Posts

ஏழைகளாக திரிகின்றாய் ...

அப்பரந்து விரிந்த வானத்தில் சிறகை விரித்துப் பறந்திடும் அப்பறவைக் கூட்டம் கூட அடுத்த வேளை உணவை சேகரிப்பதில்லை நாளும் உழைத்து உண்ணும் பரவசத்தில் லயிக்கின்றது மனிதா...  நீ மட்டும் தான் ஏழு தலைமுறைக்கு பணத்தைச் சேர்த்து வைத்து ஏழைகளாக திரிகின்றாய் மனதளவில் ...                        -- பிரவீணா தங்கராஜ் .

@ துளிப்பா ( ஹைக்கூ )@

துளிப்பா கிளிக் செய்தால் சைட் லிங்க் open ஆகும் ரீடர்ஸ்.  கடிகாரம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum வண்ணம் இழப்பு – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum மதிப்பெண் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum போதை – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum எழுதுக்கோல் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

பெண்மனம்

Image
ஆழியே உன்னைப் போலவே பெண்மனம் அலைக்கழித்தே எதையும் தெளிவாய் செப்பிடாது தெளிவாய் இல்லாததாக தோற்றமிருந்தும் உள்ளுக்குள் தெளிந்தே இருக்கும் பெண்மனம் ஆகாயமே உன்னைப் போலவே அவள்குணம் அன்பை விரிந்தே நல்கும் தாய்மனம் உள்ளம் கொள்ளையிடும் குழைந்தைகுணம் வானத்தின் தூய்மை போல் மேலோங்கும் வானமென்ன கடலென்ன வையகம் போற்றிடும் பெண்ணே உனக்கு ஒப்புமைக்கு பஞ்சமென்ன... வானத்தை கையில் பிடிப்பவள் நீயே...! கடலுக்குள் கவி தேடும் முத்தும் நீயே...!                       -- பிரவீணா தங்கராஜ் .

தாயின் நேசம்

Image
புன்னகை ஒன்றே போதுமடி உனக்கு புவிதனில் நீயொரு பேரழகி என்பதற்கு காந்தத்தின் ஈர்ப்பை கருவிழியினில் காட்டி கண்கள் இரண்டும் கவிமொழி பேசுதடி கண்ணனின் குறும்பை மிஞ்சிடும் பெதும்பை நீ கார்மேகத்தின் செல்ல மகளே தாயின் சேலை விளிம்பில் நீ பிடிக்க சக்கரமாய் சுழலுமடி தாயின் நேசம் .                 -- பிரவீணா தங்கராஜ் .

நீயே தானா ...?!

Image
கீச் கீச் யென ஆடிடும் அவ்வூஞ்சலில் சில்லறை சிதறிவிழும் அளவிற்கு குட்டிமகள் சிரிக்க அவள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் தெரிந்தே தப்பும்தவறுமாய் நீண்ட பதில் அளித்து கோமாளியாய் நிற்பது சாட்சாத் எப்பொழுதும் என்னிடம் மிடுக்கோடு ஹைக்கூ போன்று சுருங்க பேசிடும் நீயே தானா ...?!                      -- பிரவீணா தங்கராஜ் 

கொசு

ஒரு வருடத்திற்கு இருமுறை ரத்ததானம் என்று சொல்லி வையுங்கள் தினமும் ரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களிடம் .😉😬              பிரவீணா தங்கராஜ் .

வாழ்க்கை யென்னும் கல்வி

Image
எட்டு மைல்கள் ஏழு மைல்கள் நடந்தே புத்தகப் பையை முதுகில் சுமந்து நீரோடைக் கடந்து நிலங்களைக் கடந்து மணி அடித்து முடித்தப் பின்னே சுவரின் மறைவில் தமிழ்த்தாய் வாழ்த்து முடிவில் ஆசிரியர்கள் பார்க்காதப் போது சாரையாய் நின்றிருந்தக் கூட்டத்தில் பையோடுக் கலந்து விட்டு மூச்சு வாங்கி வகுப்பறையில் நுழைந்து திக்கித் திணறி கற்ற ஆங்கிலத்தில் இருந்த நிறைவு இன்று ஆயிரங்களை அள்ளி வழங்கி நுனி நாக்கில் பிள்ளைகள் பேசிடும் ஆங்கிலத்தில் ஏதோவொன்று மனதை நிறைய விடாது குறைந்தே இருக்கின்றது வாழ்க்கை யென்னும் கல்வி அவர்கள் கற்றிடாது செல்வதால்...                    -- பிரவீணா தங்கராஜ் .

குளிர்சாதனப் பெட்டி

அடிக்கடி குளிர்சாதனப் பெட்டி திறக்கப்படவில்லை தொலைக்காட்சியில் இன்று சுட்டி டிவி இடம் பெறவில்லை குளியலறையில் குழாய் நீர் சொட்டியபடி மூடவில்லை வாயிலில் கழற்றிய பாதணிகள் ஜோடிகள் மாறமலும் கலைந்திடாது இருந்தன இந்நேரம் யூகித்தது சரி குட்டி மகள் அவள் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கின்றாள் .                     -- பிரவீணா தங்கராஜ் .

👴 முதுமையின் ஏக்கம் 👵

தோல் சுருக்கத்தினுள் ஆரம்பமாயின  முத்தாய் நீண்டது பிணிகளின் எழுச்சி நேரங்களை வெறுமைகள் புசித்து கொண்டிருந்தன சோதனைகளாய் மைந்தர்கள் தூரதேசம் சென்றதும் உயிர் சுவாசமான பேரன் பேத்திகளை கொஞ்சிட மாதயொரு முறை கூட கிட்டாத ஏழ்மையானேன் தனிமை சிறையில் பேச்சுக்கு ஆளின்றி முதுமையின் ஏக்கம் தொடர்கிறது மரணம்வரை                              --பிரவீணா தங்கராஜ் . 

இன்று

நேற்றைய என்னை ரசித்துப் பார்த்து நினைவுக் கூர்ந்து இனிய நேரங்களாக - அதில் தொலைந்து போகின்றனர் நாளைய என்னை யோசித்து யோசித்து தவித்துத் தவித்து அதிலும் என்னை தொலைத்தே போகின்றனர் இன்றைய என்னை மட்டும் சலித்துக் கொண்டே நகர்கின்றனர்                  -- பிரவீணா தங்கராஜ் .

வாசலிலே ஏங்கும் மங்கையிவள்

Image
நினைவுகளின் ஜாலத்தில் நேரங்களோடிட  நீங்காத நினைவுகள் முழ்குதிங்கே பனிப்பொழியும் நிலவின் சுடரொளியில்  கனியிதழில் கவிதைப் பேசிடவே  கண்களில் மையல் தேக்கி வைத்து  கைவிளக்கு ஏந்திய காரிகையிவள்  மல்லிகை மணம் வீசி உன் வரவை  வாசலிலே விழிப் பதித்து வருடிகின்றாள் .                            -- பிரவீணா தங்கராஜ் .  

சொல்லியது பழமை

Image
பாங்காய் கட்டுக்கட்டிய பாய்களை பதவிசனமாய் சும்மாட்டில் அமர்ந்தி கூவிக் கூவி விற்று முடித்து கூடுகள் தேடி ஓட்ட மெடுக்க பாய்கள் விற்று வந்த பணம் - பிள்ளையின் படிப்புக்கும் பழங்கஞ்சிக்கும் போதுமானதாயிருக்க வீதியென்ன வீடுயென்ன யென்பதுயெல்லாம் உழைக்கும் கரங்களுக்கும் தெரிவதில்லை பாதணியில்லை இந்த பாதங்களுக்கு பஞ்சு மெத்தையில் கிட்டிராத நித்திரை கோரைப்பாயி சுமந்தவளிடம் மண்டியிட்டே பங்கமின்றி துயில் கொள்கின்றது . கோரைப்பாயின் மேற்படுக்க நோய் நொடிகள் இங்கில்லை பந்திப்பாயில் பகிர்ந்து உண்ண பாசமாதில் நீண்டு போக பங்கமின்றி வாழ்ந்திடவே சொல்லியது பழமை               -- பிரவீணா தங்கராஜ் .

👽வேற்று கிரகத்தில் ஒரு நாள்👽

Image
அமைதி தேடி அழ மூச்செடுத்து அசைந்தாடும் ஊஞ்சலிலே வேம்பு மரத்தடியில் ஆடுகையிலே ஆகாய மேலிருந்து வெள்ளி தட்டொன்று பறந்து வர விழியிடுக்கி கண்டு வியந்தேன் அருகே வர வர அது பெரிதானது அக்கணம் உணர்ந்தேன் அது பறக்கும் தட்டென்று வாயில் பசைப்போல பேச்சற்று நிற்கையிலே உள்ளே செல்ல உள்மனம் உந்தியது மெல்ல நடந்தே உள்ளே செல்ல மேலே எழும்பி 'ஜிவ்'வென பறந்தது யாருமில்லையாயென சுற்றி முற்றி பார்க்கையிலே புருவமில்லா ஒற்றை விழியொன்று இருபக்க பட்டாம்பூச்சி கொடுக்கு நீட்டி பாதரச நிறத்தையொத்த உருவமொன்று அருகே நின்றது குறுந்தகட்டின் கீச்சு குரலில் புரியா மொழியில் ஏதோ சொல்ல விழிபிதுங்கி நின்றேன் நானும் பதட்டம் வேண்டாம் பாதகம் செய்யும் மனித ரகமில்லை யென்றது தேன்தமிழில் தமிழ் கேட்டு முகம் மலர்ந்தேன் 'பாதகம் செய்யும் மனிதரகமில்லை' யென்ற வார்த்தையில் அகம் சுணக்கம் அடைந்தேன் உணவு உண்ணாது தலை சுற்றல் நிகழ மூன்று கையுடைய கிரகவாசி மாத்திரையும் கருப்பு நிற பானத்தையும் தயங்கிய பெற்று உண்டு முடித்தேன் அட்டைப்பெட்டியாய் தொங்க விடப்பட்ட வீடு அங்கே நீரில்லை நிலமில்லை

நல்லதே நினை

Image
முடக்கி விடவில்லை உலகம் என்னை முடங்க விடவில்லை நானும் மனதை எழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாக எண்ணம் என்ற உந்துதலில் நினைவாலே சிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலே சிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலே கொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம் என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம் .              -- பிரவீணா தங்கராஜ் .

கூண்டுக் கிளி இவள்

Image
மென் பாதங்களை அத்திரிசாரம் கட்டியிருக்க  மலர் கரங்கள் மந்திரக்கோல் பற்றியிருக்க தூரிகை வடித்தன சுதந்திரக் கிளியொன்றை காரிகை இவளுக்கும் கிட்டுமோ விடுதலை ?                               --  பிரவீணா தங்கராஜ் .