இடுகைகள்

மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

மர்ம நாவல் நானடா-14

   அத்தியாயம்-14     கண்ணாடியை துடைத்து விட்டு சுப்ரமணியம் "நான் நம்புவேன் ஏன்னா அவன் ஒரு புகழ்பெற்ற மாயாவியா வரவேண்டியது.     ஒரு கிரேட் மேஜிசியனா வந்து பெயரும் புகழும் எடுக்க அவனுக்கு திறமை இருந்தது. ஆனா... காலம் அவனை முடக்கிடுச்சு." என்று சோகத்தை தத்தெடுத்தார்.     எனக்கு 19 வயசுல கல்யாணமாகிடுச்சு, 22 வயசுல தனஞ்செயன் பிறந்தான்.       உங்க தாத்தாவுக்கு 23 வயசுல தான் கல்யாணமே ஆச்சு.        உங்க தாத்தாவுக்கு சின்ன வயசுலயிருந்தே சர்க்கஸ் வித்தைக்காட்டறது, பொருளை மாத்தறது இப்படி வேடிக்கையான விஷயத்துல ஆர்வம் அதிகம்.       அதுக்காக கத்துக்கற ஆர்வத்துல இளையமான் படிப்பை கோட்டை விட்டான். படிப்பில தான் கோட்டை விட்டானே தவிர இந்த ஊர்ல மேஜிக்-ஷோ நடத்தறவங்க யாரு என்னனு தெரிந்து அவங்களிடம் வித்தை கத்துக்க ஆரம்பிச்சான்.    அப்பயெல்லாம் இந்த தொப்பில முயலை எடுத்து காட்டறது, கலர் கலரா பேப்பர், பெட்டிலபடுத்து மறைந்து வர்றது, கையில இருந்த காயின் மாயமாகி கிடைக்கிறது. இதெல்லாம் செய்ய கத்துக்கிட்டான்.    கல்யாண வயசு தாண்டியும், எனக்கு குழந்தை பிறந்தும் இவன் இந்த சித்து வேலையில இருக்கானேனு அவனோட அப

மர்ம நாவல் நானடா-13

  அத்தியாயம்-13       அடுத்த நாள் ஏழுமணிக்கு சென்னை வந்து சேர, அதுவரை ஏசி காரில் சொகுசாக ஹரிஷ் உறங்கி வழிந்தான்.       அருள் வந்து ஹரிஷ் தோளைத்தட்டி எழுப்ப, அவனோ "யாஷிதா சும்மாயிரு. தூங்கலாம்... அட்லிஸ்ட் கனவுலயாவது முகம் காட்டு" என்று அருளின் கையை எடுத்து கன்னத்தில் ஒற்றினான்.    அருளை கடந்து சென்ற இருவர் ஹரிஷ் காருக்குள் கையை பிடித்து இழுக்கவும், தினுசாக பார்க்க அருளோ "ஏய்.. சீ.. கையை விடுடா. என்னமோ மாமியார் வீட்ல சொகுசா படுத்த மாதிரி இருக்க. போறவர்ற பொண்ணுங்க என்னை அசிங்கமா பார்க்கறாங்க." என்று கன்னத்தில் தட்டினான்.     "ஆஹ்... ஏன் அண்ண அடிக்கறிங்க. பொண்ணுங்க பார்த்தா நீங்களும் சைட் அடிங்க." என்று கொட்டாவி விடுத்து எழுந்தான்.    "கருமம்... சென்னை வந்துடுச்சு முதல்ல எழுந்து பல் விலக்கி காபி குடி. இளையமானை பார்க்கணும்னு பறந்தியே" என்று கூறுவதே கிலியை ஏற்படுத்தியது.      மனதில் 'நல்லதே நினை நல்லதே நடக்கும்' என்ற தாத்தாவின் போதனை நெஞ்சில் வந்து தெம்பூட்டியது.     தன் கூட வந்த பாவத்திற்கு ரஞ்சன் பலிகாடாக மாறக்கூடாதென்று யோசித்தான்.    ரஞ்சன

மர்ம நாவல் நானடா-12

  அத்தியாயம்-12     அருளோ ஹரிஷ் சொன்ன கதையை அப்படியே கலிவரதனிடம் விவரித்தான்.        "என்ன அண்ண பண்ணறது. நிஜமாவே அவன் லவ் பண்ணி வந்தானா? இல்லை விஷயம் தெரிந்து பம்மறானானு ஒன்னும் புரியலை." என்று தனியாக வந்து கேட்டான்.      "டேய்... விஷயம் தெரிந்து வந்தவனா இருந்தா இந்நேரம் போனை வச்சி ஏதாவது ஓரு மெயில் ஐடி ஓபன் பண்ணி சேனலை ஆரம்பிச்சு நான் சொன்ன வாக்கு மூலமான ஆதாரத்தை கூவி கூவி வித்திருப்பான். ஏதோ இடிக்குது...    இவனுக்கு அந்த பொண்ணு வேற யாருனே தெரியலைனு சொல்லற.      ஒருவேளை அந்த இளையமான் அந்த யாஷிதாவுக்கு வரன் பார்த்து அந்த பொண்ணிடம் சொல்லிருந்தா, அந்த பொண்ணு இந்த பையலிடம் நூல் விட்டு எப்படி கேரக்டர்னு டெஸ்ட் வச்சிருக்குமோ என்னவோ." என்று கலிவரதன் கூறியதில் அருளோ கூர்ந்து கவனித்தான்.    "சாத்தியம் இருக்கு அண்ண. ஏன்னா இளையமானுக்கும் இவனுக்கும் தொடர்பு இருக்கே" என்று ஆமோதிப்பாய் பேசினான்.    கலிவரதனோ "நீ என்ன பண்ணற? அவனை அலோக்கா தூக்கிட்டு சென்னைக்கு வந்துடு. இங்க இளையமானையும் இவனையும் மீட் பண்ண வைப்போம். நம்மிடம் இளையமான் வாயை திறக்க மாட்டேங்கிறான். இந்த ப

மர்ம நாவல் நானடா-11

  அத்தியாயம்-11 ஹாசினியோ "சார்... யாஷிதாவுக்கு என்ன பிரச்சனை? என் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இதே போல மார்னிங் தான், ஒரு கும்பல் வந்துச்சு. யாஷிதா எங்கனு கேட்டு வீடு முழுக்க தேடினாங்க. பொருட்களை சேதாரம் செய்து, வீட்டோட மூலை முடுக்கெல்லாம் துவசம் பண்ணிட்டாங்க. யாஷிதாவுக்கு ஏதோ ஆபத்துனு அப்ப தான் எனக்கே தெரியும். இளையமனுக்கும் யாஷிதாவுக்கும் போன் போட்டா போகவேயில்லை. அப்பாவும் நானும் தான் இளையமானையாவது வீட்ல போய் பார்க்கலாம்னு கிளம்பி போனா, அங்க இளையமானை ஸ்டக்சர்ல ஆம்புலன்ஸில் ஏத்திட்டு போனாங்க. அதோட நாங்க இளையமான் சாரை கடைசியா பார்த்தது. போலீஸ்ல கம்பிளைன் பண்ணினா, அதெல்லாம் 'இளையமான் யாஷிதா பத்தி மூச்சு விடாதிங்கம்மா. பெரிய இடத்து விவகாரம்'னு எங்களை பேசவிடாம துரத்திட்டாங்க. அன்னைக்கு வீட்டை துவசம் பண்ணிய ஆட்கள் மட்டும் திரும்ப வந்து இனி போலீஸ் கீலிஸ் போன சங்கை அறுத்துடுவோம்னு மிரட்டினாங்க. அதோட யாஷிதாவை பார்த்தா தகவல் சொல்ல சொன்னாங்க. அநேகமா இளையமான் அவங்க கஷ்டடில இருக்காரா இல்லை செத்துட்டாரானு டவுட் இருக்கு. யாஷிதா வந்தா தான் மத்தது தெரியும். நானும் இப்பவரை பெரிய பெரிய ஆட்க