Posts

காதல் பிதற்றல்-16 இரசிக்க செல்கின்றது

ஆயிரம் சண்டைகள் நமக்குள் வந்து செல்லும் போதும் கூட சண்டையின் இடைவெளியில் உன் விழியை சந்திக்கும் போது சில நொடிகள் கண்களை  இரசிக்க தான் செல்கின்றது என் மனம்     -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல்-15 ஹைக்கூ நீயடா

ஒரு வாக்கியம் பேசி முடிக்கும் இடத்தில் ஒரு வார்த்தையில் பேசி செல்கின்றாய் ... அப்பொழுதுதான் உணர்ந்தேன் ஹைக்கூ-வும் சிறந்ததென்று .        - பிரவீணா தங்கராஜ் .

ரொட்டித்துண்டு

அடுமனை அருகே நிச்சயம் உணவிருக்கும் ஈன்ற குழந்தைக்கு உணவைத் தேடி ஓடித்  தான் புறப்பட்டேன்  கண்டேன்  கவலையுற்றேன் ஒரு சிப்பம் அடங்கிய ரொட்டித்துண்டுகள் இருக்கவே  செய்தன ... கூடவே , பிறந்த சில மணித்துளிகளான குழந்தையும் தான் . யாரோ யாருடனோ கூடலில் பெற்ற குழந்தை தான் அவ்வழி சென்றவர்கள் எல்லோரும் 'எந்த நாய் ஜென்மங்கள் இப்படி பெற்றெடுத்து குப்பையில் போட்டனர்களோ ' வென சொல்லாமல் இல்லை சிறிது நாழிகையில் இறந்த சிசுவை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர் கண்ணில் கண்ணீரோடு சிப்பத்தை கவ்வியபடி நான் ஈன்ற என் ஐந்து செல்வத்தின் முன் போட்டேன் சண்டை போட்டாலும் பகிர்ந்தே உண்டு முடித்தனர் எனக்கும் உணவு இருக்கத்தான் செய்தன ஏதோவொன்று சாப்பிட தடுத்தது மனித குழந்தை தான் - அது ஒன்றும் நான் பெற்று எடுத்த நாய்குட்டிகள் அல்ல .. இருப்பினும் ஏனோ ... ஏதோ... ரொட்டித்துண்டினை சாப்பிட தடுத்தது .                     -- பிரவீணா தங்கராஜ் .

நான் பெண்

மென்சாரால் மேகத்தினுள் இறங்கி மென்பாதத்தில் தேடி ஓடி வந்திட , அதற்கு கண்ணாமூச்சி காட்டியப்படி அரசுப் பயணியர் நிழற்குடையில் ஒதுங்கிட, என்னை போலவே சிலர் மென்சாரலுக்கு கண்டு உவகையோடு உள்வந்தனர். சொட்டு சொட்டாய் சொட்டுகையிலே - என் சொர்க்கமாக கண்டுலயித்தேன்- எங்கிருந்தோ துர்நாற்றம் புகை வந்துவீச திரும்பினேன் துருவனோருவன் புகைத்துக் கொண்டுயிருந்தான் மழையென்றால் என்போன்றோர் இரசிக்க மண்போன்றோர் புகைப்பார் போல நமக்கேன் வம்பென பேருந்தினை எதிர்நோக்கினேன் நங்கையொருத்தி வயிற்றில் சிசுவோடு இரும்பிட இம்முறை அமைதிகாக்க மனமொப்பவில்லை... இதே ஆணாக பிறந்திருந்தால் தவறை எடுத்துரைபேனோ ? நான் பெண்ணாக பிறந்துவிட்டேனே ...😔 நானெனும் உள்மனம் சினத்தைமட்டும் தகிக்க கனல்களை கண்களில் கொண்டு வந்தேன் -என் கண்களில் அவன் தவறை கண்டு உணர்ந்தானோ ?! அவனே ' சாரி சிஸ்டர் ' என்று ஆங்கிலத்தில் நயமாக சொல்லி நகர்ந்தே போய்த்தொலைந்தான் நானும் உணர்ந்தேன் அப்பொழுதுதான் ஆணின் பேச்சில் புரியவைக்கும் ஒன்றை பெண்ணின் பார்வை கூட உணர்ந்திட இயலுமென்று இம்முறை நிமிர்ந்த நடையுடன் கூறிக்கொன்டேன் என் மனதிடம்-ந

கவிதையே

நான் கவிதைகளை அள்ளி பருகிக்கொண்டு இருக்கின்றேன் குறையவேயில்லை தமிழென்ற அட்சயபாத்திரம் -- பிரவீணா தங்கராஜ்.

இழுவை

கோவில் கோபுரத்தினை விழி அகற்றாது பார்த்துக்கொன்டே சென்ற என்னை , கோவிலின் இருபுறம் பூக்கடை மட்டுமில்லை பொம்மை கடையும் உண்டென குழந்தையின் கை இழுவை உணர்த்தின .          -- பிரவீணா தங்கராஜ் .

நேரம்

மனிதனின் நேரங்களை விழுங்கிக் கொண்டிருந்தன தொலைக்காட்சியும் அலைபேசியும் தற்போது அந்த வரிசையில் முகநூலும் ...               -- பிரவீணா தங்கராஜ் .

வெற்றி

Image
வெற்றியே... நீ என்னை தேடி வருவதென்றல் அதிஷ்டத்தை துணைக்கு கூட்டிக்கொண்டோ சிபாரிசினை அழைத்துக்கொண்டோ வந்துவிடாதே  அதை ஏற்கவும் தயாராகயில்லாத திமிர்பிடித்தவள் நான் . நீ என் திறமையெனும் தோழிக்காக மட்டுமே என்னை வந்து சேர் .         *** தோல்வியே... நீ என்னை முத்தமிட்டுக்கொன்டே இரு. எனக்கு வெற்றி வரும்வரை ...              -- பிரவீணா தங்கராஜ் .

🐕 நாய்கள் ஜாக்கிரதை 🐕

Image
நீயோ வெண்மையாகவும் மிருதுவாகவும்  அழகாக இருக்கிறாய் ... கண்கள் கூட  பிரகாசமாக தான் ஜொலிக்கின்றன... அருகே வந்து அரவணைக்க தான் தடுக்கிறது உன் கூரிய பற்கள் கண்டு .🐕                 -- பிரவீணா தங்கராஜ் .

காட்சியகம்

நாளை எங்கள் வீட்டில் காட்சியகம் நீங்கள் நினைப்பது போல் புத்தக காட்சியகமோ அறிவியல் காட்சியகமோ இல்லை காபி பலகாரம் வழங்கி காட்சிபொருளே தலை தாழ்த்திநிற்கும் கண்டு பிடித்தால் திருமண வைபோகம் கண்டும் பிடிக்காவிட்டால் காட்சிப்பொருளாக மீண்டும் தொடரும் ...😔                 -- பிரவீணா தங்கராஜ் .

யாசகம்

அவன் யாசகம் கேட்டு கொண்டியிருந்தான் அருகில் இருக்கும் பேருந்தில் தான் பலரும் சில்லறை கொடுக்க தயங்கினர் பள்ளிமாணவன் தோற்றமாதலால் சிலரின் கருத்தோ படிக்கும் வயதில் பிச்சையா ? சிலரின் எண்ணமோ உடலின் நலமிருக்க எதனால் ? அவனிடமே கேட்டுவிட்டேன்  . யாருமில்லாத அவனுக்கு திருடி பிழைக்க மனமில்லையாம் அதற்கு பிச்சைக்காரனாக இருப்பதே மேலானதென சொல்லி இடம் பெயர்ந்தான் வேறேங்கே பிச்சை கேட்டுத்தான் .... நீங்கள் கேட்பது புரிகிறது நீ என்ன செய்தாய் .... கேள்வி எழுப்பாதீர்கள்  என்னால் இயன்றது ஒரு நாணயத்தை வழங்கினேன் வேறு என்ன செய்ய வேலை தேடும் இளைஞன் நான் .                       -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் - 14

நீண்ட பயணமும் குறுகிவிட்டது உன் நினைவை சுமப்பதால் ...          - பிரவீணா தங்கராஜ் .

வாடகை தாயாக....

Image
அவள் பெண்னென்று இன்று தான் அறிந்தேன் உணவினை நேரந்தவறாது கொடுப்பது மட்டுமே என் கடமையென நினைத்தேன் உணவு கொடுப்பதற்கும் காரணமுண்டு அவளும் ஒருவிதத்தில் மாற்றுத்திறனாளி தான் ஏதோ ஒரு விபத்தாகக்கூடும் அதில் தான் அப்படி உடலை ஊனம் செய்திருக்கும் இப்பொழுது அந்தக்கதை சொல்லவரவில்லை தனித்திருக்கும் அவளிடம் தாய்மையின் வெளிப்பாடை கண்டேனின்று அவள் கூட்டில் கண்ட முட்டைகளே அதற்கு சாட்சி ஒரு பக்கம் இறக்கையிழந்து நீண்டதூரம் பறக்கயியலாதவளின் கூட்டில் முட்டைகள் . அவளுக்கு தெரியும் அது தன் முட்டைகள் இல்லையென்று இருப்பினும் அடைகாக்கிறாள் ஒருவேளை குயில் குழந்தைக்கு வாடகை தாயாகயிருக்க முடிவு செய்திருப்பாளோ ....?!                 -- பிரவீணா தங்கராஜ் .

ஒன்னும் ஒன்னும் ரெண்டு

ஒன்றும் ஒன்றும் ரெண்டென கலந்தோம். செம்புலப்பெயனீராக  வாழ்வின் தாய ஆட்டத்தில் ஒன்றை பெறவே ஏங்கிட , பெற்றோம் . இரண்டென கலந்த வாழ்வில் ஒன்றை கழித்தாலும் கிட்டுவது பூஜ்ஜியமாகுமே . ஆகாது வாழ்ந்திருமன(ண)மே !                  -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -13

கவிதைகளை வரிசையாய் எழுதிவடித்து காட்டுகின்றேன் உன்னிடம் . நீயோ படித்து கூட பார்க்காமல் அந்த புத்தகத்தை மூடி மேஜைமீது வைத்துவிட்டு சுவாதீனமாக கூறுகிறாய் ... நான் இந்த மொத்த கவிதையும் படித்துவிட்டேனென சுட்டுவிரலால் என்னை சுட்டி காட்டியபடி ...         -- பிரவீணா தங்கராஜ் .