிகை எடுத்து கோவிலில் வைத்து வழிபட்டு கிளம்பினான்.
-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.
கருத்துக்கள் இதிலும் போட்டா எனக்கு இன்னமும் ஹாப்பியா இருக்கும். 😊
Very nice
ReplyDeleteஎன்ன நடக்குமோ என்று பதட்டமாக உள்ளது.😟😳😟😳
ReplyDeleteVery nice
ReplyDeleteVery nice
ReplyDelete