Posts

ஸ்டாபெர்ரி பெண்ணே-20

 🍓20                            உதய் அம்மா ரத்தினம் அதிகாலையில் உதையின் அறை கதவை உடைக்கும் அளவுக்கு தட்டினார்கள்.      ''டேய்... டேய்... எவ்ளோ நேரம் கூப்பிடறது.... உதய்....'' என்றே தட்ட      ''இரும்மா...'' என்றான். இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை.... என்றே முனங்கி கொண்டு        ''என்னம்மா?'' என்றான் உதய்        ''இங்க பாரு டா... ஆரு ஆரு என்று உருகினியே.... பார்த்தியா... எவனோ பணக்காரன் கிடைச்சதும் தான் உன்னை உதறி தள்ளி இருக்கா...?'' என்றே பேப்பரை காட்ட உதையோ வேகமாக வாங்கி பார்த்தான்.          நேற்று திருமணம் என்றும் அதனை இன்று அறிவிப்பதாக போடபட்டு இருந்தன. ஆராதனா தங்கமும் வைரமும் சேர்ந்து இழைத்தது போல போட்டோவில் இருக்க... கூட வெற்றி கம்பீரமாக நிற்பதும்... இன்னொரு சிறிய புகைப்படத்தில் ஆராதனா வெற்றி இருவரும் ஒருவரை ஒருவர் கண்கள் கலைக்க பார்ப்பதும் இருந்தன.              உதைக்கு அதற்கு மேல் அதனை பார்க்க முடியவில்லை. ஹாலில் டேபிளில் வைத்தவன் அப்படியே அமர்ந்தான்.      ''அவள் தானே டா இது.... சொல்லு...'&

ஸ்டாபெர்ரி பெண்ணே- 19

   🍓19               தனது தாயின் பட்டு புடவை நகை என்று எடுத்து வந்து கொடுத்து போட்டோ ஒன்றை எடுக்க அணிந்து வர சொன்னான்.       ''செல்வா இது எல்லாம் கிராண்ட்டா இருக்கு சிம்பிள்ளா இல்லையா?'' என்றாள்.         ''ஜெஸில் நீ நான் நாளைக்கு மார்னிங் பேப்பரில் ஜோடியா போட்டோ கொடுத்து நமக்கு திருமணம் என்றே அறிவிக்க போறோம் அதுல இது வேணும் ஜெஸில்... கல்யாணம் தான் நாம யாருக்கும் தெரியாம சட்டுனு முடிவு எடுத்தோம் ஆனா அதனை தெரிவிக்க இப்படி செய்தால் தான் நல்லா இருக்கும் டா'' என்றே சொல்ல சரி என்றே அறைக்கு சென்று அணிவித்து வந்தாள். கூடவே லட்சுமி அம்மா துணைக்கு சென்றார்கள்.                    புடவை அணிந்து நகைகளை பூட்டியதும் அழகு தேராக இருந்தாள் ஆராதனா...       ''இந்த அம்பாள் நேரில் வந்த மாதிரி இருக்கு அவளோ தெய்விக முகம் உனக்கு'' என்றே லட்சுமி அம்மா கூற       ''போங்க லட்சுமிம்மா எனக்கு இது மாதிரி போட்டு பழக்கமா இல்லை... கையில் வங்கி ஒட்டியாணம்.... அது இது என்று வெயிட்டா இருக்கு...'' என்றே சொல்லியவள் கதவை செல்வா தட்ட        '&#

ஸ்டாபெர்ரி பெண்ணே-18

  🍓18               எழுந்ததில் இருந்து ஆராதனா ஒரே யோசனையில் இருந்தாள்.     ஒன்றை வருடம் தானாக தேடி விரும்பியவனே தனக்கு தாய்மை இல்லை என்றதும் விட்டு சென்று விட்டான். ஆறு மாதமாக காதலிக்கும் வெற்றி செல்வன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்வான். முதலில் அவன் சொத்தை ஆள்வதற்கு ஒரு வாரிசை தான் எதிர்பார்ப்பான். அதனால் தான் இனியும் இங்கு இருப்பது தவறு... இன்றே சொல்லிவிட்டு கிளம்ப வேண்டும்.           எப்படி கிளம்பணும் வெற்றியிடம் எப்படி சொல்வது? சொன்னால் சரி போ என்றே சொல்லி விடுவாரோ? எனக்கு என்று ஒரு உறவும் அன்பாக தாங்க இவ்வுலகத்தில் இல்லையா? என்றே என்ன கண்கள் கரித்தது.             நேற்று போலவே கதவு தட்டும் ஓசை கேட்டு கண்கள் துடைத்தாள்.           கையில் தட்டில் மூன்று இட்லி கொஞ்சம் போல சட்டினி சாம்பர் என்றே வந்து நின்றான் வெற்றி செல்வன்.        ''நீ சாப்பிட வருவ என்றே நினைச்சேன் நீ அழுதுகிட்டு இருப்ப என்று நான் சாப்பிட்டு உனக்கு எடுத்துவிட்டு வந்தேன்'' என்றே நீட்டினான்.              வேண்டாம் என்றே மறுக்க ''பச் ஒழுங்கா சாப்பிடு'' என்றே அவனே ஊட்டி விட்டான்.

ஸ்டாபெர்ரி பெண்ணே- 17

   🍓17        ''இங்க பாரு ஆராதனா அன்னிக்கு இதே போல நாம பேசிட்டு கிளம்பினோம் அப்போ என்னை ஒருத்தன் பின்னாடி இருந்து தள்ளி விட்டான். நான் விழுந்து திரும்பும் பொழுது அவன் உன்னை காரில் தள்ளி விட்டான் அதுல உனக்கு தலையில் அடிபட்டுச்சு.. அப்புறம் அவன் உன் முகத்தில் கர்சீப் வைத்து அழுத்திட நீ மயங்கின உன்னை காரில் தள்ளி கூட்டிட்டு போனான். அவ்ளோ தான் அப்பறம் நான் அவரும் சேர்ந்து உன்னை தேடிட்டு காரில் பின் தொடர்ந்தோம்.           ஒரு அறையில்.... உன்னை அடைச்சாங்க அவர் காப்பாற்ற போனப்ப அவரை அடிச்சாங்க அடுத்து நான் வந்தேன் இருவரையும் அடிச்சு முடிச்சு உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனோம்.          அங்க உன்னை பரிசோதிச்சு பார்த்தப்ப.... '' என்றே தயங்கினான். வெற்றிக்கு கண்கள் எங்கோ வெறித்தது. மீண்டும் அந்த இறந்த கயவர்கள்  கொள்ளும் வெறியில் இருந்தான்.       ''அங்க இருந்த டாக்டர் உன்னை பரிசோதித்து... சொன்னாங்க... உன்னை கடத்த முயன்றவர்கள் தள்ளியதில் உனக்கு வயிற்றில் அடிபட்டது... அதுல நீ தாய்மை அடையும் பாக்கியம் பெற முடியாது என்றே சொன்னாங்க...'' என்றான்.  ஆராதனா கண

ஸ்டாபெர்ரி பெண்ணே- 16

   🍓16                     காலையில் எழுந்ததும் ஆராதனாவுக்கு மனமே கனத்தது. ஏன் என்று தெரியவில்லை... வெற்றி எப்பவும் போல தன்னை மிடுக்காக தனது நிலையை மறைத்து கொண்டான். ஆராதனவால் தான் முடியவில்லை.              வெற்றியோ ஆராதானாவுக்கு மேலே கனத்து இருந்தான். அவனுக்கு எது நடந்தாலும் கஷ்டம் என்ற நிலை.. தன்னை ஆராதனா விட்டு சென்றாலும் வலி அவளை உதய் மறுத்து உண்மை சொன்னாலும் வலி என்றே இருந்தான்.ஆனால் எப்பொழுதும் போல இயல்பாக இருக்க முனைந்தான்.            உதய் எண்ணுக்கு அழுத்தி தொடர்பு கொண்டாள்.      புது எண் என்றதும் உதய் எடுத்து பேசிட அவனின் குரலில் ஆராதனா அப்படியே பேச மறந்தாள். பேச மறந்தால் என்றதைவிட அவளுக்குஅவனோடு பேச பிடிக்கவில்லை என்பதே உண்மை.        வெற்றியை பார்க்க அவளின் பார்வை உணர்ந்தவன் போனை வாங்கி      ''மிஸ்டர் உதய்....''      ''எஸ் நீங்க?''       ''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. நீங்க சென்னை வந்தாச்சா?''        ''யா இன்னும் இருபது நிமிடத்தில் வந்துடுவேன்... நீங்க... யாரு?''       ''நான் யாருனு நான் ச

ஸ்டாபெர்ரி பெண்ணே-15

 🍓15                       அதிகாலை இருவருக்கும் ஏன் தான் வந்தது என்றே எண்ணி எழுந்தார்கள். ஆராதனா குளித்து முடித்து தனது அறையிலே காபி பருகி முடித்தாள். வெளியே வர மறுத்தாள்.               வெற்றியோ... உதய் வரும் வரை இங்கு இருக்கும் ஜெஸில் தன்னிடம் பேசாவிட்டலும் பரவாயில்லை தன்னோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டி வந்தான்.       ''தம்பி ஆராதனா அப்பறம் சாப்பிட்டு கொள்கின்றார்களாம் நீங்க சாப்பிடுங்க" என்றே சொல்லி பரிமாற        ''லட்சுமி அம்மா அவள் இங்க இருக்கற காலம் குறைவு அதனால இருக்கற கொஞ்ச நேரமும் சேர்ந்து சாப்பிட வர சொல்லுங்க.. இது நான் கெஞ்சி கேட்டுக்கறதா சொல்லுங்க'' என்றே சொல்லி அனுப்ப அவரும் அறைக்கு சென்று சொல்ல...  வெற்றி தன்னிடம் கெஞ்சுவது பிடிக்காமல் ஆராதனா(அவன் கெஞ்சினா உனக்கு என்னம்மா) அமைதியாக வந்து உண்டாள்.               அவளை பார்க்க செய்யவில்லை.. இருந்தாலும் அவளின் அருகாமை இருக்கின்றது என்றே எண்ணி அவனும் சாப்பிட்டு கிளம்பினான்.             ஆராதனாவோ மனதில் இவன் கூட உட்கார்ந்து சாப்பிட சொன்னான் ஆனா இவன் என்னை நிமிர்ந்து ஒரு முறை பார்த

ஸ்டாபெர்ரி பெண்ணே-14

 🍓14                          வேகமாக சென்றவள் ஒரு ஆட்டோ பிடித்து ஏறினாள். உதய் வீட்டை நோக்கி போனாள். ஆனால் அவளை வரவேற்றது பூட்டி வைத்த கதவு மட்டுமே....            அருகில் விசாரிக்க சென்றால்... அங்கே இருந்தவர்கள் உதய்-க்கு திருமணம் ஆக போவதால் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றார்கள் என்ற தகவல் கொடுத்தனர்.             சோர்வுடன் தனது வீட்டுக்கு சென்றாள். அங்கே அவளோடு இருந்த ஆச்சி மட்டுமே இருந்தார்கள்.       ''வா டா குழந்த... இப்போ தான் வந்தியா...? ஏன் டா உதய்யை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொல்லிட்ட.. பாரு உதய் அம்மா கையோடு அவரோட உறவு பொண்ணை கட்டி வைக்க ஏற்பாடு எல்லாம் பண்ணிடுச்சு... நீ போன இடத்துல போன் வசதி இல்லையாமே... அதுக்காக ஒரு போன் கூடவா வெளியே இருந்து பண்ணி இந்த பாட்டிக்கு சொல்லி இருக்க கூடாது... வளர்த்த பொண்ணு ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று எப்படி துடிச்சேன் தெரியுமா? ஏதோ புண்ணியம் உதய் நேரா வந்து சொல்லி விட்டு போனான்.... இனி இங்க தான் இருப்பியா...?'' என்றே ஆராதனா சொல்லாமலே பதில்கள் தானாக வந்து சேர்ந்ததும் விதிர்த்து போனாள்.       ''

ஸ்டாபெர்ரி பெண்ணே -13

 🍓13               காலையில் ஜாக்கிங் முடிந்து வந்தவன் நேராக குளித்து முடித்து ஆபிஸ் கிளம்பி வந்தான்.       அதே நேரம் ஆராதனாவும் வந்து சேர்ந்தாள்.          ''செல்வா... ?''         ''கேளு ஜெஸில்'' என்றே சுருதி குறைந்தே கேட்க         ''ஹ்ம்ம் நான் எதோ கேட்க போறேன்னு தெரியுதா?''        ''அதான் ஒரு நாளைக்கு ஒரு கேள்வி பதில் பத்து கேட்டு என்னை இம்ஸை படுத்தறியே...'' என்றான் புன்னகையோடு அதில் சலிப்பு இல்லை.         ''நான் இம்ஸையா.... அப்பறம் கவனிச்சுக்கறேன்.... நீங்க என்ன கம்பெனி நடத்தறீங்க...?''       அதுவா... லெதர் பேக்டரி... மில்க் ப்ரோடுக்ட் எக்ஸ்போர்ட் செய்யறது... அப்பறம் சில்க் திரேட்ஸ் என்று மூணு நாலு கம்பெனி...ஏன் உனக்கு வேலை வேணுமா? ஆனா நீ கம்ப்யூட்டர் தானே... ஹ்ம்ம் ஓகே ஒர்க் கம்ப்யூட்டரில் பீட் பண்ணி தர்றியா ?'' என்றான்      ''இல்லை இப்போ எனக்கு ஒர்க் பண்ற ஐடியா இல்லை செல்வா... எனக்கு என்னை பற்றி தெரியணும்.... இல்லையா.. நம்ம... ஹ்ம்ம் ஒண்ணுமில்லை''       ''ச

ஸ்டாபெர்ரி பெண்ணே- 12

 🍓12           இரவில் ஆராதனாவிற்கு பொட்டு தூக்கம் கூட இல்லை... எதுக்கு இந்த செல்வா இப்படி என்னை கேட்கணும் நல்லதோ கெட்டதோ என்னை விட்டு போக மாட்டியே ஜெஸில்... என்று... எனக்கு ஒன்றும் புரியலை...                எல்லோரும் பழைய நினைவு மறந்தா அவர்களுக்கு நினைவு வரவழைக்க தான் முயற்சி செய்வாங்க ஆனா இந்த செல்வா மட்டும் அதை பற்றி யோசிக்க மாட்டேன்கிறார்.... ஏன் என்னை கூட யோசிக்க விட மாட்டேன்கிறார்... அப்போ எப்படி எனக்கு என் நினைவுகள் தெரிய வரும்?                 நான் எப்படி பட்ட பெண் நல்லவளா? கெட்டவளா? மென்மையானவளா? கோவப்படுவேனா? எல்லோரிடமும் பழகும் குணமா? எடுத்தெறிந்து பேசுபவளா? எனக்கான உறவுகள் நட்புகள் இருக்கா? இல்லை வெற்றி செல்வன் மட்டும் தானா? எதுக்கு வெற்றி என்கிட்ட இயல்பா பேசவே மறுக்க மாட்டேன்கிறார்? அவரை பொறுத்தவரை என்னை இப்படியே இருந்து கூட ஏற்றுக்கொள்ள தயாரா இருக்கார். எதுக்கு பழைய நினைவு கூடாது என்றாலும் சம்மதமா இருக்கார்? அப்போ எனக்கு தெரிந்து கொள்ள கூடாத பழைய நினைவுகள் சில கசப்பானவையா? அப்படி என்ன நடந்து இருக்கும்?            ஆனா இது எல்லாவற்றிலும் ஒரு உண்மை மட்டும் எனக

ஸ்டாபெர்ரி பெண்ணே -11

 🍓11          ஆராதனாவோ இடையில் கையை வைத்து நிற்க வெற்றி பேச ஆரம்பித்தான்.       ''எதுவும் சொல்லாதீங்க... அதை கேட்க நான் தயாராயில்லை...'' என்றே சொல்ல, போச்சு எனக்கு என் பக்கம் இருக்கும் நியாயம் கூட சொல்ல விட மாட்டேங்கிறா... என்றே அமைதியாக இருக்க      ''இப்படி ஜெஸில் ஜெஸில் என்று கூப்பிட்டா எனக்கு எப்படி நினைவு வரும்? என் பெயர் ஆராதனா தானே?'' என்றாள் அவள். அவளின் முகத்தில் இருந்து நினைவு திரும்பவில்லை ஆனால் எதையோ பார்த்து ஏதோ கேட்க செய்கின்றாள் என்றே அறிந்து கொண்டான். அதனால கொஞ்சம் நிம்மதியோடும் பயத்தோடும்       ''எனக்கு எப்போவும் ஜெஸில் தான் அதனால அப்படி தான் கூப்பிடுவேன்...''       ''ஹ்ம்ம் அப்போ யாரு என்ன ஆராதனா என்று கூப்பிடறது? சரி என்னை ஆரு என்று யார் யாரெல்லாம் கூப்பிடுவாங்க?'' என்றே கேள்வி கேட்க        ''அதுலயே போட்டு இருக்குமே...'' என்றான்.       ''இதுல படிப்பு அது இது என்று எல்லாம் இருக்கு நீங்க சொன்னது தான்... ஆனா நீங்க ஜெஸில் என்று கூப்பிட்டது தான் வித்தியாசமா இருக்கு...'