Posts

நீ என் முதல் காதல் -8

அத்தியாயம்-8     ஸ்ரீநிதி ம்ருத்யு இருவரும் ஈசிஆர் பக்கம் ஒர் ரெஸார்ட்டில் ஜவிக்காக காத்திருந்தனர்.     ம்ருத்யுவுக்கு இஷ்டமில்லாத சந்திப்பு. எந்த ஆடவனுக்கு தான் இனிக்கும். தான் விரும்பும் பெண், அவள் காதலனை தனக்கு அறிமுகப்படுத்த எரிச்சலில் தான் வந்தான்.    இதில் கூடுதலாக ம்ருத்யு எனக்கு ஒரு ஐடியா என்று ஸ்ரீநிதி கூறியதை கேட்டு செவுளில் அறையலாமா என்றிருந்தது.    "எப்படி ஸ்ரீ இப்படியிருக்க? லூசாடி நீ? ரிதன்யா பிளஸ் டூ படிக்கிற குழந்தை. அவளை போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லற.    அதெப்படி அதெப்படி எனக்கு ஸ்ரீநிதியை விட ரிதன்யாவை பிடிச்சிருக்கு. எனக்கு அவளை கட்டிக்க ஆசை. இரண்டு வருஷம் வெயிட் பண்ணி அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு யுகி மாமாவிடமும் ஷண்மதி அத்தையிடம் நானா கேட்கணும் இல்லை.        இன்னொரு முறை இப்படி ஏதாவது மட்டமான ஐடியாவை தூக்கிட்டு வந்த, இருக்கற கடுப்புல பேசாம தாலியை எடுத்து இப்பவே உன் கழுத்துல கட்டிடுவேன்.    உன் லவ் சேரணும்னு யோசிக்கறதா இருந்தா யார் மனசையும் காயப்படுத்தாம ஒரு தீர்வை யோசி.     கேவலமா ஏதாவது யோசித்த கொன்றுடுவேன்" என்று திட்டியபடி வீற்றிருந்தான்.   அந்

நீ என் முதல் காதல் -7

அத்தியாயம்-7   ம்ருத்யு அணைப்பில் ஸ்ரீநிதி அதிர்ச்சியானாள். ஆனால் கதவை திறந்து எட்டிப்பார்த்த ரிதன்யாவோ "அத்தான் இதெல்லாம் டூமச்." என்று ரிதன்யா வரவும் ம்ருத்யு சட்டென்று விழியில் தன் உணர்வுகளை காட்டாமல் மறைத்தான்.     ம்ருத்யு ஸ்ரீநிதி பார்க்கும் நேரம் ரிதன்யா வந்துவிட்டதாக நெற்றியை நீவிவிட, இது நாடகமென்று எண்ணிக்கொண்டாள்.     ரிதன்யா ம்ருத்யு மெத்தையில் தொப்பென அமர்ந்து "அத்தான் உங்க கல்யாணத்துக்கு எனக்கு வைர ஒட்டியானம் மம்மியிடம் கேட்டிருக்கேன். மம்மி ஓகேனு சொல்லிருக்காங்களே." என்று அமர்ந்தபடி குதித்தாள். அவள் குதிக்கவும் ஸ்பிரிங் போல அவளை மேலே தூக்கியது.       "இங்க எதுக்குடி வந்த?" என்று ஸ்ரீநிதி அவளை விரட்ட முயன்றாள்.     "ஹலோ ராட்சஸி அக்கா இது எங்க அத்தை பையன் ரூம். நீ எப்படி உரிமையா வரலாமோ அதே போல நானும் வரலாம். நீ ஏன் வந்த எதுக்கு வந்தனு கேட்கற அதிகாரத்துக்கு ஆளாகணும்னா எங்க மாமாவை கட்டிக்கணும்.    இன்னும் நிச்சயமே நடக்கலை. ஓவரா தான் அத்தான் மேல பொஸஸீவ் ஆகற." என்று நேரம் காலமின்றி கூறவும் ம்ருத்யுவிற்கு நகைக்க தோன்றியது.    ஸ்ரீநிதி தன்ன

நீ என் முதல் காதல் -6

அத்தியாயம்-6    ம்ருத்யுவிடமிருந்து ஸ்ரீநிதி பிரிய முற்பட சட்டென ம்ருத்யு இயல்பான நிலைக்கு மாறினான்.     "யூ டோண்ட் வொர்ரி ஸ்ரீ. எப்படியாவது மேரேஜை டிராப் பண்ணறேன்" என்றதும் தான் ஸ்ரீநிதி நிம்மதியானாள்.      "ஆமா உன் காதல் எஸ்.டி.டி(ஹிஸ்ட்ரி) சொல்லு கேட்போம்" என்று விரும்பதகாதது போல கேட்டான்.    "இங்கயே நின்றுட்டே கேட்கணுமா? வா அங்கிருக்கற பிட்ஸா ஹட் போகலாம்" என்று கைப்பிடித்து இழுத்து சென்றாள்.      அவள் கைகள் தன்கைகளை பிடித்திருக்க, மணக்க வந்த ஆவலில் இப்படி தான் திருமணமாகும் நேரம் தான் அவளை பிடிப்போமென கனவு கண்டவனுக்கு எள்ளல் புரிந்தது மனம்.       பீட்ஸா ஹட்டில் தனக்கானதை ஒப்புக்கு கூறிவிட்டு கதையை தொடர்ந்தாள். "ஜீவியை முதல்ல பார்த்தது, மம்மிக்கு தொழில் முறையில் அவார்ட் கொடுக்கற பங்ஷனில் சந்திச்சேன்.     டேடி மம்மி இரண்டு பேரும் இல்லாத நேரமா வந்து அவனா இன்ட்ரோ பண்ணிக்கிட்டான்.   ஆப்போசிட் டீம்னு தான் சொல்லி பேசினான்.          அதனால, முதல் அறிமுகமே உண்மையா தான் ஆரம்பிச்சது. ஜஸ்ட் ஒரு குட்டி அறிமுகத்தோட ஓடிட்டான்." என்றதும் ம்ருத்யு மனமோ 'அத்

நீ என் முதல் காதல் -5

அத்தியாயம்-5    ம்ருத்யு ஏர்போர்ட்டில் ஏறிவிட்டு போனில் ஸ்ரீநிதி புகைப்படத்தை வைத்து தனியாக சிரிக்க, ஏர்ஹோஸ்டர் பேசியது காதில் கேளாது இருந்தான்.      அவன் தோளை தீண்டவும் இருவிழிகளை ஏறிட்டு பார்க்க, போனை அணைக்க கூறவும், பிளைட் மோட் போட்டுவிட்டு "சாரி" என்று கொஞ்சிய முகத்தோடு மகிழ்ச்சியாக பயணித்தான்.     முகமெங்கும் விகாசித்து அழகான இளைஞன் சிரிக்க, ஏர்ஹோஸ்டர் பெண்களும் ம்ருத்யுவை தான் வைத்த கண் வாங்காமல் பார்க்க, அவனோ தன் மகிழ்ச்சியை குறைத்து கொண்டு தன் வெட்கத்தையும் ஆசையையும் ஸ்ரீநிதியிடம் காட்டவே துடித்தான்.  ம்ருத்யுவை அழைத்து வர ஏர்ப்போட்டில் காத்திருந்தாள் ஸ்ரீநிதி.     தந்தை யுகேந்திரன் தாய் ஷண்மதி இருவரும் ம்ருத்யுவை அழைத்து வர தன்னையே அனுப்ப, முதலில் மறுத்தவள் பின்னர் தாய் ஷண்மதியோ 'என்ன ஸ்ரீநிதி குட்டி வெட்கமா? ம்ருத்யு உன் அத்தை பையன் தானே, இத்தனை நாள் எப்படி பழகினிங்களோ அப்படி தான் ஆப்டர் லைப்பும் வாழப்போறிங்க. நீயே போய் கூட்டிட்டு வா" என்று கார் கீயை தரவும், அன்னையை கடுகடுப்போடு கடந்தாள்.    இங்கு வந்ததும் அவனுக்காக காத்திருக்க, ம்ருத்யுவுக்கு எப்படியும் எத

நீ என் முதல் காதல் -4

 அத்தியாயம்-4     ஸ்ரீவினிதா முதலில் மகனிடம் கூட உரைக்காமல் ஷண்மதியிடம் தாரிகா-பைரவ் பேசி சென்றதை கூறவும் ஷண்மதி உடனே சம்மதிக்கவில்லை.     அங்கும் இங்கும் நடக்கவும் லலிதாவோ "என்னடி இந்தளவு யோசிக்கற? சட்டுபுட்டுனு ஆகவேண்டியதை பாருங்க அத்தைனு அக்காவிடம் சொல்வனு பார்த்தா மௌவுனமா நடைப்போடற" என்று ஆதங்கமாய் கேட்டார்.   ஸ்ரீவினிதா மருமகளிடம் தயங்கலாம். சிறுவயதிலிருந்து ஷண்மதியை வளர்த்த லலிதா ஏன் தயக்கம் கொள்ள போகின்றார்?         அதனால் இலகுவாய் கேட்டு நின்றதும் "யோசிக்கணும் அத்தை. ம்ருத்யுவுக்கு பிடிக்குதானு கேட்கணும். ஏன்னா நான் தான் கட்டாயப்படுத்தி யுகனை மணந்தேன். என் பொண்ணுக்கு வர்ற மாப்பிள்ளையையும் கட்டாயப்படுத்த கூடாது பாருங்க. நமக்கு பிடிக்குதுனு ம்ருத்யுவுக்கு பிடிக்காம ஸ்ரீநிதியை அவன் தலையில கட்டி வைக்க முடியாதுயில்லையா?    ம்ருத்யு படிப்பு முடிஞ்சி வரட்டும் பேசலாம். எனக்கு ம்ருத்யு விருப்பம் முக்கியம்" என்றவள் யுகேந்திரனை காணவும் யுகேந்திரனோ கழுத்தை இறுக்கிய டையை தளரவிட்டு வந்தான்.  "அதுக்கு அவசியமேயிருக்காது. பாவனா கன்பார்ம்மா சொல்லறா ம்ருத்யு ஸ்ரீநிதி லவ்

நீ என் முதல் காதல் -3

அத்தியாயம்-3    ம்ருத்யு தங்கியிருக்கும் அறையெங்கும் ஸ்ரீநிதி நிறைந்திருக்க, தன்னிடம் வீடியோ காலில் பேசியவள் தான் காண்பதை கூட யோசிக்காமல் ஆடையை நெகிழ வைத்ததை எண்ணி குறும்போடு தனியாக சிரித்தான்.      'ஸ்ரீ நான் வீடியோ கால் கட் பண்ணலைனா என்ன நடந்திருக்கும். உஷாராயிட்டு இருப்பியா? இல்லை தேவி தரிசனம் கிடைச்சிருக்குமா?' என்று தனியாக சிரித்து தலையணையை நெஞ்சோடு தழுவி நிலைக்கொள்ளாமல் தவித்தான்.     ம்ருத்யு இன்று நேற்றல்ல உறக்கத்தை எட்டி நிறுத்தி இரவெல்லாம் ஸ்ரீநிதியை எண்ணி சிரித்து கனவில் வாழும் நிலை இங்கு வந்ததிலிருந்தே நடப்பது தான்.    மாமன் மகள் ஸ்ரீநிதி பிடிவாதக்காரி. எதிலும் தனக்கு முன்னிலை தரவேண்டுமென்று எதிர்பார்ப்பாள்.      சிறுவயதில் ஷண்மதி இரண்டாம் முறை கருவுற்ற போது, தம்பி வேண்டுமா? தங்கை வேண்டுமா? என்று கேள்வி முன்னிருத்த, ம்ருத்யு 'அத்தைக்கு பாய் பேபி பிறக்க வேண்டும்' என்றான்.    ஸ்ரீநிதியோ தன் தாயிற்கு கேர்ள் பேபி வேண்டும் என்றுரைத்தாள்.  கடவுள் தரும் குழந்தை எது வந்தாலும் ஏற்றுக்க வேண்டும் என்று இரு குழந்தைக்கும் புரியவைக்க, ம்ருத்யு சம்மதமாய் எந்த குழந்தையென்றா

நீ என் முதல் காதல் -2

அத்தியாயம்-2    ஸ்ரீநிதியோ காரில் சாய்ந்து தலையை தாங்கினாள்.        "உனக்கேன் இந்தளவு கோபம் வருது ஸ்ரீநிதி. அவங்க பேசியது தப்பு தான். உன்னை இன்சல் பண்ணறாப்ள பேசியது.    அதுக்கு கண்ணாடி குடுவையை வீசுவியா? கண்ணாடி உடைஞ்சு கண்ணுலபட்டு கண்ணு தெரியாம போயிருந்தா என்ன செய்வ? போலீஸ் கேஸ் அதுயிதுனு இக்கட்டுல தள்ளினா? ஸப்பா நினைக்கவே பகீரென்று இருக்கு." என்று பேசவும் ஸ்ரீநிதியோ போனில் படபடவென சாட் செய்யும் சத்தம் கேட்டது.        "ஸ்ரீநிதி நான் உன்னிடம் தான் பேசறேன்." என்று பாவனா கத்தவும், "காது கேட்குது பாவனா." என்றவள் தன் வேலையை நிறுத்தவில்லை.      "ஸ்ரீநிதி" என்றதும் "அவதலையெழுத்து என் கையால கண்ணு போகணும்னு இருந்தா போயிருக்கும். அவ்ளோ தான்." என்று பேசிவிட்டு ம்ருத்யுஜெயனுக்கு அழைத்தாள்.     இந்த நேரம் அவன் கல்லூரி நேரமென்று அறிந்து அழைத்து கொண்டிருக்க, பாவனாவோ "ஓகே ஸ்ரீநிதி நான் வீட்டுக்கு போகலை. என் பியான்சி வெயிட் பண்ணிட்டு இருப்பார், மால்ல இறங்கிக்கறேன்." என்றதும் டிரைவர்" என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தாள்.    "சரிங்கம்

நீ என் முதல் காதல் (On Going)

Image
* நான் கொஞ்சம் அரக்கி * கதையின் இரண்டாம் பாகம். அக்கதை வாசிக்காவிட்டாலும் இக்கதை புரியும். எல்லாரும் ஆன்டிஹீரோ எழுதினா நாம ஆன்டிஹீரோயின் எழுதுவோம்.🫣😜 ❤️ நீ என் முதல் காதல் ❤️  நாயகன் : ம்ருத்யுஜெயன் நாயகி : ஶ்ரீநிதி கதையை தொடர்ந்து வாசிக்க கீழேயுள்ள சுட்டியை க்ளிக் பண்ணுங்க.   அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -1   அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -2 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -3 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -4 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் -5 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல் -6 அத்தியாயம்👉  நீ என் முதல் காதல் -7 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -8 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல்-9 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -10 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -11 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல்-12 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -13 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -14 அத்தியாயம்👉 நீ என் முதல் காதல் -15 அத்தியாயம் 👉 நீ என் முதல் காதல்-16 அத்தியாயம் 👉  நீ என் முதல் காதல்-17 அத்தியாயம் 👉  நீ என் முதல் காதல் -18 அத்தியாயம் 👉  நீ என் முதல் காதல் -19 அத்தியாயம் 👉  நீ என் முதல் காதல் 20

நீ என் முதல் காதல்-1

💕நீ என் முதல் காதல் 💕 அத்தியாயம்-1 'சாகும் வரை உண்ணாவிரதம்', 'முதலாளி வர்க்கம் ஒழிக', தடை செய் தடை செய் விலங்குகளை வதைப்பதை தடை செய்' இத்யாதியான கோஷங்கள் மெத்தையில் கிடந்த அலைப்பேசியில் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது. "மேடம் சத்தத்தை கேட்டீங்க தானே. என்னால அங்கயிருந்து பேசமுடியலை. ஒரே கூட்டம், கோஷம். கண்ட்ரோல் பண்ண முடியலை மேடம். போலீஸ் வந்து தலையை பிச்சிட்டு இருக்காங்க. கூட்டத்தை அப்புறப்படுத்தவும் முடியலை. அட்த சேம் டைம் நம்ம சொல்ல வர்றதை காது கொடுத்து கூட கேட்க மாட்டேங்கறாங்க." என்று ஷண்மதியின் பி.ஏ.ஜான்சி தான் தனியாக வந்து ஒரு காதை மூடி பேச வந்ததை கூறினாள். ஷண்மதி கையில் வைர பிரேஸ்லெட் அணிந்து கொண்டிருந்தவளோ, "டைம் செவன் ஓ கிளாக் ஆகுது ஜான்சி. வித் இன் டூ ஹவர்ஸ்ல அங்கிருந்து எல்லாரையும் ஓடவிடறேன். டோண்ட் வொர்ரி. நீ காபி டீ குடிச்சிட்டு போனியா இல்லையா? குடிக்கலைனா ஆபிஸ்ல போய் முதல் வேலையா காபி மேக்கர்ல சூடா காபி கலந்து குடி." என்று நிதானமாக உரைத்தாள் ஷண்மதி. தோல்பதனிடும் தொழிற்சாலையின் உரிமையாளர். தாய் தந்தையர் இறந்துவிட்டப்பின் முழ