bye bye 2018 welcome 2019
 
    இன்னுமொரு வாரமே  என்னை விட்டுப் பிரிய போகின்றாய்...!  நான் கலங்குவதாக யில்லை  உன்னை சந்தித்தப் போது  எத்தகைய ஆர்வம் கலந்து  எதிர்பார்ப்போடு சந்தித்தேனோ...  அதே ஆர்வத்தோடு  வழியனுப்ப போகின்றேன்  நான் தான் நானே தான்  நீ எனக்கு கொடுத்த  இன்பத் துன்பத்தையும்   அன்பும் அழுகையும்  ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும்  வித்தியாச அனுபவங்களையும்  ஏற்றுக் கொண்டு  நிறைவான காதலோடு  உன் பிரிவுக்கு தலை வணங்கியே  பிரியா விடை தருகின்றேன்  உன்னைப் போலவே  எண்ணில் கலக்க  வரவிருக்கும் இவ்வாண்டை  அதே ஆர்வத்தோடு சந்திக்க  தயாராகின்றேன்.             -- பிரவீணா தங்கராஜ்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
