நீ என் முதல் காதல் -21

அத்தியாயம்-21

மெத்தையில் புரண்டு புரண்டு படுத்த ம்ருத்யு கைகளை துழாவினான். ஸ்ரீநிதி இருக்கும் சுவடு இல்லையென்று தோன்றவும் இமை திறந்து எழுந்தான். 

தனக்கு நேர் எதிராக இருந்த குஷன் சோபாவில் கால் மேல் கால் போட்டு வீற்றிருந்தாள். 

"தூங்கலையா ஸ்ரீ. எதுக்கு இப்படி நைட் எல்லாம் தூங்காம உட்கார்ந்திருக்க?" என்று தூக்கம் கலந்து கேட்க ஸ்ரீநிதி ஏகக்கடுப்பில் ம்ருத்யுவை பொசுக்கும் பார்வையில் வெறித்தாள். 

ம்ருத்யுவிற்கு ஏதோ தவறாய் படவும், குளியலறை சத்தம் கேட்டது. 

ம்ருத்யு ஸ்ரீநிதிக்கு என்று கொடுக்கப்பட்ட அறையில் குளியலறையிலிருந்து சத்தம் வரவும், ம்ருத்யு திரும்ப, அங்கே ஜீவி தலை துவட்டியபடி வந்தான். 

ம்ருத்யுவுக்கு ஜீவியை கண்டதும் மனம் மெட்ரோ ரயிலாய் வேகமெடுத்தது. 

'போச்சு.. ஸ்ரீநிதிக்கு உண்மை தெரிந்திடுச்சு. நான் தான் கடத்தி அறையில் அடைச்சி வச்சதை தெரிந்திருப்பா.
இந்த ஜீவி மூதேவி எல்லாத்தையும் சொல்லியிருக்கும். 
பச் என்னோட பஸ்ட் நைட் ரூம்லயிருந்து நான் ஸ்ரீநிதி ஒன்னா குளிச்சி ஒன்னா புரண்டு இந்த ரூம்ல இருக்க வேண்டியது. 

கிரகம் என் ரூம்ல என் பாத்ரூம்ல இவன் குளிச்சிட்டு வந்துட்டுயிருக்கான்.' என்ற பார்வையை வீசினான். 

ம்ருத்யுவோ இதே முன்பானால் 'சாரி ஸ்ரீநிதி ப்ளிஸ் ஸ்ரீநிதி' என்று ஆரம்பித்து விளக்கம் கொடுத்து தன் காதலுக்காக அடிபணிந்து சென்றிருப்பானோ என்னவோ? ஆனால் இரத்தத்தை ருசித்த அசைவ விலங்கு, பால் பழத்தை சீண்டாதது போல, கடத்தியப்பின் தன் காதலியை மணந்தவனுக்கு தற்போது அடிபணிய பிடிக்காமல் நின்றான். 

உண்மை தெரிந்துவிட்டதா என்ற இளக்காரத்தோடு பல் விளக்க சென்றான். 

"பாரு ஸ்ரீநிதி. கொஞ்சமாவது தப்பு செய்தவன் பதறுவானே அப்படியிருக்கானா இவன்? என்னவோ தப்பு செய்துட்டேன். இப்ப என்ன? அப்படியென்ற ரேஞ்சுல இருக்கான். இங்க பாரு ஸ்ரீ. நீ இந்த நிமிஷம் என்னோட வந்தாலும் நான் கூட்டிட்டு போறேன். பட் நீ தான் முடிவெடுக்கணும்." என்றான் ஜீவி. 

ம்ருத்யு அதை கேட்டவனாக வாயில் நுரைப்பொங்க பல் தேய்த்திருந்தான். தாடை இறுகியது நேற்று போல மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட தோன்றியது. ஆனால் அங்கே ஸ்ரீநிதியும் இருக்கின்றாள். முதலில் அவளது எண்ணவோட்டம் என்னதாக உள்ளதென ஆராய்ந்து முடிவெடு என்று சமாதானப்படுத்தியது.

ஜீவியை பொறுத்தவரை தன்னை கடத்தியது ம்ருத்யு மட்டுமே. இதில் ஸ்ரீநிதி தாய் ஷண்மதி தலையீட்டல் இல்லை. அவர்கள் பாவம் அப்பாவி ஜூவன் என்ற நினைப்பு. 

பல் விளக்கி முடித்தவன், அங்கிருந்த தனி தனி சோப் ஷாம்பு என்று ஹோட்டலிலேயே தரும் சிறு சிறு பேக் செய்தவையை கொண்டு குளித்து முடித்து தலை துவட்டி வந்தான். 

ஹேர் டிரையர் கொண்டு முடியை உலர்த்தியவன், ஸ்ரீநிதியை கண்டு பார்வை வீச, அவளும் இவன் செய்கையை தான் அளந்துக் கொண்டிருந்தாள்.

ஸ்ரீநிதி ம்ருத்யு இருவருமே யார் முதலில் போரை துவக்க என்ற ரீதியில் இருந்தனர். 

இங்கே பாவப்பட்ட ஜீவன் நான் தான். அதனால் நானே ஆரம்பிக்கின்றேன் என்று துவங்கினான் ஜீவி. 

"என்ன ஸ்ரீ அவனையே பார்த்துட்டு இருக்க? அவனை உன் பாணியில விசாரி. என்னை தான் பொறுமையாயிரு நானே பேசிக்கறேன்னு கட்டிப்போட்டுட்ட" என்று பொறுமினான். அதை கேட்டு ம்ருத்யுவிற்கு அலட்சியமாக சிரிப்பு உருவானது.

"பாரு ஸ்ரீ சிரிக்கறான்" என்று சுட்டிக்காட்ட, ஸ்ரீநிதி எழுந்து ம்ருத்யு அருகே வந்தவள் பளீரென்ற அறையை பரிசாய் தந்தாள். 

ம்ருத்யுவோ, தாடையை பிடித்து சரிச்செய்தவாறு "உன்னிடம் அடிவாங்கினவன் எல்லாம் என்னிடம் கம்பிளைன் செய்தப்ப ஒரு பொண்ணு அடிச்சி வலிக்குமா? ஓவரா சீனை போடறாங்கன்னு சிரிப்பேன். பட் இப்ப நீ அறைந்ததும் வலி புரியுது." என்றவன் கன்னத்தை தேய்த்தான். 

"ஏன்டா... ஏன் இப்படி செய்த? நான் கூட அம்மா என் லவ்வை தெரிந்துக்கிட்டு ஜீவியை கட்டிப்போட்டு உன்னை கட்டி வைக்க பிளான் போடறாங்கன்னு நினைச்சேன். ஆனா என் கூடவேயிருந்து, என் காதலை நல்லா தெரிந்து, என் மனசுல யாரு இருக்கான்னு தெரிந்தும் நீயே என் காதலை அழிச்சிருக்க? ஏன்டா?" என்று சட்டையை பிடித்தாள். 

ம்ருத்யுவிடம் மயான அமைதி 'அப்படின்னா அத்தை இதுல எனக்கு உதவியது இவளுக்கு தெரியாதா? நான் மட்டும் தான் மாட்டினேனா? என்றவன் சிந்தனையில் இடைப்புகுந்தாள். "இங்க நீ சென்னையில் காலடி எடுத்து வர்றப்ப விமான நிலையத்திலருந்து கூட்டிட்டு வந்தப்பவே நான் ஜீவியை விரும்பறதை சொன்னேன் தானே? அதை மீறி ஏன்டா அவனுக்கு கம்பெனி பத்திரம் கைக்கு கிடைக்கறதுக்கு டிலே பண்ண? எவனுக்கோ பணத்தை அள்ளி  கொடுத்திருக்க, அவனை கட்டிப்போட்டு அடைச்சி வச்சி கொடுமைப்படுத்திருக்க, ஏன்டா ஏன்?" என்று காட்டு கத்தலோடு சட்டையை பிடித்து உலுக்கினாள். புது உடை அவளது ஆங்காரத்திற்கு பலியாகி பட்டன் தெரித்தது. 

ம்ருத்யு மெதுவாக அவளது கையை பிடித்து அவள் கண்ணை நோக்கி, "நீ என் முதல் காதல் ஸ்ரீநிதி. உன்னை யாருக்கோ தாரை வார்த்து கொடுத்துட்டு என்னால இருக்க முடியாது. என் காதலை நான் எனக்கு தெரிந்த வழியில தக்க வைக்க முயன்றேன். தட்ஸ் இட்" என்றான். வேறெந்த விளக்கமும் கூறவில்லை.

ஸ்ரீநிதிக்கு வெறியேறியது. "இதை நீ தாலி கட்டறதுக்கு முன்ன சொல்லிருக்கணும். நான் ஜீவி விரும்பியருப்பது தெரிந்தும், இந்த மாதிரி நம்பி கழுத்தறுத்தா அதுக்கு பேரு வேற. 

என்னோட விருப்பத்துக்கு மதிப்பு தர்றாம நீயா ஒரு முடிவெடுத்து என்னை உன் மனைவியா மாற்ற முடியாது. 
நான் டிவோர்ஸ் அப்ளை பண்ணிடுவேன். ஜீவி அதுக்கான ஏற்பாடு செய்டா" என்று ஆணையிட்டாள். 

"ஸ்ரீ அவசரப்படற" என்று கூறவும் "யார் டா அவசரப்பட்டது? காஞ்ச மாடு கம்புல பாய்ச்ச மாதிரி நீ நேத்து பிஹேவ் பண்ணின. அவசரப்பட்டது நீ. நான் எவ்ளோ பொறுமையா அம்மாவிடம் என் காதலை சொல்ல வெயிட் பண்ணினேன். ஆனா எல்லாத்தையும் கெடுத்தது நீ." என்று பேசவும், ம்ருத்யு அவளருகே வந்து "பஸ்ட் கிஸ் என்னோட, அது எந்த உணர்வையும் உனக்குள்ள தட்டி எழுப்பலையா?" என்று கேட்டதும் தேகம் பற்றி எரிந்தது. 

நேற்று ஆறுதலுக்காக எண்ணிய முத்தங்கள் இதம் தந்தது. இன்று அதை எண்ணி பார்க்க அமிலத்தில் ஊறுவதாக தோன்றியது. நல்லவேளை வேறெதும் நடக்கவில்லையென்ற திடம்.

ஆனாலும் அக்கணம் இருந்த கோபம் கண்ணை மறைக்க, ஜீவியருகே வந்தவள் அவன் உதட்டில் பட்டும் படாமலும் முத்தமிட்டு விலகினாள். 

ம்ருத்யுவிற்கு தேகமெங்கும் பற்றியெரிந்தது. "என்னை ஏமாத்தி நீ ஆக்கிரமிப்பு செய்த முத்தம், இப்ப நான் ஜீவிக்கு கொடுக்கவும் உன்னை நெருப்புல போட்டு வாட்டியிருக்கும்னு நினைக்கிறேன்.  என்னோட மோதிட்ட ம்ருத்யு இதுக்கான தண்டனை நீ விவாகரத்து வாங்கறவரை அனுபவிப்ப." என்று ஜீவியின் கையை பற்றி நடந்தாள். 

ம்ருத்யுவின் கோபம் அவனுக்குள்ளிருக்கு ஒருவனை வெளிக்கொண்டு வரச்செய்தது. ஆனால் அது தற்காலிகமாக ஷண்மதி யுகேந்திரன் வரவும் நிதானமடைந்தான். 

"யார் இவர்?" என்று ஷண்மதி தெரியாதது போல மகளிடம் கேட்க, ஜீவி கையை அன்னை பார்க்கும் போதே விடுவித்தவள், காதலன் என்றா அறிமுகப்படுத்துவாள்? தொண்டை அடைக்க திணறவும் தந்தை யுகேந்திரன் வந்து, "யாராயிருக்க போறாங்க நம்ம பொண்ணோட பிரெண்டா தான் இருக்கணும். மேரேஜிக்கு விஷ் பண்ண வந்திருப்பார்" என்று கோடு போடும் விதமாக பேச்சை தர, "ஆமா அம்மா பிரெண்ட்" என்று பதில்தந்தாள். 

ஸ்ரீநிதிக்கு நேற்று ம்ருத்யு கையால் மஞ்சள் தாலியை கழுத்தில் சுமந்து இன்று இவன் ஜீவி தன் காதலன் என்று அறிமுகப்படுத்த சற்று தயக்கமே. 

அது ம்ருத்யுவிற்கு சாதகமாக எடுத்துக்கொண்டான். 

"எங்க பிரெண்ட் அத்தை. எனக்கும் ஸ்ரீக்கும் மட்டும் தெரிந்த பிரெண்ட்." என்று ஜீவி கையை விடுவித்தவளின் கரத்தை ம்ருத்யு பற்றினான். 
தந்தை காணவும் ம்ருத்யு கைகளை உதறிட மனமின்றி ம்ருத்யு கைக்குள் தன் கையை சிறையில் மாட்டியதாக நின்றாள். 

"சாப்பிட டைம் ஆச்சு. உங்களை காணோம்னு கூப்பிடலாம்னு ரிதன்யாவை அனுப்பினோம் அவளை காணோம் அதான் நாங்களா வந்தோம்." என்றதும் "நான் இங்க தான் இருக்கேன்மா" என்று அக்கா அத்தானை பார்த்து திகைத்து வந்தாள். தன் அக்கா அத்தானோடு விளையாட வந்த சிறு கிளி, அக்கா எவனையோ முத்தமிட கண்டு திகைத்து அதிர்ந்தாள். அதிலும் ம்ருத்யு அத்தான் எதிரில் என்றதும் பிளஸ் டூ படிக்கும் பாவை அவளுக்கு அதிர்ச்சியே.

"ஜீவி வாங்களேன் பேமிலியோட சாப்பிடலாம்." என்று கூப்பிட ஜீவி ஷண்மதியை தான் கண்டான்.
எங்கே ஷண்மதிக்கு தன் முகம் நினைவு வந்து தொலைக்குமோயென்ற பயம். ஸ்ரீநிதியை காண அவளோ "பிரேக்பஸ்ட் ஜாயிண்ட் பண்ணு ஜீவி" என்று கூற ஸ்ரீநிதியை பின் தொடர்ந்தான்.

"இப்ப அத்தையிடம் அறிமுகப்படுத்த வேண்டியது தானே? உன் ஆருயிர் காதலனை. ஏன் அத்தை தோலை உறிச்சி தொங்க விட்டுடுவாங்களா? இல்லை மாமா கல்லுல கட்டி கடலில் தூக்கி போட்டு மீனுக்கும் சுறாவுக்கும் உன்னை இறாவா ஆக்கிடுவாரா?" என்றான் நக்கலாக. 

என்னயிருந்தாலும் இந்த நொடி அவளால் ஜீவியை அறிமுகப்படுத்த முடியவில்லையே என்ற கொக்கரிப்பில் ம்ருத்யு எண்ணெய் ஊற்றினான். 

அதற்கெல்லாம் அசருமா இந்த அரக்கியின் மகள் குட்டிபிசாசு "இப்ப அறிமுகப்படுத்த முடியாது தான். ஆனா என் ஜீவியை சமாதானம் செய்திருக்கேன். கிஸ் பண்ணி சோ அடுத்து விவாகரத்துக்கு அப்ளை பண்ணி உன்னிடமிருந்து பிரிந்து போய் அவனோட வாழ்வேன் பார்க்கறியா? முத்தம் கொடுத்ததையே பார்த்துட்டு இருந்தவன் தானே நீ." என்று கையை கட்டி இளக்காரமாக பேசவும், ஜீவியோ சிரிக்க, ம்ருத்யு நிலை கவலையானது. ரிதன்யா தான் அத்தான் இங்க வந்து உட்காருங்க" என்று இழுத்து சென்றாள். 

அவள் கையை பற்றியதால் ம்ருத்யு அக்கணம் வினையாற்றுவது தவிர்க்கப்பட்டது. ரிதன்யாவுக்கு சண்டை வலுக்குமோ என்று பயம்.

ஷண்மதியோ ஜீவியை கண்டு ம்ருத்யுவை ஏறிட்டாள். உணவெல்லாம் இரண்டு நாளாக சரியாக சாப்பிடாதது ஜீவி வெளுத்து வாங்கினான். 

ம்ருத்யு தான் உணவை பிசைந்தபடி ஸ்ரீநிதியை எவ்வாறு சாந்தப்படுத்துவது? அல்லது எப்படி தன் வழிக்கு கொண்டு வருவதென்ற ஆழ்ந்த சிந்தனையில் கிடந்தான். 

   ஜீவி சாப்பிட்டு தனியாக ஸ்ரீநிதியிடம் "நான் கிளம்பறேன் ஸ்ரீநிதி. அவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு. முன்னவே ஆன்ட்டியிடம் பயப்படாம நின்று உன்னை விரும்பியதை சொல்லிருக்கணும். பச் என்னை அவங்க நினைவு வச்சிட்டு ரிஜெக்ட் பண்ணுவாங்கன்னு பயந்துட்டேன். பட் அது என் வாழ்க்கையை புரட்டிடுச்சு. இப்ப ஊரறிய அவனை கல்யாணம் பண்ணிட்ட. உடனே அழைச்சிட்டு போக முடியாது. டிவோர்ஸுக்கு மியூட்சுவல் கையெழுத்து வாங்கப்பாரு.
   ரொம்ப சோர்வாயிருக்கு ஸ்ரீநிதி. மூக்கு வேற வலிக்கு. அவன் அடிச்சதுல. டாக்டரிடம் கன்சல் பண்ணணும். எனக்கென்னவோ இவன் சும்மா விடுவான்னு தெரியலை." என்று பேசவும் ஸ்ரீநிதிக்கு சினத்தை கட்டுப்படுத்தும்  வழியை தவிர அப்பொழுது எதுவும் செய்ய முடியவில்லை. 

    பைரவ் தாரிகா மருமகளை வரவேற்க காலையிலேயே அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். 
  கூடவே ஸ்ரீவினிதா, லலிதா கூட புறப்பட்டிருந்தனர். 
   யுகேந்திரனுக்கு பைரவ் போன் வரவும் எடுத்து பேசி அங்கு வரவிருப்பதாக சென்றார்.

   ரிதன்யாவோ அக்காவை பின் தொடர்ந்து அழைக்க சென்றாள். அவளுக்கு ஜீவியோடு பேசுவது பிடிக்கவில்லை.  

   ஷண்மதி ம்ருத்யு மட்டும் அவ்விடத்திலிருக்க, "கல்யாணம் முடிஞ்சதுனு அவனை வெளியே உலாத்த விட்டுட்டியா ம்ருத்யு?" என்று பல்லை கடித்து கேட்டாள். 
   
  ம்ருத்யுவோ "அய்யோ அத்தை  அவனை ஸ்ரீநிதி நைட்டே கண்டுபிடிச்சிட்டா. நான் தான் அவனை கட்டிவச்சதையும் தெரிந்துக்கிட்டா. என்ன ஒரே ஆறுதல் ஜீவிக்கு நீங்க இதுல சம்மந்தப்பட்டது தெரியாது.

   ஸ்ரீநிதி என் மேல செம காண்டுல இருக்கா அத்தை. என்னால அடங்கி கெஞ்ச முடியாது. என் போக்குல பார்த்துக்கறேன். நீங்க தலையிட வேண்டாம். பிகாஸ் அவளுக்கு ஏற்கனவே உங்க மேல கோபமிருக்கு. ஜீவி விஷயத்துல நான் மட்டும் கெட்டவனா சம்மந்தப்பட்டவனா இருக்கறேன்.' என்று பேசினான். 

   "பின்ன நீ தான் உன் பிரச்சனையை சால்வ் பண்ணணும். அதுக்கு பதிலா காம்பிளிக்கேட் ஆக்காத. தனி வீடு தனியா சமாளி. அவ என் மேல கோபப்படுவா நீ அவளை சமாதானம் செய்து உங்க லைப் ஸ்மூத்தா போகும்னு நினைச்சேன். 

  நீ என்னடான்னா நீயா போய் கெத்து காட்டி மாட்டிக்கிட்ட" என்று எழுந்தாள். 

மகளோ இவளை போலவே அரக்கி அவதாரம் எடுத்திருக்க, ம்ருத்யுவை கண்டாள் ஷண்மதி. 

ம்ருத்யுவின் பெற்றோர் வீட்டுக்கு சென்றதும் பின்னர் தனிவீடு செல்வார்களே. 

ம்ருத்யுவோ அவனது வேலையை ஆரம்பிக்கும் தினுசில் இருக்க ஷண்மதிக்கு கண்ணை கட்டியது.

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 















Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1