Posts

ஸ்டாபெர்ரி பெண்ணே -11

 🍓11          ஆராதனாவோ இடையில் கையை வைத்து நிற்க வெற்றி பேச ஆரம்பித்தான்.       ''எதுவும் சொல்லாதீங்க... அதை கேட்க நான் தயாராயில்லை...'' என்றே சொல்ல, போச்சு எனக்கு என் பக்கம் இருக்கும் நியாயம் கூட சொல்ல விட மாட்டேங்கிறா... என்றே அமைதியாக இருக்க      ''இப்படி ஜெஸில் ஜெஸில் என்று கூப்பிட்டா எனக்கு எப்படி நினைவு வரும்? என் பெயர் ஆராதனா தானே?'' என்றாள் அவள். அவளின் முகத்தில் இருந்து நினைவு திரும்பவில்லை ஆனால் எதையோ பார்த்து ஏதோ கேட்க செய்கின்றாள் என்றே அறிந்து கொண்டான். அதனால கொஞ்சம் நிம்மதியோடும் பயத்தோடும்       ''எனக்கு எப்போவும் ஜெஸில் தான் அதனால அப்படி தான் கூப்பிடுவேன்...''       ''ஹ்ம்ம் அப்போ யாரு என்ன ஆராதனா என்று கூப்பிடறது? சரி என்னை ஆரு என்று யார் யாரெல்லாம் கூப்பிடுவாங்க?'' என்றே கேள்வி கேட்க        ''அதுலயே போட்டு இருக்குமே...'' என்றான்.       ''இதுல படிப்பு அது இது என்று எல்லாம் இருக்கு நீங்க சொன்னது தான்... ஆனா நீங்க ஜெஸில் என்று கூப்பிட்டது தான் வித்தியாசமா இருக்கு...'

ஸ்டாபெர்ரி பெண்ணே-10

 🍓10                ஆராதனவோ மெல்ல சிணுங்கி குழந்தை போல முகம் வைத்து  ''இல்லையே.... நீ எவ்ளோ உயரம் ஆனா என் பக்கத்தில் என் உயரம் அளவு வரை தான் தெரிந்த'' என்றே சொல்லியதும் வெற்றிக்கு புரிந்து போனது. முகம் தெரியவில்லை என்றதும் நிம்மதியுடன்                கடவுளே உதய்-க்கு இப்படி தீம் பார்க் போறதே பிடிக்காது பயம் அதனால ஆராதனா கூட அவன் போனதே இல்லை அதனால் இன்று இப்படி முழு நேரமும் அங்கே அவனின் நினைவு வராமல் தப்பித்தோம். இப்போ இங்க கடலில் கொஞ்ச நேரம் தான் இருந்தா ஆனா உதய் நினைவு வந்து இருக்கு கடவுளே இப்போ நான் என்ன பண்றது... என்ன சொல்லி இவளின் பேச்சை மாத்தறது? அப்படியே மாற்றினாலும் கேட்பாளா? அவளுக்கு இப்போ தான் முதல் நினைவா இது தோண்றி  இருக்கு... அப்பறம் எப்படி? இறைவா உதய் நினைவு வந்தா கூட பரவாயில்லை... ஆனா அவளுக்கு நடந்த கசப்பான நிகழ்வு மட்டும் அவளுக்கு நினைவே வர கூடாது... என்று இருக்க        ''செல்வா.....செல்வா.... போதும் சிலை மாதிரி போஸ் கொடுத்தது... கிளம்பலாம் எனக்கு ரொம்ப பசிக்குது... அதனால தான் மூளை வேலை செய்ய மாட்டேங்குது கொஞ்சம் சமோசா வாங்கி கொடுங

ஸ்டாபெர்ரி பெண்ணே - 9

 🍓9                             அதிகாலை எழுந்து பார்க்கும் பொழுது தன்னவளை அணைத்து உறங்கியது கண்டு வேகமாக பதறி எழுந்திட அந்த பதட்டத்தில் ஆராதனா உறக்கம் கலந்து இமை திறந்தாள்.       ''சாரி சாரி ஜெஸில்.....'' என்றே சொல்லியவனின் பேச்சை கேட்காமல்       ''முதலில் இங்க இருந்து வெளியே போங்க செல்வா'' என்றே ஆராதனா சொல்ல அவள் தன் மீது கோவத்தில் இருக்கின்றாள் என்றே எண்ணி மீண்டும்        ''சாரி ஜெஸில் நேற்று கையை பிரித்து வெளியே போக தான் நினைச்சேன் நீ வலியில் என் கையை அதிகமா அழுத்தி பிடிச்சுக்கிட்டு அதனால் தான் போகலை இங்கயே...'' என்றவனின் விளக்கம் கேட்டும்        ''ஐயோ செல்வா என் டிரஸ் எல்லாம் ஸ்பாயில் ஆகி இருக்கு அதனால சொன்னேன் போங்க வெளியே எனக்கு இப்போ வயிறு வலி இல்லை கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன்'' என்றே சொல்ல வெற்றி வேகமாக வெளியேறினான்.           ஆராதனா எழுந்து குளித்து தனது மெத்தையின் கவரை மாற்றி பின்னரே வெளியே வந்தாள். தான் வெற்றியை எப்படி அருகே இருக்க விட்டோம். அதுவும் இந்த நேரத்தில்.. என்றே ஆராதனா சிந்திக்க அதே சிந்

ஸ்டாபெர்ரி பெண்ணே-8

   🍓8         வெற்றி கொடுத்த லேப்டாப் கொண்டு முதலில் என்ன செய்யலாம் என்றே தோன்றியவளுக்கு முதலில் வந்த யோசனை முகநூலில் நுழைவதே என்று தீர்மானித்தாள்.       எப்படியும் தனது பாஸ்வேர்ட் மறந்து போனதால் புதிதாக ஆரம்பித்தாள். அதில் ஜெஸில் என்றே பெயர் வைத்தவள் தனது அப்பா பெயரை எழுத யோசித்தவளுக்கு தனது தந்தை பேர் நினைவு இல்லை என்றதும் தாயின் பெயரும் தெரியவில்லை என்றதும் அழுகை வந்தது.            பின்னர் அவளாகவே வெற்றி செல்வன் வந்த பிறகு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றே எண்ணி 'ஜெஸில் செல்வா' என்றே பெயரை உருவாக்கி முகநூலில் கணக்கை ஆரம்பித்தாள். அதன் பின் வெற்றி செல்வன் என்றே ஆராய்ந்து அவனது முகநூலில் நுழைய அவனோ பிசினெஸ் சம்மந்தப்பட்ட ஆட்களை தவிர்த்து இவளோடு எந்த புகைப்படமும் இல்லை. எப்படி இருக்கும்? இவளோ செல்வா முகநூலில் ஒரு போட்டோ கூட என்னோடது இல்லையே... என்ன செய்ய? என்றே எண்ணி அவனுக்கு ப்ரெண்ட் ரெகுஸ்ட் அனுப்பிவிட்டு இருந்தாள். செல்வா நட்பில் தான் இருக்கின்றோமா என்றே ஆராய்ந்து பார்க்க அதுவும் இல்லை... செல்வா என்னை பற்றி ஒன்றும் இல்லையே... ஒரு வேலை முகநூலில் நான் பழகியது இல

ஸ்டாபெர்ரி பெண்ணே-7

 🍓7                விடியல் கதிரவனின் உதவியால் ஜன்னல் திரை மீறி முகத்தில் பட எழுந்தான் வெற்றி அவனின் அருகில் பால் நீட்டி ஆராதனா நின்று இருந்தாள். வெற்றி நெஞ்சில் மேல அவளின் ஒற்றை ரோஜா இருக்க அதனை மறைக்க முயன்றான்.       ''நீ எப்போ வந்த?'' என்றே எழுந்து டேபிளில்  வைத்து முகம் அலம்ப       ''முதலில் ப்ரெஷ் செய்து இந்த பால் பிரட் சாப்பிடுங்க...'' என்றே சொல்ல       ''எனக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை ஜெஸில்..''       ''ப்ளீஸ்...செல்வா நேற்று நீங்க சாப்பிடலை... அதுக்கு நான் தான் காரணம் அதனால் முதலில் சாப்பிடுங்க'' என்றே அவனை கை பிடித்து அமர வைக்க அதில் தானாக அமர்ந்து சாப்பிட்டான்.        ''அந்த போட்டோ எடுத்துவிட்டியா?''       ''எதுக்கு எடுக்கணும் செல்வா... இந்த வீட்டின் பெரியவங்க... அவங்க போட்டோ அங்க தான் இருக்கணும். உங்களுக்கு அவங்க விட்டுட்டு போன கஷ்டம் இருக்கும் தான் ஆனா அவங்க அன்பை புரிந்து கொள்ளுங்க. மாமா எவ்ளோ காதல் அத்தை மேல வச்சி இருந்தா அவங்க செய்யாத தவறை எண்ணி அத்தை விஷம் குடிச்சால

ஸ்டாபெர்ரி பெண்ணே- 6

 🍓6               அதிகாலையில் ஜாக்கிங் உடையில் வெற்றி பீச் ரோட்டில் ஓடி முடித்து களைத்து வர ஆராதனா கோவமாக இருந்தாள்.       ''ஹாய் ஜெஸில் என்ன கோவமா இருக்கற மாதிரி இருக்கு?'' என்றே ஷூ கழட்ட       ''செல்வா செய்யறதை செய்துவிட்டு பேசாதீங்க... பாவம் நான் வீட்டிலே இருந்து கஷ்டமா இருக்கு உங்க கூட ஜாக்கிங் வரலாம் என்றே இருந்தேன். நீங்க விட்டுட்டு போயிட்டீங்க... எனக்கு தனியா வீட்டில் போர் அடிக்கு தெரியுமா?'' என்றே கோவத்தில் ஆரம்பித்து சோகத்தில் முடித்தாள்.      ''சாரி ஜெஸில் நாளைக்கு உன்னையும் கூட்டிட்டு போறேன்'' என்றே சொல்லி மழுப்பினான்.      ''நான் எப்படி பேசுவேன்? உங்க கிட்ட கோவமா வா? இல்லை நார்மலாவா? அப்படி இல்லனா வாயடியா? சொல்லுங்க செல்வா?'' நொடிக்கு நொடி முக மற்றம் கொண்டு கேட்டாள்.       ''நீ அருவி மாதிரி சலசலன்னு பேசுவ.. கேட்க கேட்க கேட்டுட்டே இருக்கலாம் என்று தோணும்....'' ரசனையோடு சொன்னான்.       ''அப்போ நீங்க எப்படி?'' என்றாள் புருவம் உயர்த்தி.       ''கேட்டு இருப்பியே

ஸ்டாபெர்ரி பெண்ணே -5

 🍓5              அடுத்த நாள் காலை மணி பதினொன்று காட்டும் வரை வெற்றி எழுந்து வரவே இல்லை. ஆராதனா மட்டும் எழுந்து குளித்து தோட்டத்தில் நகர் வலம் புரிந்து சாப்பிட்டு என்றே இருக்க அவனின் கதவு திறக்கவே இல்லை. பணியாட்கள் கூட அவனை எழுப்ப சென்றதாகவும் இல்லை. மணி 11:30 ஆனதும் லேண்ட் லைன் போன் அலறியது. எல்லோரும் பார்த்து மீண்டும் தனது பணிகளை தொடர ஆராதனாவுக்கு தான் ஒரு ஆர்வக்கோளாறில் போனை எடுத்தாள்.       ''பாஸ்.. ஹலோ பாஸ்'' என்றே ஒரு ஆணின் குரல் கேட்க திருதிருவென முழித்தவள்         ''சாரி இங்க கொள்ளை கூட்ட தலைவன் பாஸ் யாரும் இல்லை இது வெற்றி செல்வன் வீடு உங்களுக்கு யார் வேணும்'' என்றே ஆராதனா சொல்ல       ''மேடம்.... நீங்களா?''       ''சாரி மேடம்.. பாஸ் நம்பர் போன் செய்தேன் எடுக்கலை... ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று பாஸ் நாலு நாள் ஆபிஸ் வரலை... அதனால இன்னிக்கு கூப்பிடலாம் என்றே போன் செய்தேன்'' என்றே சொல்ல மேலே மாடியை பார்த்து முடித்தாள்.        ''அவர் இன்னும் ரூமை விட்டு வெளியே வரலை... தூங்கறாரோ என்னவோ

ஸ்டாபெர்ரி பெண்ணே-4

 🍓4            இசிஆர் ரோட்டில் ஒரு வீட்டில் வாகனம் செல்ல அவனின் வருகை உணர்ந்து கேட் கதவு திறந்தே வெளிபட்டது.           ஆராதனாவுக்கு கண்கள் தெரித்துவிடுவது போல இருந்தன. இந்த இடம் இதுக்கு முன்ன பார்த்த நினைவு இல்லையே... இவரையும்... என்றே வெற்றியை பார்க்க அவனோ ''இறங்கு'' என்றான்.           சே எனக்கு தான் நினைவு போய்டுச்சு என்று சொல்லி இருக்காங்க அப்போ எப்படி இந்த வீடு இவர் எல்லாம் நினைவு இருக்கும் ஆனா இவர் என் பேர் வச்சியே கூப்பிடலை என்றே எண்ணியவளுக்கு       ''என் பேர் என்ன....? அப்பறம் உங்க பேர் என்ன? நான் உங்களுக்கு என்ன உறவு டாக்டர் கார்டியன் என்று சொல்லி இருக்காங்க... ?'' என்றே கேள்வி மேல் கேள்வி கேட்பவளை எண்ணி வாயில் விரல் வைத்து கண்களை முன் பக்கம் காட்டினான்.         அங்கே ஒரு நடுத்தர பெண்மணி ஆரத்தி சுற்றி கொண்டு இருந்தாள். முகமெங்கும் புன்னகையோடு சுற்றி குங்குமம் இட்டாள். வெற்றியோ மனதில் அவளிடம் சொல்லாமலே அவள் கால் வலது எடுத்து நுழைய வேண்டும் என்றே எண்ணி வேண்ட அவளும் அதற்கு ஏற்றார் போல வலது பாதத்தினை வைத்தே நடந்தாள். உள்ளுக்குள் மகிழ்

ஸ்டாபெர்ரி பெண்ணே-3

 🍓 3              உதய் ஆராதனா அழகை கண்டு விரும்பியவனா? அவளுக்கு இப்படி ஆனதும் சராசரி ஆண்மகனாக யோசிக்கின்றானா? என்றே யோசிக்க உதயிடம் பேச அருகே செல்ல அவனோ ஆராதனா இடம் நோக்கி சென்றான். அவனை தொடர்ந்து ஆனால் இடைவெளி விட்டே நின்று இருக்க உதய் ஆராதனாவிடம் பேச ஆரம்பித்தான்.       ''சாரி ஆராதனா என் முன்னால உன்னை தூக்கிட்டு போய் இருக்காங்க ஆனா நான் உன்னை அந்த பொறுக்கிங்களை ஒன்னும் பண்ண முடியலை... அவனுங்களை சகா அடிக்கணும் என்று இருக்கு ஆனா என்னால முடியாது. என்னால தான் உன் பெண்மை போயிடுச்சு... நான் உன்னை காப்பாற்றி இருக்கனும்... எல்லாம் என்னாலே தான்.. ''என்றே தலையில் அடித்துக் கொண்டான்.       ''சாரி ஆராதனா என்னால எல்லாம் மறந்து உன்னோட வாழனும் என்றாலும் நீ தாய்மை அடைய மாட்டேன்னு சொல்லிட்டாங்க என் அம்மாவுக்கு எல்லாம் எனக்கு வாரிசு வேண்டும் என்று இருப்பாங்க. உன்னால அப்படி தர முடியாத பட்சத்தில் அவங்க உன்னை எப்படியும் வெறுப்பாங்க. அதுக்கு பிறகு வேறொரு பெண்ணை தான் கல்யாணம் செய்ய சொல்லி என்னை வற்புறுத்துவங்க...  உனக்கு தாலி கட்டி எல்லாம் தெரிந்தும் அந்த கஷ்டம் வே

ஸ்டாபெர்ரி பெண்ணே -2

 🍓 2             வெற்றி மனம் 'ஆராதனா... ஆராதனா...'  என்றே துடிக்க  பொறுத்துக் கொண்டு எழ முயன்றான். இம்முறை வேறு ஒருவன் வந்து கன்னத்தில் அறைந்திட மயக்கம் மருந்தின் வினையால் கீழே விழுந்தான் வெற்றி. முழுதும் சுவாசிக்கவில்லை என்றாலும் அதன் தன்மை காட்டும் தானே. இம்முறை ஏற்கனவே அறைந்தவன் இம்முறை ஆராதனாவை நெருங்கி இருந்தான். உயிர் போகும் அளவிற்கு துடித்து கொண்டு இருந்தது வெற்றி மட்டுமே ஆராதனா சுய நினைவு இன்றி மயக்கத்தின் பிடியில் பிணம் போல கிடந்தாள்.             கதவு திறந்து உதய் வரும் நேரம்       ''டேய் இவன் இங்க இருக்கான் அப்போ இது யாரு? இவனை தானே காயப்படுத்த சொன்னாங்க... போச்சு ஏற்கனவே சும்மா மிரட்ட சொன்னான் இவளை பார்த்தும் சும்மா விட முடியுமா என்று தப்பு பண்ணிட்டோம் இவனின் காதலியை தானே பயமுறுத்த சொன்னான்'' என்றே ஒருவனின் கேள்வி மற்றவன் பதில் கூறும் முன்னே உதய் அவர்களில் ஒருவனை அடிக்க செய்ய அவன் விழுந்த வேகம் தண்ணிர் ஜக் உடைந்து கீழே இருக்கும் வெற்றி மேலே தெளிக்க வெற்றி எழுந்தான். தனது முன்னே ஆராதனா இருக்க அவளை கைகளில் ஏந்தினான். உதய் இருவரையும் உள்ளே