ஸ்டாபெர்ரி பெண்ணே-4

 🍓4 
          இசிஆர் ரோட்டில் ஒரு வீட்டில் வாகனம் செல்ல அவனின் வருகை உணர்ந்து கேட் கதவு திறந்தே வெளிபட்டது.
          ஆராதனாவுக்கு கண்கள் தெரித்துவிடுவது போல இருந்தன. இந்த இடம் இதுக்கு முன்ன பார்த்த நினைவு இல்லையே... இவரையும்... என்றே வெற்றியை பார்க்க அவனோ ''இறங்கு'' என்றான்.
          சே எனக்கு தான் நினைவு போய்டுச்சு என்று சொல்லி இருக்காங்க அப்போ எப்படி இந்த வீடு இவர் எல்லாம் நினைவு இருக்கும் ஆனா இவர் என் பேர் வச்சியே கூப்பிடலை என்றே எண்ணியவளுக்கு
      ''என் பேர் என்ன....? அப்பறம் உங்க பேர் என்ன? நான் உங்களுக்கு என்ன உறவு டாக்டர் கார்டியன் என்று சொல்லி இருக்காங்க... ?'' என்றே கேள்வி மேல் கேள்வி கேட்பவளை எண்ணி வாயில் விரல் வைத்து கண்களை முன் பக்கம் காட்டினான்.
        அங்கே ஒரு நடுத்தர பெண்மணி ஆரத்தி சுற்றி கொண்டு இருந்தாள். முகமெங்கும் புன்னகையோடு சுற்றி குங்குமம் இட்டாள். வெற்றியோ மனதில் அவளிடம் சொல்லாமலே அவள் கால் வலது எடுத்து நுழைய வேண்டும் என்றே எண்ணி வேண்ட அவளும் அதற்கு ஏற்றார் போல வலது பாதத்தினை வைத்தே நடந்தாள். உள்ளுக்குள் மகிழ்ந்து போனவன் நொடியில் இவள் வீட்டுக்கு போன பிறகு பெயர் கேட்பா என்ன சொல்றது? ஆராதனா சொல்லிடலாம்....? வேண்டாம் உதய் இவளை ஆரு ஆரு என்றே அழைத்தது நினைத்து அந்த பேர் இப்பொழுது சொல்லும் எண்ணம் மறைந்தது.
               வெற்றி யூகித்த மாதிரியே உள்ளே வந்தவள் ஹாலை கண்களால் அளவெடுத்தவள் என் பேர் என்ன? நீங்க சொல்லவே மாற்றிங்க? என்றே நிறுத்த
      ''ஜெஸில்.... போதுமா'' என்றான்(enchanted movie ல gesil நினைக்கிறேன் நான் ஜெஸில் வச்சி இருக்கேன்)
      ''ஜெஸில் லா? இப்படி கூடவா இருக்கும்... சரி உங்க பேர் என்ன? நான் உங்களை எப்படி... கூப்பிட... நமக்குள் என்ன உற...'' என்றே முழுமையாக கேட்க முடியாமல் தடுமாற
      ''என் பெயர் வெற்றி செல்வன்.... நான் உன் கார்டியன் இப்பொழுது இது போதும் மெல்ல மெல்ல எல்லாம் தெரிஞ்சுக்கலாம்... இப்போ போய் ரெஸ்ட் எடு'' என்றே கூற அவளுக்கும் வந்தவுடன் எதற்கு என்றே அமைதியானாள்.
      ''என் ரூம் எது?'' என்றே கேட்க கீழே இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று கதவை திறந்து இது தான் இங்க ப்ரெஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம்'' என்றே மாடிக்கு ஏறினான். அவன் படிக்கட்டில் டக் டக் என்று செல்வது கேட்டு அறைக்குள் யோசித்தவாறு நுழைந்தாள்.
         இந்த ரூம் இதுக்கு முன்ன பார்த்த மாதிரியே இல்லை... என் நினைவு இப்படி சுத்தமா மறந்து போச்சு... சே கண்ணை முடினாலே யாரோ என்னை காரில் தள்ளி விடுறது தான் நினைவு வருது. வேற ஒன்றும் தோணலை... என்றே தலையில் கை வைத்து அழுத்த அவர் சொல்லியது போல முதலில் மெல்ல மெல்ல தெரிந்துக் கொள்ளலாம்... என்றே குளியலுக்கு சென்றாள்.
           மேலே சென்ற வெற்றிக்கு நடப்பது எல்லாம் நம்பவே முடியவில்லை... ஆராதனா அவனின் இல்லத்தில் இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவளை எண்ணி கொண்டே குளிக்க சென்றவன் நினைவு வந்தவனாக வெளியே வந்தான். தனது தாயின் சேலை ஒன்றை தேடினான். எடுத்துக் கொண்டு ஓடினான் ஜெஸில்... ஜெஸில்... என்றே தட்டிட அறை கதவில் வந்து நின்று முறைத்தாள்.
     ''இந்தா இந்த சேலை அணிந்து கொள் உன் டிரஸ் அரை மணி நேரத்தில் வந்திடும்'' என்றே சொல்ல வாங்கி கொண்டாள். பின்ன அறைக்கு வந்த பிறகும் அவளின் உடை எந்த கப்போர்டில் இல்லை என்றதும் இருக்கும் எல்லா கப்போர்டில் தேடி ஓய்ந்து இருக்க கதவை தட்டினான் வெற்றி.
           வெற்றி உடனே போன் எடுத்து சுந்தருக்கு கால் செய்து உடையை எல்லா ரக வாரியத்தில் அனுப்ப சொல்லிட அவனும் உடனே ஓகே பாஸ் என்றே அனுப்பி வைக்கிறேன் என்றே முடித்தான். வெற்றி மீண்டும் அறைக்கு சென்று குளித்து வந்தான்.
         தனது தாய் இளமையில் கட்டிய சேலை பிளவுஸ் என்பதால் ஓரளவு ஆராதனாவுக்கு பொருந்தியது. இருந்தும் கொஞ்சம் தொளதொளவென இருக்க
    ''இது என் டிரஸ் தானா?'' என்றே கேட்டவாறு வர
     ''உன்னோடையது தான்..நீ ஹாஸ்பிடலில் இருக்கும் பொழுது மெலிந்து விட்டாய் அதான்'' என்றே பொய் உரைதான்.
      ''சரி எந்த கபோர்டிலும் என் டிரஸ் இல்லையே எல்லாம் எங்க?''
      ''இன்னும் அரை மணி நேரத்தில் வந்திடும் ஜெஸில்.. ப்ளீஸ்.. முன்ன இருந்த ட்ரெஸ் எல்லாம் வேற ஒருத்தங்களுக்கு கொடுத்தாச்சு'' என்றே உணவை உண்ண
      ''அதெப்படி எதுவும் இல்லை... ''என்றே கேட்க
      ''பேசாம சாப்பிடு எல்லாம் அரை மணி நேரத்தில் வந்திடும்''
             இவருக்கு என்னவாம் இப்படி தொளதொளன்னு டிரஸ் போடுறது எனக்கு இல்லை தெரியும்' என்றே அவளும் பேசாமல் சாப்பிட்டாள். சாப்பிட செய்யும் பொழுதும் பார்வைகளை சுற்றியே உண்ண வெற்றிக்கு தான் மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
           லட்சுமி அம்மா வேறு தன்னை உற்று நோக்கி கொண்டு இருக்க வேலை செய்யும் எல்லோரும் கூட புதிதாக பார்ப்பது போல தோன்றியது.
        ஏற்கனவே சுந்தர் வந்து பாஸ் ஒரு பெண்ணை அழைத்து வருவார் அவங்க இந்த வீட்டின் எஜமானி அம்மா இப்போ அவர்களுக்கு நினைவு அழிஞ்சுடுச்சு அதனால அவர்கள் இந்த வீட்டில் வளர்ந்த பெண் போல பாவிச்சு பேசி இருக்கனும் அவர்களுக்கு எப்பொழுதும் இந்த வீட்டில் வளர்ந்த உணர்வு வரணும் என்றே சொல்லியதும் எல்லோரும் சரி என்றே தலையை அசைத்தார்கள். என்ன இருந்தும் ஆராதனாவை பார்க்கும் பொழுது புதிதாக தானே பார்க்க தோன்றும்.
          இந்த வீட்டில் எல்லோரும் புதிதாக பார்க்கும் உணர்வே வர ஆராதனாவுக்கு தான் எதுவும் தோன்றாமல் பசியினை முதலாகி உண்டாள்.
        அதற்குள் ஆடைகள் எல்லாம் சுடிதார் மிடி ஜீன் நயிட்டி த்ரீ பை போர்த் இன்னவர் என்றே வந்து அறைக்குள் அடைத்தான்.
         அதை எல்லாம் பார்த்த ஆராதனா அதனை எடுத்து கப்போர்டில் வைத்தாள். எல்லாம் அடுக்கி வைத்து நிமிர்ந்தவள் தனது அறையின் ஒவொரு இடம் நோக்கி அமர்ந்து பார்த்தாள். ஜன்னல் திரை சீலை அருகே நின்று பார்த்தால் கட்டிலில் உறங்கி பார்த்தால் எல்லாவற்றிலும் முன்பு அனுபவித்த சுவடு தோன்றவே இல்லை. பால்கனி பூக்கள் சேர் என்று ஒரு இடத்திலும் தான் முன்பு அமர்ந்து இருந்த நினைவு வரவே இல்லை... அலுத்து போய் வெளியே வந்து ஹாலில் சுற்றி மீண்டும் கண்களை சுழற்றினாள்.
         அங்கும் எதையும் முன்பு பார்த்த நினைவு வராமல் போகவே கடுப்பாக ஆகினாள். எப்படி இந்த மாதரி இருக்கும் ஒரு பொருளாவது என் நினைவு வரும் பார்த்தா இப்படி இருக்கே... என்றே சலித்தாள்.
         உள்ளே வெற்றியோ அவளுக்கு இங்க ஒரு இடமும் நினைவு வராது எப்படியும் தலையை பிச்சுக்குவா பாவம் என்ன தான் செய்ய அவளை நினைவு தெரிந்தா தன்னை விட்டு அல்லவா போயிடுவா அப்படி இருக்க எப்படி? அவளுக்கு நினைவு தெரியவே கூடாது. ஆனா அவளுக்கு என் மேல காதல் வரணும் என்னை அவள் ஏற்றுக்கொள்ளனும் என் வாழ்வில் அவள் வரணும் எப்படி? என்றே யோசித்தவனுக்கு ஒன்றும் புரியாமல் போக உறங்க சென்றான்.
         ஆராதனாவும் உறங்க சென்றாள்.

-தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 

Comments

  1. ஆனாலும் அவளை அதிகம் அல்லல் படுத்தாதே....

    ReplyDelete
    Replies
    1. அவ தான் படுத்துவா haha

      Delete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1